Ticker

6/recent/ticker-posts

ஒரே வருடத்தில் 2 ஆயிரம் ரன்களை தாண்டிய முதல் சர்வதேச வீரர் முகமது ரிஸ்வான்

பாகிஸ்தான்- வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றிபெற்ற நிலையில், நேற்று 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் 208 என்ற இமாலய இலக்கை 18.5 ஓவரில் சேஸிங் செய்து அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்தது.

பாகிஸ்தான் வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் அதிரடி முக்கிய காரணம். அவர் 45 பந்தில் 87 ரன்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும். 87 ரன்கள் விளாசியதன் மூலம் இந்த வருடம் டி20-யில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

ரிஸ்வான் டி20-யில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டி20 உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்த ரிஸ்வானின் பேட்டிங் முக்கிய காரணமாக இருந்தது. மேலும், தொடர்ந்து சிறப்பான விளையாடி வரும் அவர், ஒரே வருடத்தில் 2 ஆயிரம் ரன்களை தாண்டிய முதல் சர்வதேச வீரர் என்ற அசுர சாதனையை பதிவு செய்துள்ளார்.

Post a Comment

0 Comments