மாணவர்களிடையேயும் மக்களிடையேயும் பொது அறிவு, சமகால நிகழ்வுகள், இலகு ஓவியக்கலை போன்ற இருபத்தைதிற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ள கலாபூசணம் எஸ். எல். எம். மஹ்ரூப் அவர்கள் 30.12.2021 அன்று காலமானார்.
கம்பளை சாஹிராக் கல்லுரியில் கற்றுத் தேர்ந்த இவர், பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியுமாவார்.
நூல் வெளியிடும் முயற்சியில் அயராது உழைத்து வந்த ஒருவராகத் திகழ்ந்துள்ள இவர், பொது அறிவை மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் வளர்த்தல், சமகால நிகழ்வுகளை ஒன்று திரட்டி மக்களிடம் கொண்டு சேர்த்தல், ஓவியக்கலையை மக்களும் மாணவர்களும் இலகுவாகக் கற்கும் முறைகளை அறிமுகம் செய்தல் போன்ற அரும்பணிகளைச் செய்தவராவார்.
பொது அறிவு சம்பந்தமாக 17 நூல்களும் சமகால நிகழ்வுகள் சம்பந்தமாக 8 நூல்களையும் வெளியிட்டுள்ள மர்ஹூம் மஹ்ரூப் அவர்கள், உடுநுவரை – தவுளகலையை வாழ்விடமாகக் கொண்டவராவார்.
ஆரம்பகால முதல் ஆசிரியராகப் பணி செய்து வந்துள்ள இவர், சிலகாலம் தெல்லங்க அஸ்ஸிராஜ் வித்தியாலய அதிபராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.
நீண்ட காலமாக “உடுவைப் பரந்தாமன்” என்ற புனைப் பெயரில் இவர் பத்திரிகைகளில் தமது ஆக்கங்களை எழுதி வந்துள்ளார்.
“வேட்டை” - இவரது மறுவுலக வாழ்வு சிறப்புற பிரார்த்திப்பதோடு, குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றது!
Tags:
அஞ்சலி