ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களை உருவாக்கிய வரும் அந்நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் இந்தப் புத்தாண்டில் புதிய சாதனை ஒன்றினைப் படைத்துள்ளார்.
அதன்படி, இந்தாண்டு துவக்கத்தில் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது. எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து வரும் டெஸ்லா நிறுவனத்திடம் இருந்து ஒரு லட்சம் கார்களை வாங்குவதாக ஹெர்ட்ஸ் க்ளோபல் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து., இந்நிறுவனத்தின் மதிப்பு தாறுமாறாக ஏறியிருக்கிறது.
மேலும், இந்த விற்பனை மூலமாக 36.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 2,51,25,39,900 ரூபாய்) எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது ஹெர்ட்ஸ் நிறுவனம்.
இதனால் தான் எலான் மஸ்கின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் இவர் இந்த புதிய டீல் மூலமாக தனது வளத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, கடந்த ஆறுமாத காலமாக எலெக்ட்ரிக் கார் டெலிவரியில் தொடர்ந்து உலகளவில் முதலிடம் வகிக்கும் டெஸ்லா, ஹெர்ட்ஸ் உடனான வியாபாரம் நடைபெற்ற நாளில் மட்டும் அந்நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 13.5 சதவீதம் ஏற்றம் கண்டிருக்கிறது.
0 Comments