கோவை சட்டக்கல்லூரி மாணவி முதலிடம்
கோயம்புத்தூரில் செயல்பட்டுவரும் “எய்ம்” தன்னார்வத்தொண்டு நிறுவனமும், நியூஜிலாந்து நாட்டில் செயல்பட்டுவரும் “நீர் இணையம்” தன்னார்வத் தொண்டு நிறுவனமும் இணைந்து தமிழ்நாடு தழுவிய, மாநில அளவிலான இணைய வழி பேச்சுப்போட்டி நடத்தியது. இப்போட்டியை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு ராஜகோபால் சுன்காரா I.A.S அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு “நீர் வளத்தின் இன்றியமையாமையும் பாதுகாப்பும்” கல்லூரி மாணவர்களுக்கு “நீர் நிலைகளைப் புனரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் பாதுகாத்தல்” போன்ற தலைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன.
இணைய வழி பேச்சுப் போட்டியில், முதல் சுற்றில் தமிழகம் முழுவதுமிருந்து சுமார் 800 மாணவ, மாணாக்கியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவர்களில் 101 பேர் 2 ஆம் சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இறுதிச் சுற்றுப் போட்டி கடந்த 13-02-2022 ஞாயிற்றுக் கிழமையன்று ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இசிஇ துறைத் தலைவர் முனைவர் எஸ். சோபியா, மற்றும் துணைப்பேராசிரியர் முனைவர் ஜெ ஆர் தினேஷ் குமார் ஆகியோர் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்துக்கொண்டனர். பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரிக் முத்தமிழ் அரங்கத்தில், கூகுள் இணையதளம் வழியாக நடைபெற்றது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முன்னாள் கண்காணிப்பு பொறியாளரும், எய்ம் அறக்கட்டளையின் ஆலோசகருமான பொறியாளர் ஆ. நாகராசு ஐயா அவர்கள் தலைமை உரையாற்றினார். உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் குறள்யோகி முனைவர் மு. க அன்வர் பாட்சா அவர்கள் வரவேற்புரையாற்றினார். முன்னாள் கல்லூரிக் கல்வி இயக்குநர் முனைவர் கி. குமாரசாமி ஐயா அவர்கள் தொடக்க உரையாற்றினார். நியூஜிலாந்து நீர் இணையம் அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் க. வினோத்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
நடுவர்களாக பொறியாளர்கள் திரு கே டி பெருமாள், திரு ஆ. நாகராசு, திரு ஊ. பூவலிங்கம், திரு ஜி. சசீதரன், திரு க. பாலசுப்பிரமணியன், திரு நாகராஜன் கற்பகம் பல்கலைக்கழக துணைப் பேராசிரியர்கள் முனைவர் பி. சக்திவேல், அண்ணா பல்கலைக்கழக துணைப்பேராசிரியர் முனைவர் ஆர் விஜய பாஸ்கர், முனைவர் மு. க. அன்வர்பாட்சா மற்றும் தமிழாசிரியர்கள் திரு முனியாண்டி, திருமதி சண்முகாதேவி ஆகியோர் செயல்பட்டனர். நிகழ்சியின் ஒருங்கிணைப்பாளராக திருக்குறள் மு.க. அன்வர்பாட்சா நெறிப்படுத்தினார்.
.
இந்து தமிழ் திசை நாளிதழ் மீடியா பார்ட்னராக செய்திகள் வெளியீடு செய்து உதவியது. நிறைவாக எய்ம் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் பி ஏ திருநாவுக்கரசு அவர்கள் நன்றி பாராட்டினார்.
மாநில பேச்சுப்போட்டியின் வெற்றியாளர்களின் பட்டியல் முறையாக அறிவிக்கப்பட்டது. முதல் பிரிவில் 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் சென்னை வாணி வித்யாலயா மாணாக்கி M. பிரசிக்கா முதலிடமும், சிவகங்கை வித்யகிரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணாக்கி A. பிரியதர்சினி இரண்டாமிடமும், நெய்வேலி என் எல் சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணாக்கி R. சிவரஞ்சனி மூன்றாமிடமும் வென்றனர்.
இரண்டாம் பிரிவில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் திருப்பூர் A V P அறக்கட்டளை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணாக்கி A. அல்மாஸ் முஹுசினா முதலிடமும், கன்னியாகுமரி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளி மாணவன் D. ஜிஜோ இரண்டாமிடமும், பெரம்பலூர்,அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணாக்கி G. அபிராமி மூன்றாமிடமும் வென்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கான மூன்றாம் பிரிவில் கோவை சட்டக்கல்லூரி மாணாக்கி P N சினேகா முதலிடம் வென்றார். திருச்சிராப்பள்ளி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி மாணாக்கி A. அருணா இரண்டாமிடமும், மதுரை தியாகராஜர் கல்லூரி மாணவன் S. லோகநாதன் மூன்றாமிடமும் வென்றனர்.
மேலும் வெற்றியாளர்களைப் பாராட்டி, ஊக்குவிக்கும் வகையில் வருகிற 26-02-2022 அன்று சூம் இணையம் வழியாக நிறைவு விழா நடைபெறவுள்ளது. அதில் வெற்றிபெற்ற மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி / கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர். வெற்றியாளர்களுக்குக் குறிப்பிட்டபடி ரொக்கப் பரிசும் பாராட்டிதழும் வழங்கப்படவுள்ளது. இந்து தமிழ் திசை நாளிதழின் கோயம்புத்தூர் பொது மேலாளர் திரு D. ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கவுள்ளார்.
P A திருநாவுக்கரசு
நிர்வாக அறங்காவலர்,
எய்ம் தன்னார்வத் தொண்டு நிறுவனம்,
கோயம்புத்தூர் – 641026
அலைபேசி எண்: 9443039839
தகவல்
வேட்டை தமிழ் நாடு நிருபர்
Vettai Email-vettai007@yahoo.com
2 Comments
அருமையான பதிவாக உள்ளது...செய்திகளை உடனுக்குடன் வெளியிடும் வேட்டை மின்னிதழின் பணி அளப்பரியது...மனமார்ந்த மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்...மேன்மேலும் வளர சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன், குறள்யோகி முனைவர் மு.க.அன்வர் பாட்சா, கோவை,TN.,INDIA
மிகவும் சிறப்பு, மகிழ்ச்சி, அனைத்து விவரங்களையும்
ReplyDeleteஅழகான வடிவமைப்பில் உலகறிய செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.