ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா நம்பர் 1 ஆல்ரவுண்டர்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா நம்பர் 1 ஆல்ரவுண்டர்

ரவீந்திர ஜடேஜா மொஹாலியில் இலங்கை அணிக்கு எதிராக பேட்டிங்கில் 175 ரன்களையும் பந்து வீச்சில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதையடுத்து ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் மே.இ.தீவுகளின் ஜேசன் ஹோல்டரை பின்னுக்குத் தள்ளி புதிய நம்பர் 1 ஆல்ரவுண்டர் ஆனார்.

ஜடேஜா டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் உச்சத்தை எட்டுவது இது இரண்டாவது முறையாகும்: ஆகஸ்ட் 2017 இல் அவர் ஒரு வாரத்திற்கு நம்பர் 1 ஆக இருந்தார். ஜடேஜா பந்துவீச்சு தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 17 வது இடத்தைப் பிடித்தார், மேலும் பேட்டிங் தரவரிசையில் 54 வது இடத்தில் இருந்து 37 வது இடத்திற்கு வந்தார்.

ராவல்பிண்டியில் நடந்த பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ரன் திருவிழாவில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்கு 476 ரன் குவித்து டிக்ளேர் செய்தது, பின்னர் 0 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் குவித்தது, இதில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்களுடன் பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 63வது இடத்திற்கு முன்னேறினார்.

பாகிஸ்தானின் மற்றொரு வீரர் அசார் அலி 185 ரன்களை எடுத்தார், இதனையடுத்து பத்து இடங்கள் முன்னேறி 12வது இடத்திற்கு வந்தார் அசார் அலி. முதல் டெஸ்ட் போட்டியில் 48 ரன்களுக்கு குறைவாக எடுத்த ஆஸ்திரேலிய வீஅர் டிராவிஸ் ஹெட், 5வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சென்றார்.

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் மார்னஸ் லபுஷேன் நீடிக்க அடுத்தடுத்த இடங்களில், ரூட், ஸ்மித், வில்லியம்சன், கோலி, ரோஹிட் சர்மா, ட்ராவிஸ் ஹெட், கருன ரத்னே, பாபர் அசாம், ரிஷப் பண்ட் உள்ளனர்.

பவுலிங்கில் முதலிடத்தில் கமின்ஸ் நீடிக்க, அடுத்தடுத்த இடங்களில், அஸ்வின், ரபாடா, ஷாஹின் அப்ரீடி, கைல் ஜேமிசன், சவுதி, ஜேம்ஸ் ஆண்டர்சன், நீல் வாக்னர், ஹேசில்வுட் பும்ரா உள்ளனர்.

டாப் டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஜடேஜா முதலிடத்துக்கு தாவ, அடுத்தடுத்த இடங்களில் ஜேசன் ஹோல்டர், அஸ்வின், ஷாகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், மிட்செல் ஸ்டார்க், கைல் ஜேமிசன், கொலின் டி கிராண்ட் ஹோம், கமின்ஸ், கிறிஸ் வோக்ஸ் உள்ளனர்.


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post