ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை தக்க வைத்துக்கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைந்தது. அதன்படி சிஎஸ்கே தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
15வது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில்,அகமதாபாத், லக்னோ ஆகிய இரண்டு புது அணிகள் இடம்பெறவுள்ளது. எனவே, வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக 8 அணிகளும் தலா 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என ஐபிஎல் ஆட்சி மன்ற குழு அனுமதி வழங்கியது.
இந்த 4 வீரர்களில் அதிகபட்சம் 3 பேர் இந்தியர்களாக இருக்கலாம். வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை 2-ஐ தாண்டக்கூடாது. வீரர்களை தக்கவைக்கும் போது அவர்களின் ஊதியமாக முறையே ரூ. 16 கோடி, ரூ.12 கோடி, ரூ.8 கோடி, ரூ.6 கோடி வீதம் என்று மொத்தம் ரூ.42 கோடியை ஒதுக்க வேண்டும் அணி நிர்வாகம் ஒதுக்க வேண்டும் .தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் வழங்குவதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.
அதன்படி, சென்னை அணி தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கேப்டன் மகேந்திர சிங் டோனி, ரவிந்திர ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை சென்னை அணி தக்கவைத்துள்ளது. இதற்காக ரவிந்திர ஜடேஜாவுக்கு ரூ.16 கோடியும், டோனிக்கு ரூ.12 கோடியும், மொயின் அலிக்கு ரூ.8 கோடியும், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.6 கோடியும் சிஎஸ்கே நிர்வாகம் செலவிட்டுள்ளது.

0 Comments