அதுவும் இது நான்கு மாடிகளில் கட்டப்பட்ட மாமர வீடு. உதய்பூரில் கட்டப்பட்டிருக்கும் இந்த சுற்றுச்சூழல் வீடு உலகப் பிரபலமானது.
குல் பிரதீப் சிங் என்ற ஐஐடி பொறியாளர், 2000-ம் ஆண்டு நான்கு மாடி வீட்டைக் கட்டினார்.
80 வருடங்கள் பழமையான மாமரத்தை வெட்டாமல் அதன் மேல்தான் இந்த வீட்டைக் கட்டியுள்ளனர்.
இந்த வீடு 'ட்ரீ ஹவுஸ்' என்றும் அழைக்கப்படுகிறது. காட்டில் வசிப்பவர்கள் கட்டுவது போல் மரத்தால் ஆன வீடாக இருக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது ஒரு 'ஃபுல் ஃபர்னிஷ்டு' வீடு என்று சொல்லலாம்.
இதில் அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த வீட்டைக் கட்டுவதற்காக, சுற்றுச்சூழல் ஆர்வலர் குல் பிரதீப் சிங், மரத்தின் ஒரு கிளையைக் கூட வெட்டவில்லை.
மரக்கிளைகளுக்கு ஏற்ப தன் கனவு வீட்டை வடிவமைத்திருக்கிறார். இது குறித்த வீடியோ இணையத்தில் உலாவி வருகின்றது.
0 Comments