
பெங்குவீன்கள் ஒரு காலக்கட்டம் வந்தவுடன் தங்களுடைய இணையைத் தேடத் தொடங்கிவிடுகின்றன.
சில வகைகளுக்கு இணையைக் கவர முக்கியமாக ஒரு பொருள் தேவைப்படுகிறது...
அது ஒரு கல்.
ஆண் பெங்குவீன்கள் ஒரு கல்லைத் தேடித் தங்களுக்கு விருப்பமான பெண் பெங்குவீனிடம் கொடுக்கும்.
எவ்வளவு வழுவழுப்பான, அழகான கல்லோ பெண் பெங்குவீன் அதை ஏற்றுக்கொள்வதற்கு அதிக வாய்ப்புள்ளது...
பெண் பெங்குவீன் கல்லை ஏற்றுக்கொண்டால் அது ஆண் பெங்குவீனை இணையாக ஏற்றுக்கொண்டதாக அர்த்தம்.
ஸ்காட்லந்தின் எடின்பர்க் (Edinburgh) நகரைச் சேர்ந்த பிள்ளைகள் சிலர் ஆண் பெங்குவீன்களின் இணைத் தேடலுக்கு உதவியுள்ளனர்.
சிறார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் சில பிள்ளைகள் கற்களை அலங்கரித்துள்ளனர்.
எடின்பர்க் விலங்குத் தோட்டம் சமூக ஊடகத்தில் பகிர்ந்த காணொளியில் பிள்ளைகள் கற்களுக்குச் சாயம் தீட்டுவதைப் பார்க்கமுடிகிறது.
மொத்தம் 1,000க்கும் அதிகமான வண்ணவண்ணக் கற்கள்.
அந்தக் கற்கள் பின்னர் பெங்குவீன்களின் இருப்பிடத்தில் கொட்டப்படுகின்றன.
ஆண் பெங்குவீன்களும் கற்களை அலசிப் பார்க்கின்றன...
காதலைச் சொல்ல எந்தக் கல் சிறந்தது என்று பரிசீலிக்கின்றன...
காணொளியைக் கண்ட இணையவாசிகளின் உள்ளம் நெகிழ்ந்தது.
"நான் அலங்கரித்த கல்லைப் பெங்குவீன் தேர்ந்தெடுத்தால் என் மகிழ்ச்சிக்கு அளவிருக்காது..."
"பெங்குவீன்கள் நகைக் கடையில் இருப்பது போலவும்...நிச்சயதார்த்த மோதிரத்தைத் தேடுவதும் போன்றும் தோன்றுகிறது!"
என்று அவர்கள் கூறினர்.
@rzssedinburghzoo For the fourth year in a row, children in hospital have been getting creative by painting colourful pebbles for the penguins at Edinburgh Zoo 🐧 Penguins try to win over their perfect match by presenting the most beautiful pebbles they can find. And this year the colony were spoilt for choice… with more than 1,000 stunning pebbles to pick from! A huge thank you to Edinburgh Children's Hospital Charity and Royal Hospital for Children and Young People for helping make this possible. Together we’re helping children stay connected to nature even during the toughest hospital stays 💛@Edinburgh Children's Hospital ♬ Kokiri Forest with Ocarinas - David Erick Ramos - Ocarina
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments