Ticker

6/recent/ticker-posts

தண்ணீரில் ஊற வைத்த சோறும் அதன் மருத்துவ குணங்களும்.

இதை கூறும்போது பலரது கண்களில் தென்படுவதும், மனதில் உதிப்பதும், இதை ஏதோ ஒரு பழமையான ஒரு உணவு அல்லது ஏழை மக்களின் ஒரு உணவு, அதுவும் இல்லாவிட்டால் இதனை சாப்பிட முடியுமா ?இதனை சாப்பிட்டால் சளி வருமே தடிமன் வருமே? என்பதுபோன்ற என்ன கருதான். 

ஆனால் இந்த தண்ணீர் சோறு அல்லது ஊற வைத்த சோறு என்பது எவ்வளவு பெறுமதியானது என்பதை தெரிந்தால் எவருமே இதனை விட்டுவிட மாட்டார்கள். என்பதைத் தான் இன்று உங்கள் எல்லோருக்கும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இது ஒரு அண்ணளவாக ஒரு நிறையுணவு, இதனைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சிகளை செய்து ஒரு பூரணமாக விளக்கம் தர முற்பட்டால் ,அது ஒரு பெரிய புத்தகமாக மாறிவிடும். என்றுதான் நான் நினைக்கின்றேன். 

ஏனென்றால் இந்த தண்ணீர் சோற்றிலே அடங்கக்கூடிய கூறுகளாக காணப்படுகின்ற வற்றில் எங்களுக்கு மருத்துவ போசனை அடிப்படையில் கிடைக்கக்கூடிய வற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்தால், அவற்றை குறிப்பிட்ட அளவிலேயே தினமும் நாங்கள் எடுக்கும் போது எங்களுடைய உடலில் சேருகின்ற விட்டமின்கள், கனிப்பொருட்கள், காரணமாக எங்கள் ஆரோக்கியத்துக்கு அவை எவ்வகையான பங்களிப்பை செய்கின்றது என்பதை தான் சுருக்கமாக நான் கூறப் போகிறேன்.

இந்தத் தண்ணீர் சோற்றிலே:
பொதுவாக ஊற வைத்த சோறு, வெங்காயம் அதிலும் குறிப்பாக சின்ன வெங்காயம், எலுமிச்சை சாறு அல்லது ஊறுகாய் , 
பச்சை  மிளகாய், தேங்காய் துருவல் அல்லது தேங்காய் பால், உப்பு அல்லது உப்புக் கருவாடு. இவைதான் முக்கியமாக சேர்க்கப்படுகின்றன.

ஊறவைத்த சோற்றில் விட்டமின் B12 கிடைக்கப் பெறுகின்றது. என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது இந்த சோற்றை நாங்கள் ஊற வைக்கும்போது அதில் ஏற்படுகின்ற ஒரு பாக்டீரியா காரணமாக விட்டமின் பி 12 கிடைக்கப் பெறுகின்றது. 

இதன் பிரயோசனம் எந்த அளவுக்கு என்றால், இரத்தத்தையும் நரம்புகளையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.  

இந்த விட்டமின் பி12 காரணமாக இரத்த சோகை ஏற்படுவது அதாவது அனீமியா என்ற கண்டிஷன் ஏற்படுவது கட்டுப்படுத்துகின்றது .

இரத்தத்தை உற்பத்தி செய்ய இந்த விட்டமின் பி12 உதவுகிறது. இதன் மூலம் அதாவது இரத்தம் குறையும் போது எங்களுக்கு அனீமியா காரணமாக ஏற்படக்கூடிய பல சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றது .

மேலும் இந்த விட்டமின் பி 12 ஆனது   எங்களுடைய ஆளுமையை அதாவது தீர்மானங்களை மேற்கொள்ளும் திறன் , சிந்தனா சக்தி என்பவற்றை மேம்படுத்தவும் உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

அதே நேரத்தில் இன்று எல்லா இடங்களிலும் இந்த நீரிழிவு என்ற நோய் நிலைமை காணப்படுகின்றது . இந்த நீரிழிவு நோய் காரணமாக அதாவது குறிப்பாக இந்த மெட்fபோமின் என்ற  மருந்து பாவிக்கப்படும் போதும் இந்த விட்டமின் பி12 குறைபாடு ஏற்படுகின்றது. 

அந்த குறைபாடு பல சிக்கல்களை ஏற்படுத்தலாம். அதற்காக நாங்கள் ஒரு மல்டி விட்டமின் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். அதனை எங்களுக்கு கொடுக்காமல் கூட இந்த இயற்கையான உணவின் மூலம் இந்த விட்டமின் பி12 இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.

அடுத்ததாக பாவிக்கும் சின்னவெங்காயம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இது பலவகையான போசனை கனிமங்களை கொண்டிருக்கின்றது. இதன் மருத்துவ குணங்களாக அதாவது Loaded with Anti oxident)  என்று கூறலாம். 

அதாவது அண்டிஒக்சிடன்ட் எனும்போது எமது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய செயற்பாடாகும். வெங்காயம் கன்சரை தடுக்கக் கூடிய சில வேதிப் பொருட்களையும் கொண்டுள்ளது. இது ஓரளவு குருதியிலுள்ள சீனியின் அளவையும் கட்டுப்படுத்தும். 

எங்களுடைய வன்கூட்டுத்தொகுதியின் கண தன்மையை (Bone Density) கூட்டவும் உதவும். அதேநேரம் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் சக்தியையும் கொண்டுள்ளது. சமிபாட்டை மேம்படுத்தும்

 பச்சை சின்ன வெங்காயத்தில் காணப்படுகின்ற சல்பர் காரணமாக இருதய நோய்கள் ஏற்படுவதையும் , மாரடைப்பு ஏற்படுவதையும் ஸ்ட்ரோக் என்று சொல்லக்கூடிய பக்கவாதம் ஏற்படுவதையும் கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும் காணப்படுகின்றது .

இரத்த ஓட்டத்தை சீர்  செய்வதற்கும் இரத்தத்தில் உள்ள  கொலஸ்ட்ரோல் இரத்த கட்டிகள் போன்ற   வற்றை கரைக்கக் கூடிய சக்தியையும் வெங்காயம் கொண்டுள்ளது. இது சளி சம்பந்தப்பட்ட நிலைமைகளிலும் உதவுவதாக காணப் படுகிறது.

தண்ணீர் சோற்றுடன் பச்சை மிளகாயையும் நாங்கள் சேர்த்துதான் சாப்பிடுகின்றோம் . 

இந்த பச்சை மிளகாயில் விட்டமின் ஏ சி கே பீட்டா கரோட்டீன் என்பன காணப்படுகின்றன. கொலஸ்ட்ரோலை குறைக்க உதவுகிறது. 

எடை குறைக்க உதவுகிறது. இதன் காரணமாக எங்கள் குருதி நாளங்களில் கொழுப்பு கட்டுவதை அதெரோஸ்க்கிரோசிஸ் என்ற நிலைமையையும் குறைக்க உதவுகின்றது. சளித் தொல்லைகள் தடிமனையும் இது கட்டுப்படுத்துகின்றது .குருதியில் சீனியின் அளவையும் குறைக்கக் கூடியதாக இருக்கின்றது.

எலுமிச்சையும் நாங்கள் இங்கு பயன்படுத்துகின்றோம் .
சிலர்  எலுமிச்சம் சாறை பயன்படுத்துவதற்குப் பதிலாக ஊறுகாயை பயன்படுத்துவார்கள். 

ஆனால் இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகின்றது . ஊறுகாய் செறிவு தன்மை  உடையதாகவும் கூடுதலாக உப்புத்தன்மை கொண்டதாகவும் இருக்கின்றபடியால் , இவை பற்களில் படும் போது பற்களின் மிளிரியை பழுதடைய செய்யும்.  ஆகவே இடைக்கிடையே  சாப்பிட்டதற்கு பரவாயில்லை. 

தொடர்ச்சியாக ஊறுகாயை  இங்கு சேர்த்துக் கொள்ள வேண்டாம்.ஊறுகாயை பயன்படுத்துவதைவிட எலுமிச்சம் சாற்றை இந்த தண்ணீர் சோற்றிலே தேவையான அளவு வைத்துக் கொள்வது தான் நல்லது ,

இவ்வாறு நாங்கள் எலுமிச்சம் சாறை சேர்க்கும் போது அது கன்சர்/ புற்றுநோயை  தவிர்க்க கூடியதாக காணப்படுகின்றது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கின்றது சமிபாட்டை கூட்ட கூடியதாக இருக்கின்றது. குருதியில் உள்ள  சீனியின் அளவை குறைக்கவும் செய்கிறது. 

உடற்பருமனை குறைக்கிறது. ஆரோக்கியத்துக்கு உதவுகின்றது. மேலும் விட்டமின் சி கல்சியம் என்பன காணப்படுகின்றன. பொட்டாசியம் போலேட் என்பனவும் காணப்படுகின்றன.

இந்த தண்ணீர் ணசோற்றை சுவை யூட்டுவதற்காக தேவையான உப்பு இடப்பட வேண்டும். நாங்கள் இங்கு உப்பாக  பாவிக்கும் மேசை உப்பையோ அல்லது இதனுடன் கருவாட்டையோ சேர்த்துக் கொள்வோம். 

உப்பு இடுவது என்றால்  சாதாரண உப்பைப் பயன்படுத்துவதை விட   ஹிமாலயன் சோல்ட் / இந்துப்பை பயன்படுத்துவது என்றால் மிகவும் நல்லது. சாதாரணமாக பயன்படுத்தும் இந்த டேபல் சோல்ட்/ மேசை உப்பில் சோடியம் குளோரைட் 98 வீதம் காணப்படுகின்றது .

ஆனால் இந்துப்பை பயன்படுத்தும் போது அதில் சோடியம் குளோரைடு மட்டுமல்ல மெக்னீசியம் கால்சியம் அயன் என்பவற்றோடு இன்னும் எங்களுடைய உடம்புக்கு நன்மை பயக்கக்கூடிய கிட்டத்தட்ட 84 வகையான கணியுப்புகள் காணப்படுவதாக சில ஆரம்பஆராய்ச்சிகள் கூறுகின்றன. 

ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதனால் இதனுடன் நாங்கள் இந்துப்பு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்று நினைக்கின்றேன். அதேபோல் கருவாட்டை நாங்கள் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் தினமும் நாங்கள் இந்த தண்ணீர் சோற்றை  சாப்பிடுவது என்றால் அதிகமாக கருவாட்டின் அளவை எடுக்கக் கூடாது. 

ஏனென்றால் அங்கு கருவாடு பயன்படுத்தப்படுவதால் , அதிக சாதாரண உப்பு சேர்த்து இருப்பதனால் உப்பின் அளவு உடம்பில் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக தேங்காய் அல்லது தேங்காய் பாலை நாங்கள் இந்த தண்ணீர் சோற்றுடன் சேர்த்து கொள்கின்றோம். 

இந்த தேங்காய்ப்பால் என்பதும் ஒரு அற்புதமான ஒரு பகுதி என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் . இந்த தேங்காய் பாலில் சிறிதளவு கொழுப்பு புரதம் கார்போஹைட்ரேட் விட்டமின் சி போலேட் இரும்புச் சத்து மெக்னீசியம் கொப்பர் மாங்கனீசு செலனியம் போன்ற பகுதிகள் காணப்படுகின்றன .விட்டமின்கள் காணப்படுகின்றன .

அனேகமாக இந்த புரதம் கொழுப்பு கார்போஹைட்ரேட் விட்டமின் சி போன்றவையும் காணப்படுகின்றன.  அதாவது உடம்பிலேயே பிரஷர் அதிகரிக்காமல் இருக்க எங்களுடைய இரத்த நாளங்களில் Flaxibility என்று சொல்லக்கூடிய நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையைப் பேண இந்த மெக்னீசியம் என்பது உடம்பில் சேர வேண்டும். 

இந்த Mg சம்பந்தமாக விரிவாக கூறாவிட்டாலும் எங்களுடைய சாதாரண கடல் உப்பில் நாங்கள் மக்னீசியம் உள் எடுக்கப்படுவது தவிர்க்க படுவதனால் அதாவது சுத்திகரிக்கப்பட்ட உப்பை நாங்கள் பயன்படுத்தும் போது இயற்கை உப்பில் உள்ள மெக்னீசியம் எங்களுக்கு கிடைக்கப் பெறுவது தடை செய்யப்படுவதால் ,எங்களுடைய குருதி அமுக்கத்தை அதிகரிக்க mg குறைபாடு ஒரு பங்கு வகிப்பதை நாங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும். 

ஆகவே இங்கே எங்களுக்கு கிடைக்கின்ற மெக்னீசியமும் பிரயோசனமானது .அடுத்ததாக  சொல்லக்கூடியது மங்கனீஸ்.

இது எங்களுக்கு எல்லா உணவுகளிலும் சர்வசாதாரணமாக கிடைக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கின்றது. 

இந்த மங்கனீஸ் எங்களுடைய மூளை நரம்புகளின் செயல்பாட்டிற்கு பாலியல் ஓமோன்கள் செயற்பாட்டுக்கு அடுத்தது கொழுப்பு கார்போஹைட்ரேட் என்பவன சமிபாடு அடைவதற்கும்,  கல்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கும், சீனியை  கட்டுப்படுத்துவதற்கும், இந்த மங்கனீசு உதவுகின்றது.

செலனியம் என்று சொல்லக்கூடிய கனியுப்பு சமிபாட்டு செயல்பாடுகளுக்கும் தைரொயிட் செயற்பாட்டுக்கும் உதவுகின்றது.  வயதுடன் தொடர்புடைய வயோதிகத் தோற்றத்தை  உருவாக்குவதை கட்டுப்படுத்துவதற்கும் மனச்சோர்வு ஏற்படுவதை தடுப்பதற்கும் உதவுகின்றது. கிருமித் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் உதவுகின்றது.

அடுத்ததாக கொப்பர். இது உடம்பில் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை கூட்டுகின்றது. வன்கூட்டுத்தொகுதி சக்தி பெறச் செய்கின்றது குருதி நாளங்கள் நரம்புகள் நோயெதிர்ப்பு மண்டலம் என்பவற்றில் சீரிய செயல்பாட்டுக்கு உதவுகிறது. அதேபோல் ஓஸ்டியோபொரோசிஸ் ஏற்பட கூடிய நிலைமையை கட்டுப்படுத்தி இருதய நோய்கள் ஏற்படும் நிலைமையையும் கட்டுப்படுத்துகின்றது.

இத்துணை மகிமை அடங்கப் பெற்ற ஒரு உணவை நீங்கள் தவற விடுவது என்றால் எவ்வளவு ஒரு நட்டமானதாக இருக்கும். 

இந்த தண்ணீர் சோற்றிலே விசேடமாக கஸ்டிரைடிஸ் போன்ற நிலைமைகள் உள்ளவர்களுக்கு மிகவும்  உகந்த ஒரு உணவாகும். இது உடம்பில் உள்ள உஷ்ணத்தை கட்டுப்படுத்துகின்றது . உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கின்றது. 

இதனால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பல உடல் உபாதைகளுக்கு இது ஒரு மருந்தாகவும் அமைகிறது. 

நாங்கள் கூடிய செலவுகளைச் செய்து காலை உணவுக்காக பேக்கரியில் வாங்கி வரப்படும் உணவுகளை உண்ணப் பழகி உள்ளோம். இந்த உணவுகளில் எங்களுக்கு  கெடுதிகளை தவிர நல்லது இல்லை. ஏனென்றால் அந்த உணவுகள் அளவுக்கு அதிகமான வெப்பநிலையில் தயார் செய்யப்படும் போது , அதில் உள்ள விட்டமின்கள் உணவின் நொதியங்கள் என்பன வெப்பநிலையில் சிதைவடைந்து வெறும் தோற்றத்தில் ஒரு உணவாக கிடைப்பதே தவிர அவற்றில் ஆரோக்கியத்திற்கானவைகல் மிக மிக குறைவாகவே காணப்படுகின்றன. 

இதை தவிர்த்து அதிலே அடங்கக்கூடிய இரசாயனக் கூறுகள் எங்களுடைய ஆரோக்கியத்தை கெடுத்து நோய்களை தரக் கூடியதாக இருக்கின்றன. ஆகவே இத்துணை வகைக்கும் பிரயோசனமான இந்த தண்ணீர் சோற்றை தயார் செய்து காலையில் ஒரு ஆரோக்கியமான உணவை உண்பதன் மூலம் பல நோய்களுக்கு மருந்தாகவும், எங்களுடைய பொருளாதார அடிப்படையில் செலவில்லாமல் காலை சாப்பாட்டை செய்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பாகவும், காண வேண்டும். 

ஆகவே தப்பான அல்லது குறைவான கணிப்புகள் செய்து இந்த உணவை தவிர்க்காமல் இந்த உணவை உங்களுடைய வாழ்க்கையிலே பின்பற்ற தயாராகுங்கள். இதனை சாப்பிடும் போது சளி ஏற்படும் என்ற பயத்தை விட்டுவிடுங்கள். 

அதாவது சளி சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் அதிக அளவு சாப்பிடாமல்,  ஒரு கப் அளவாவது இந்த உணவை சேர்த்துக் கொள்வது புத்திசாலித்தனமானது. காலப்போக்கில் பழகப்பழக அது உடம்புக்கு ஒத்துப்போகும். அப்போது உங்களுக்கு விரும்பிய அளவை சாப்பிடக் கூடிய நிலை உருவாகும்.

Post a Comment

0 Comments