உங்கள் ஐபோனை நீங்களே சரிசெய்யலாம் - ஆப்பிள் அசத்தல் திட்டம்

உங்கள் ஐபோனை நீங்களே சரிசெய்யலாம் - ஆப்பிள் அசத்தல் திட்டம்


ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக செல்ப் சர்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் தங்களின் ஆப்பிள் சாதனங்களை சர்வீஸ் செண்டர் செல்லாமல் தாங்களாகவே சரிசெய்து கொள்ளலாம்.

இந்த திட்டம் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்கள், டூல்கள், மேனுவல் உள்ளிட்டவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. முதற்கட்டமாக இந்த திட்டம் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களுக்கு செயல்படுத்தப்பட இருக்கிறது. 

முதலில் பயனர்களுக்கு ரிப்பேர் மேனுவல் வழங்கப்படும். இதனை வாசித்து சாதனத்தை சரி செய்யும் நம்பிக்கை பயனருக்கு ஏற்படும் பட்சத்தில், அவர்கள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்களை வாங்க முன்பதிவு செய்யலாம். சரி செய்த பின் பாழாகி போன உதிரிபாகங்களை மறுசுழற்சி செய்ய பயனர்கள் ஆப்பிளிடம் திரும்ப வழங்கலாம்.

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களின் டிஸ்ப்ளே, பேட்டரி மற்றும் கேமரா சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய வைக்க ஆப்பிள் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 200 தனித்தனி உதிரிபாகங்களை வாங்கிட முடியும். ஐபோனை தொடர்ந்து எம்1 மேக் மாடல்களை சரிசெய்யும் வசதியையும் ஆப்பிள் வழங்க இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post