Ticker

6/recent/ticker-posts

நாங்கள் பார்வையை இழந்துவிட்டோம்- பாகிஸ்தானின் தலைசிறந்த கண் வைத்தியர் நியாஜ் புரோகி கவலை

இலங்கை ,பாகிஸ்தானுக்கு 35000 கண்களை தானம் செய்துள்ளது. ஆனால் நாங்கள் பார்வையை இழந்துவிட்டோம் என பாகிஸ்தானின் தலைசிறந்த கண் வைத்தியர் நியாஜ் புரோகி கவலை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தனது வருத்தத்தினை பகிர்ந்துக்கொள்ளும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானில் உள்ள இலங்கை கண்தான அமைப்பின் முக்கிய உறுப்பினரான அவர் அந்த அமைப்பிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை பிரஜை கும்பலொன்றினால் படுகொலை செய்யப்பட்ட தருணம் முதல் நான் நாட்டின் ஏனைய பலரை போல துயரத்தில் சிக்குண்டுள்ளேன்.அவமானம் தாங்காமல் வெட்கி தலைகுனிகின்றோம்.

இலங்கை 83200 விழி வெண்படலங்களை உலகின் பல நாடுகளிற்கு தானம் செய்துள்ளது. இவற்றில் பெருமளவானவற்றை பாக்கிஸ்தானே பெற்றுக்கொண்டுள்ளது.40 வீதத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.

1967 முதல் கண்தான சங்கம் பாக்கிஸ்தானிற்கு 35000 விழிவெண்படலங்களை தானம் செய்துள்ளது. இலங்கை எங்களிற்கு கண்களை தானம் செய்தது நாங்கள் பார்வையை இழந்துவிட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments