
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான எல்லை மோதல்களை தணிப்பதில் தாங்கள் முக்கிய பங்காற்றியதாக அமெரிக்காவை தொடர்ந்து சீனாவும் தற்போது உரிமை கோரியுள்ளது.
பெய்ஜிங்கில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ, கடந்த ஓராண்டில் உலகளவில் நிலவிய பல்வேறு மோதல்களை தீர்க்க சீனா மத்தியஸ்தம் செய்ததாக குறிப்பிட்டார். குறிப்பாக, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ராணுவ பதட்டத்தை தணிக்க தங்களது நாடு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கியதாக அவர் பட்டியலிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியபோது, வர்த்தக பேச்சுவார்த்தைகள் மூலம் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே உரிமை கோரியிருந்தார். இந்த நிலையில் தற்போது சீனாவும் போர் நிறுத்தத்திற்கு உரிமை கோரியுள்ளது.
ஆனால் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீடும் இன்றி இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே அமைதி திரும்பியதாக இந்தியா கூறுகிறது.
webdunia

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments