கொடகே தேசியச் சாகித்திய விருது-2022

கொடகே தேசியச் சாகித்திய விருது-2022


கடந்த 24 வருடங்கள் இலங்கை இலக்கியத்தை வளர்தெடுக்கும் முகமாகவும், முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், வழங்கப்பட்டு வரும் கொடகே தேசியச் சாகித்திய விருது இலங்கை தமிழ்  இலக்கியத்திற்கும் கடந்த 13 வருடங்களாக வழங்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த நாவல், சிறுகதை, கவிதை நூல்களில் சிறந்தவை தெரிவு செய்யப்பட்டுக் கொடகே தேசியச் சாகித்திய விருது வழங்கப்படவுள்ளது.


சிங்கள - தமிழ் மொழிகளில் இன ஐக்கியத்தையும், இனங்களிடையே நல்லுறவைக் கௌரவிக்கும் முகமாக 2021ஆம் ஆண்டு வெளிவந்த சிங்களத்திலிருந்து தமிழுக்கும், மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஒன்றுக்கும் இன ஐக்கியத்திற்கான மொழிபெயர்ப்பு நூலுக்கான கொடகே 

தேசியச் சாகித்திய விருது வழங்கப்படும். மூலநூல் இலங்கையில் வெளியிடப்பட்டு இருத்தல் வேண்டும்.
நாவல், சிறுகதை, கவிதை ஆகிய  துறையில் தன் முதல் நூல் வெளியிட்ட சிறந்த படைப்பாளி ஒருவருக்குக் கொடகே தேசியச் சாகித்திய விருதுக்கான பணப்பரிசிலும், சான்றிதழும் விருதும் வழங்கப்படும்.

அத்தோடு தமிழ் கலை இலக்கியத்திற்குப் பணியாற்றிய படைப்பாளி ஒருவருக்குக் கொடகே வாழ்நாள் சாதனை விருதும் வழங்கப்படவுள்ளது.

பரிசீலனைக்கு அனுப்பப்படும் நூல்கள் முதல் பதிப்பாக இலங்கையில் பதிப்பிக்கப்பட்டு இலங்கையில் ISBN பெற்றுக் கொண்ட நூல்களாக இருத்தல் வேண்டும்.

பரிசீலனைக்கு நூலின் மூன்று பிரதிகள் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ந்திகதிக்கு முன்னதாக நேரடியாகவோ, தபால் மூலமாகவோ கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
661,651, 675, பீ. டீ.எஸ். குலரத்ன மாவத்தை, கொழும்பு-10.  தொடர்புக்கு மேமன்கவி-0778581464
தகவல்;மேமன்கவி 

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post