
இந்த Npp அரசாங்கத்தின் வெற்றி என்பது அனுரா என்றொரு தனிமனிதனின் வெற்றி என்பதை யாரும் மறுக்க முடியாது.
அவரது துணிவு நேர்மை, நற்குணம், சகல இனங்களினதும் அரவணைப்பு போன்றவற்றின் பிரதிபலனாகவே இந்த அரசாங்கம் அமைந்தது.
சுனாமிப் பேரலையாபேரலையாக வந்த அரசாங்கத்தின் வெற்றியில், பேரளையில் அடிபட்டு வந்த சிலரும் பாராளுமன்றத்தில்னுல் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அடிப்படையில் சில தவறானவர்களும் உள்வாங்கப்பட்டார்கள்.
இது போன்றவர்களின் செயல்பாடுகளே இந்த அரசாங்கத்தின் பெயரை கெடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பாராளுமன்றத்திற்குள் நுழைந்த ஒருவரின் செயல்பாடுகள் சம்பந்தமாக
பல விமர்சனங்கள் ஏற்கனவே இருந்துள்ளன.
கிழக்கு மாகாண சாய்ந்தமருதூர் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் தெரிவிக்க நடைபெற இருந்த வாக்களிப்பை மீறி தனக்குத் தேவையானவர்களையும் தனது குடும்பத்தினரையும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பொறுப்புகளுக்கு பேயரிட்டு தனது அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி நம்பிக்கை பொறுப்பாளர் சபையை நியமித்தார்.
இது நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வரை சென்று இறுதியில் அவர் நியமித்த நம்பிக்கை பொறுப்பு சபை செல்லுபடி அற்றது என முடிவு செய்யப்படவே, இரு தரப்பினரும் சமாதானமாகச் சென்று கருத்தொருமித்த அடிப்படையில் நம்பிக்கை சபையை அமைக்க விருப்பம் தெரிவித்து வழக்கு முடிவுக்கு வந்தது.
வழக்கு முடிவுக்கு வந்தாலும் நீதிமன்றத்தில் பேசப்பட்டவைக்கு வைக்குமாராக நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி மீண்டும் தனக்கு தேவையானவர்களே நியமித்துக் கொண்டார்.
இவை ஒருபுறம் இருக்க.
தற்போது வக்கூப் சபை அமைப்பதில் இவரின் கை ஓங்கியுள்ளதாக தெரிய வருகின்றது. வக்பு சபைக்கு பெயரிட்ட சில நீதியான நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களின் பெயரை தனது அரசியல் பலாத்காரத்தை பயன்படுத்தி நீக்கியுள்ளதாகவும், இவ்விடத்திற்கு தனக்கு தேவையானவர்களை நியமிக்க முற்படுவதாகவும் தெரிய வருகின்றது.
ஏற்கனவே பள்ளிவாசலுக்கு இவரால் நியமிக்கப்பட்ட நம்பிக்கை பொறுப்பாளர் சபை செல்லுபடியற்றது என இருக்கும் நிலையில், இவ்வாறான அடாவடித்தனம் புரிந்தவர்களையும், அடாவடித்தனங்களையும் பாதுகாத்துக் கொள்ள, வக்பு சபையில் தொடர்ந்தும் இவ்வாறான ஒரு நிலைமையை ஏற்படுத்த அனுமதிப்பதா ?
இவ்வாறானவர்களினால் நியமிடிக்கப்படும் நியமனங்களில் எந்த நியாயத்தை எதிர்பார்க்க முடியும் ?
எனவே வக்பு சபையானது இந்த நிலைமை யை விட கீழ் நிலைக்கு தள்ளப்படுமா என்பதில் அச்சப்பட வேண்டியுள்ளது.
எனவே இது விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் அமானித சொத்துக்களை பாதுகாக்கும் சிறந்த ஒரு வக்பு சபையை உருவாக்க
ஜனாதிபதி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வக்பு சபை நியமிக்கப்பட்ட பின்பு அதன் காலம் முடியும் வரை அதை கலைக்க முடியாது. எனவே அமைக்கப்படும் வக்பு சபை விடயத்தில் சமூகத்தில் உள்ள முன்னோடிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
தவறுதலாகவாவது பிழையானவர்களைக் கொண்டு அமையுமேயானால் நிலைமை இன்னும் மோசமடையும் என்பதை சமூக முக்கியஸ்தர்கள் சிந்திக்க வேண்டும்.
வேட்டை நிருபர்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments