Ticker

6/recent/ticker-posts

Asia Cup 2023: நாகினி டான்ஸ் ஆட்டம் ஆரம்பம்.. சாதித்த ஷகிப் படை.. போராடி தோற்ற ஆஃப்கானிஸ்தான்!


லாகூர்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
 
ஆசியக் கோப்பை போட்டியின் 4வது லீக் போட்டியில் வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இலங்கை அணியுடனான போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்ததால், இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்தது. மெஹதி ஹசன் மிராஸ் மற்றும் ஷாண்டோ இருவரும் சதம் விளாசி அசத்தினர். இதன் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 335 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.

அதிரடி வீரர் குர்பாஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ஆஃப்கானிஸ்தான் அணி அடக்கு வாசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதன்பின் ரஹ்மத் ஷா - ஜத்ரான் இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தனர். அதில் ரஹ்மத் ஷா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேப்டன் ஷாகிதி அதிரடியாக பவுண்டரிகளை விளாசினார். சிறப்பாக ஆடிய ஜத்ரான் 51 பந்துகளில் அரைசதம் அடிக்க, பின்னர் அதிரடிக்கு மாறினார். ஆனால் ஹசன் மஹ்முத் பந்துவீச்சில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இன்னொரு பக்கம் சிறப்பாக ஆடிய அரைசதம் விளாசிய கேப்டன் ஷாகிதியும் 51 ரன்களில் வெளியேறினார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 193 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த இடத்தில் சரியத் தொடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியால், மீண்டும் ஆட்டத்திற்குள் வர முடியவே இல்லை. ஆடுகளத்தை உணர்ந்து வங்கதேச பவுலர்கள் பவுன்சர்களை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை தடுத்தனர். இதனால் அதிரடியாக ஆட முயற்சித்து ஆஃப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கொடுத்தனர். கீழ் வரிசையில் அதிகபட்சமாக ரஷித் கான் 15 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். இறுதியாக ஆஃப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. வங்கதேச அணி தரப்பில் டஸ்கின் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், சொரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் வங்கதேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

SOURCE:mykhel


 



Post a Comment

0 Comments