வத்தேகம நகரின் மத்தியில் நிர்மாணிக்கப் பட்டிருக்கும் மஸ்ஜித் முஹியித்தீனின் வரலாறு 1900களுக்கும் முந்தியதாகப் பேசப்படுவதுண்டு. பல்வேறு சந்தர்ப்பங்களில் புனர்நிருமாணம் செய்யப்பட்ட மஸ்ஜித் கடைசியாக 1990களைத் தொடர்ந்து மூன்று மாடிகளாக நிர்மாணிக்கப்பட்டு, கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. ஆரம்ப முதல் மஸ்ஜிதின் பராமரிப்புப் பணிகளில் பெருமளவு பங்களிப்புச் செய்தவர் பிரபல வா;த்தகச் செல்வர் நாகூர் பிச்சை முதலாளியை இன்றும் மக்கள் நன்றிடன் நினைவுகூர்ந்து வருகின்றனர். அவருக்குச் சொந்தமாக விளங்கிய வர்த்தக நிறுவனம் ஷெய்கு அலியார் அன் ஸன்ஸ் என அழைக்கப்பட்டது. மஸ்ஜித் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இந்திய மார்க்க வேவையாளர்களே அங்கு சமயப்பணி புரிந்து வந்துள்ளனர். அவா;களுள் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஆன்மீகப் பெரியார் அஷ்ஷெய்க் முஹம்மது ஷஹீத் வலிய்யுல்லாஹ் (மறைவு-1955) அவர்கள் குறிப்பிடப்பட வேண்டியவராவார். அன்னார் பிரதேசத்தில் நீண்ட காலம் சமயப்பணி புரிந்தமார்க்க அறிஞர்களுள் ஒருவராக நினைவு படுத்தப்பட்டு வருகின்றார்கள். அவரின் ஜனாஸா மஸ்ஜித் வளாகத்திற்குள் அடக்கஞ் செய்யப்பட்டடிருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மஸ்ஜித் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வேளை அன்னாரின் ‘மக்பரா’ அடையாளம் காணமுடியாதவாறு மஸ்ஜிதுடன் இணைக்கப்பட்டிருப் பதைக் காணலாம். அவர்களது மறைவைத் தொடர்ந்து கும்புக்கந்துறையைச் சேர்ந்த மௌலவி அப்துல் வஹ்ஹாப் ஆலிம் ஸாஹிப் அவர்கள் பல தசாப்த காலமாக மஸ்ஜிதில் பணிபுரிந்து பெருமை படைத்திருக்கிப்பதோடு, மஸ்ஜிதின் நிருவாகசபைத் தலைவராக கனவான் அபுல் ஹஸன் முஹம்மத் நவாஸ் பணிபுரிந்திருக்கின்றார்.
வத்தேகமை முஸ்லிம்களது ஜனாஸாக்கள் ஆரம்பத்திலிருந்தே வத்தேகமை நகர பொது மையவாடியிலேயே அடக்கஞ் செய்யப்பட்டு வந்துள்ளன. நீண்ட காலமாக குடியிருப்பு முஸ்லிம்களுக்கென தனியான மையவாடி இல்லாதிருந்த குறை, வெலம்பொடையைச் சேர்ந்த முன்னாள் மத்தியமாகாணசபை அங்கத்தவர் வர்த்தகச் செல்வர் முஹம்மது தாஹா அப்துல் முத்தலிப் ஹாஜியார் அவர்களால் வக்ப் செய்யப்பட்ட 1.75 ஏக்கர் காணி மூலம் நிறைவடைந்துள்ளமை பாராட்டத்தக்கது.
நகரின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள உடுவாவன வீட்டுத் திட்டத்திலும் சமீபத்தில் பல முஸ்லிம்கள் குடியேறியுள்ளன. இவ்வீடமைப்புத் திட்டத்தில் முஸ்லிம்களது பங்களிப்பை உறுதி செய்வதற்காக பெருமளவு அக்கறை செலுத்தியவர் வத்தேகமை நகரசபையின் உப-தலைவராக விளங்கிய கனவான் S.H.L. ஜெய்னுல் ஆப்தீன் அவர்களாவர். அவா; வழியில் குடியிருப்பைச் சேர்ந்த பல சமூக சேவையாளர்களும் நகர சபையூடாக முஸ்லிம்களுக்குப் பெருமளவு பணிபுரிந்துள்ளதை மக்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகின்றனர். அவர்களுள், ஜனாப் N.U. ஆதம் ஸாஹிப், டாக்டர் முஹம்மத்ஸித்துக், ஜனாப் ஸலாஹுத்தீன், ஜனாப் S. M. M. ழஹீர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.
ஆரம்பத்திலிருந்து நகரைச் சோ;ந்த பல மாணவர்கள் நகர மத்தியில் அமைந்திருந்த இருமொழிப் பாடசாலைக்கு சென்றதாக அறிய முடிகின்றது. தற்போது அவர்கள் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் பாக்கிய வித்தியாலயத்திலும், மடவலை தேசியப் பாடசாலையிலும் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.


0 Comments