ஆதரவுக்காக ஆவேசமாக அலையும் பிரதமர் ரனில் 52 நாள் அரசுக்கு பின் 7 நாள் அரசாங்கமா ?

ஆதரவுக்காக ஆவேசமாக அலையும் பிரதமர் ரனில் 52 நாள் அரசுக்கு பின் 7 நாள் அரசாங்கமா ?


ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமராக நியமிப்பதை ஜனாதிபதி அவர்கள் முடிவு செய்த பின்பு, ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில் தமக்கு ஆதரவு தேடும் பணியில் ஆவேசமாக இறங்கியுள்ளார்.

ரனில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட முன் இரு முன்னை நாள் முஸ்லிம் அமைச்சர்களை தொடர்புகொண்டு, ஜனாதிபதி தம்மை பிரதமராக நியமிக்க உள்ளதாகவும் தமக்கு ஆதரவு  தரும்படியும் கோறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்கள் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களை தொடர்புகொண்டு பாராளுமன்றத்தில் தமக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். 

இது சம்பந்தமாக பல முஸ்லிம்  முக்கியஸ்தர்களையும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த வாரம் பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களை நியமிக்க முன்மொழியப்பட்ட போது,
அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் போர்க்கொடி தூக்கி, வெளிப்படையாக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களுக்கு வாக்களிக்கும்படி வேண்டிக் கொண்டதை இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

நாட்டில் தற்போது நிலவிவரும்  சமூகங்க ளுக்கிடையிலான நல்லுறவின்  நிமித்தம் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்கள் நியமிக்கப்படல் வேண்டும் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர் பார்த்திருந்த போதிலும், அவற்றிற்கு ஒரு தடைக்கல்லாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் காணப்பட்டார்.

இவ்விடயத்தை பகிரங்கமாக பாராளுமன்றத்தில் சுசில் பிரேமஜயந்த் அவர்கள் வெளிப்படையாக உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் தனது உரையில் " தாம் அதனையே எதிர்பார்ததாகவும் அதுவே காலிமுகத்திடலில் இலைஞர்களால் குரல் எழுப்பப்படுகிறது" என குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முதலில் ஜனாதிபதி அவர்களால் பிரதமர் பதவிக்கு யார் என்பதை பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில்,முன்னைநாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து,டலஸ் அளகப்பெரும அவர்களும்,நிமல் சிரிபால சிறிபால டி சில்வா அவர்களின் பேரையும் தாம் முன்வைப்பதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி தம் சுய விருப்பத்தின் அடிப்படையில் ரனில் விக்கிரமசிங்க அவர்களை
 பிரதமராக நியமித்தார்.

இதனை தொடர்ந்து தமது ஆதரவை ரனில் விக்ரமசிங்க அவர்களுக்கு வழங்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்தது.

எனவே தற்போது 113 பெரும்பான்மை ஆதரவை தேட முடியாத நிலையில், இலங்கையில் 52 நாள் அரசாட்சிக்கு பின்பு மீண்டும் 7 நாள் அரசாங்கம் ஒன்று அமையுமா ?

வேட்டை 
E-mail; vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post