மார்பகப் புற்று நோய்க்கு சிகிச்சை என்ன?

மார்பகப் புற்று நோய்க்கு சிகிச்சை என்ன?

எனது மனைவிக்கு மார்பகத்தில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக வலது மார்பகம் அகற்றப்பட்டுள்ளது. பல மருந்துகள் பாவித்துக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் பசியின்மை, உடல் மெலிவு, குமட்டல், களைப்பு போன்றவைகள் தொடர்ந்தும் உள்ளன. இதற்குரிய ஆலோச னைகளையும் யூனானி வைத்திய முறையில் ஏதும் செய்யலாமா எனவும் தயவு செய்து அறியத்தரவும்.
அப்துல், களுத்துறை
-
பதில் : எமது உடம்பில் உள்ள கலங் களின் சாதாரண வளர்ச்சி பல்வேறு கார ணிகளில் தங்கியுள்ளன. இதற்கு மாறாக உடம்பில் உள்ள கலங்களின் வளர்ச்சி பல்வேறுபட்ட தாக்கங்களினால் அளவுக்கு அதிகமாக ஏற்படுவதனால் உடம்பில் கட்டிகள் உண்டாகின்றன. கட்டிகள் இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதோடு அதில் புற் றுநோய் என்ற வகையே உடம்புக்கு மீள முடியாத பாதிப்புக்களை உருவாக்குகின் றன. புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய கலங்கள் மிகமிக விரைவாக வளர்ச்சி யடைவதோடு உடம்பின் ஏனைய பகு திகளுக்கும் பரவக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளன.

புற்றுநோய் உலகின் சகல நாடுக ளிலும் பொதுவாகக் காணக்கூடிய ஒரு நோயாக இருப்பதோடு 6 மில்லிய னுக்கும் அதிகமானோர் வருடந்தோறும் இந்நோய்க்குப் பலியாகின்றார்கள்.
புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகின்றது. என்பதைப்பற்றிய சரியான தகவல் இல்லாவிட்டாலும், இதற்கான பல கார ணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

பரம்பரை அலகு, சுற்றாடலின் தாக்கம், புகைத்தல், செயற்கைப் பொருட்களடங்கிய உணவு மற்றும் மென்பானங்கள், எமது அன்றாட வாழ்க் கையில் ஏற்பட்ட மாற்றங்கள், நாட்பட்ட சில நோய்கள், சில மருந்து வகைகள் போன்றவைகளைக் குறிப்பிடலாம். 

உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் நாம் எமது உணவு வகைகளைச் சுவையூட்டவும், கவர்ச் சியாக்கவும், நறுமணத்தை ஏற்ப டுத்துவதற்காகவும் பல இரசாயனப் பொருட்களடங்கியவைகளை உணவில் சேர்க்கிறோம். இந்த இரசாயனப் பொருட்கள் எமக்கு குறுகிய நேர மனத் திருப்தியைத் தருமே தவிர உடல் நலத்திற்குத் தீங்கையே விளைவிக்கும். அத்துடன் அதிக கொழுப்புச் சத்துக் கூடிய உணவு வகைகள் அதிகமாகத் தொடர்ந்து சாப்பிடுவதும் புற்றுநோயை உண்டாக்கும்.

சுற்றாடல் அல்லது வெளிக்காரணங் களாகக் காற்று மற்றும் நீர் மாசடைதல், விவசாயப் பயிர்களினால் அதிக விளைச்சலைப் பெறுவதற்காக வேண்டி அளவுக்கு அதிகமாக செயற்கை உரம் மற்றும் கிருமிநாசினிகளைப் பாவித்தல் - போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி புற் றுநோய் உடம்பின் எந்த உறுப்பையும் தாக்கலாம். அதில் ஒரு முக்கியமான உறுப்புத்தான் பெண்களின் மார்பகம், நான் மேலே குறிப்பிட்டுள்ள காரணி களும் மேலாக சில ஹோர்மோன்களின் தாக்கமும் அதிக உடற்பருமனும், தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதும் மார்பகப்புற்று நோயை ஏற்படுத்தக் கூடியன. 

உலகளாவிய ரீதியில் வருடாந்தம் ஏறக்குறைய 6 இலட்சம் பெண்கள் மார் பகப் புற்றுநோயினால் மரணமடையும் அதேவேளை 9 இலட்சம் பெண்கள் மார் மகப்புற்று நோய்க்குள்ளாகியிருப்பது கண்டறியப்படுகின்றன. 

அண்மைய கணிப்பு ஒன்றின்படிஇளம்வயதில் குடும்பக் கட்டுப்பாட்டு வில்லைகளைப் பாவிக்க ஆரம்பிப்பதும், அதிக உடற்பருமன் உடையோரையும் மார்பகப்புற்று நோய் தாக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் எனவும் கண்டறியப் பட்டுள்ளன. மார்பகப்புற்று நோயின் ஆரம்ப கட்டத்தில் அநேகமானோருக்கு வெளிப்படையாக நோய் அறிகுறிகள் காணப்படமாட்டாது. நோயின் தீவிரத் தன்மை கூடும் போது மார்பகத்தில் கட்டி ஏற்படல், குணமடையாத புண் அல்லது மார்பகத்திலிருந்து இரத்தம் கசிதல் போன்ற குணங்குறிகள் இருக்கும்.

எனவே இந்நோய் வராமல் தடுக்க வேண்டுமாயின் நான் மேற்குறிப் பிட்டுள்ள புற்றுநோய் ஏற்படுவதற் கான காரணிகளைத் தவிர்த்து நடக்க வேண்டும். அத்துடன் சிறுவயதிலி ருந்தே தொடர்ந்து அதிக உடற்பரும் னாக இருக்கும் பெண்பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் இந்நோய் வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப் பதால் ஆரம்பத்திலிருந்தே உடற்ப ருமனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத் திருக்க வேண்டும். அத்துடன் 35 வயதைத் தாண்டிய பெண்கள் ஆகக் குறைந்தது வருடத்திற்கு ஒரு முறையா வது வைத்தியப் பரிசோதனை செய்தல்குறைந்தது வருடத்திற்கு ஒரு முறையா வது வைத்தியப் பரிசோதனை செய்தல் வேண்டும். அத்துடன் மார்பகத்தைத் தானே எவ்வாறு பரிசோதித்துக் கொள் வது என்பதையும் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொள்ளவும். புற்றுநோயின் போது உடல் மெலிவதற்கு புற்று நோயின் தாக்கம், சிகிச்சைகளின் பக்க விளைவு, பசியின்மை காரணமாக உடம் புக்குத் தேவையான சத்துப் பொருட்கள் கிடைக்காமை போன்றவைகள் காரணங் களாக இருக்கின்றன.

ஆயுர்வேத, யுனானி வைத்திய சிகிச் சைகளில் ஊட்டச் சத்துமிக்க நோய் எதிர்ப்புத் தன்மையைக் கூட்டக்கூடிய பல மருத்துவக் குணமுள்ள உண வுகளும், போசணைக் குணமுள்ள இயற்கை மருந்துகளும் கொடுக்கப்ப டுகின்றன. இவைகளை நவீன மருந்து களுடன் சேர்த்துப் பாவிக்கும் போது பாரிய மாற்றத்தைக் காணக்கூடியதாக உள்ளன.
allso read this

Post a Comment

Previous Post Next Post