Ticker

6/recent/ticker-posts

சண்முகா இந்து மகளிர் கல்லூரி முஸ்லிம் ஆசிரியை விவகாரம் பின்னணியில் நிற்கும் பூதம் யார்.?


சில காலங்களுக்கு முதல் சண்முகா இந்து கல்லூரியில் ஏற்பட்ட அபாயா ஹிஜாப் பிரச்சினை ஒரு பூதாகரமான பிரச்சனையாக  மாறி, பொலீஸ், மனித உரிமைய ஆணைக்குழு, நீதிமன்றம் என சட்டத்தின் சந்து பொந்துகள் அனைத்திலும் சென்றடைந்தது.

இதற்கு மத்தியில் அண்மையில் ஏற்பட்ட சுமூக நிலையிலான உடன்பாட்டின் அடிப்படையில் இவ்வாசிரியை அங்கே சேவை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன் பிறகு கல்லூரிக்கு கடமைக்காகச் சென்ற ஆசிரியை, ஒரு திட்டமிட்ட அடிப்படையில் பல நூற்றுக் கணக்கானவர்கள் அங்கு கூடி, அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, கடமையை செய்ய விடாது தாக்கப்பட்டார்.

இலங்கையின் தண்டனை சட்டக் கோவையின் பிரகாரம் ஒரு அரச  அதிகாரியின் சேவையின் போது அவரை தாக்குவது, 
அவரின் சேவைக்கு இடையூறாக இருந்து அவரது கடமையை நிறைவேற்ற விடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்நிலையில் இவ்வளவு பாரதூரமான விளைவுகள் நடந்தும், இது சம்பந்தமான காணொளிகள் வெளியாகியும், எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை.

மேலும் ஒரு அரச அதிகாரியின் சேவை நேர பகுதியில் அவரின் சேவைக்கு இடையூறு விளைவித்ததாக எவரும் கைது செய்யப்படவும் இல்லை.

குறித்த ஆசிரியையின் விடயம் சுமுகமான முறையில் பேசி முடிக்கப்பட்டு, அதன் பிறகு அதற்கு மாறாக குறித்த பாடசாலையினுள் அனுமதியின்றி பலாத்காரமாக உட்புகுந்து, கலகம் விளைவித்து,  திட்டமிட்டு ஆசிரியையை தாக்கியவர்கள் கைது செய்யப்படாதது ஏன். 

இதன் பின்னணியில் பிணைந்துள்ள நாடகம் என்ன ?

இலங்கை தண்டனை சட்டக் கோவையின் பிரகாரம் குற்றம் செய்தவர்களைதேடிக்கண்டு பிடிக்க பாதுகாப்புத் தரப்பு  தன்  கடமையை செய்யாதிருக்கும் அளவுக்கு இந்த நாடகத்தின் பின்னால் உள்ள பூதம் யார்

( பேருவளை ஹில்மி )




Vettai Email-vettai007@yahoo.com 

Post a Comment

0 Comments