Ticker

6/recent/ticker-posts

Ad Code



வீரபாண்டியக் கட்டபொம்மன்


துடிக்கும்
உன் மீசைக்கு
என் தமிழ் 
வணக்கங்கள்.....!!

அடிமைதனத்தை
அடிதளமாக்க நினைத்த
ஆங்கிலேய கயவர் நெஞ்சில்
வாள் வெட்டு நடத்திய
மாவீரனே......!!

உன் வசனங்களில் கூட
நீ நாட்டை விட்டுக் கொடுக்கவில்லை
வான் சிறப்பும்
மண் செழிப்பும்
உரக்க உரைத்த
ஊமைத்துரையின்
சகோதரனே

நீ சவால்களின்
நாயகன்
சூரியனை விழுங்கும்
பாம்பின் கதையை
நிஜத்தில் பொய்யாக்கிய
பாளையக்காரன் நீ.....!!

வானுக்கும் மண்ணுக்கும்
இடையேயான தூரத்தை
உன் வீரத்தால்
நிரப்பிக்கொள்கிறது
காற்று....!!

சுவாசிக்கும்
யாவரிலும்
சுலபமாக கலந்துவிடுகிறது
உயிர் வரை
உன் வீரம்....!!

நிலை மாறும் மண்ணில்
நிழல் மாறாதென்பதை
உன் வழி அறிந்தோம்
வரி வசூல்
கேட்போரை
சூரையாடிய சூரியச் சுடரே

உன் படையின்
எச்சரிக்கை விளக்குகள்
உன் கண்கள்
உன் பரபரப்பு
மீசையின் துடிதுடிப்பில்....!!

எத்தனை 
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை
தகர்க்கப்பட்டாலும்
தமிழனின் உள்ளத்தில்
கட்டப்பட்ட உம்மை அழிக்க
பீரங்கிகள் தோற்கும்....!!

நீ ஊருக்காய் 
உலகுக்காய் வாழ்ந்தவன்
உயிருக்காய் பயந்தவன் இல்லை

தூக்கிலிடப்பட்டபோதும்
இறப்பிற்கு முத்தம் தந்த
உன்னில்
எத்தனை தைரியங்கள்....!!

வரும் நூற்றாண்டுகள் கூட
உம்மை
நினைவு கொள்ளும்
தைரியமும்
வீரமும்
உமக்கு பாடல்கள் 
பலநூறு கவி பாடும்....!!

கடைசியில் ஒன்று
ஒவ்வொரு தமிழனின்
மரபணுவிலும்
நிறைந்து கிடக்கிறது
வீரமும் இறுமாப்பும்....

போர் கொடி ஏந்தும் முன்
கூர் வாள் பட்டை தீட்டு
குருதிக்கறையை
சட்டையாக்கு.....!!




Post a Comment

0 Comments