ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த தாவல்

ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த தாவல்


ரணில் விக்கிரமசிங்க இலங்கை அரசியல் வரலாற்றில் மீண்டும் பேசப்படும் ஒரு தலைப்பாகும். ரணில் நேற்று ஹைட் மைதானத்தில் சத்தியாக்கிரகம் ஒன்றை மேற்கொண்டார். அது நாட்டினுடைய அனைத்து நபர்களும் பொது தேசிய வேலைத் திட்டத்திற்கு ஒன்றுபட வேண்டும் என்ற பிரார்த்தனையாகும்.
உண்மையில் வெளியிலேயே பார்க்கின்ற சந்தர்ப்பத்தில் அது மிகவும் சிறந்த ஒரு வேண்டுதலாகும். இருப்பினும் ரணிலின் வேலை என்பதனால் அந்த இடத்தில் பிரார்த்தனையை விட மேலதிகமாக ஒரு விடயம் கட்டாயமாக இருந்திருக்ககூடும். அதனால் இதன் அரசியல் நோக்கம் என்ன என்பது பற்றி ஆராய்வது பொருத்தமானது.

உங்களுக்கு ஞாபகம் இருக்கும் ஒரு வருடத்திற்கு முன்னர் ரட்டே ரால குறிப்பிட்டிருந்தார் ராஜபக்சக்களுக்கு உள்ள ஒரே பதில் தேசிய அரசாங்கம் என்று. சில சந்தர்ப்பங்களில் அதற்கு வேறு பெயர் சூடலாம்.அது தேசிய உடன்பாட்டை அடிப்படையாக கொண்டதாக  வரமுடியாமலும் இல்லை. உண்மையில் தேசிய உடன்பாடு மட்டும் பொது மாநாடு என்ற விடயத்தை முதன்முதலில் ரணிலுக்கு முன்னர் குறிப்பிட்டது ரட்டே ரால.ரணில் அதனை தற்போது  எடுத்துள்ளார். எடுத்ததற்கு  பரவாயில்லை அதனை பொருத்தமற்ற முறையில் பயன்படுத்தாமல் இருந்தால் சரி. உண்மையில் ரணில் அதனை எடுத்துக் கொண்டது எதற்காக? ரணில் அதனை பெற்றுக்கொண்டது தார்மீகத்துடனா? தற்போது எமது நாட்டு அரசியலில் பெரிய தலைமைத்துவ வெற்றிடம் ஒன்று காணப்படுகின்றது. இதன் மூலம் செய்வது ரணில் இதனை நிரப்புவதற்கா? ரணில் தொடர்ச்சியாக குறிப்பிடுவது நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும்  ஒன்றுபட வேண்டும் என. தர்க்க ரீதியான கருத்து அடிப்படையில் அது சரியானதாக இருக்கும். கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் பெரிய வகிபாகத்தை மேற்கொண்டது ரணில். பிறருடைய நல்ல முன்மொழிவுகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு அதன் உரிமையாளராக ரணில் மாறினார்.

இறுதியில் அந்த மாநாடு ரணில் உயர்நிலைக்கு சென்ற மாநாடாக அமைந்து விட்டது. அது நடைபெற்று முடிந்த உடன் ஹைட்பாக் சத்தியாக்கிரகம். அதற்கான வழி சிறந்த முறையில் ஏற்படுத்தப்படுகின்றது. தற்போது  ரட்டே ரால ரணிலிடம் கேட்க வேண்டிய விடயம் அடுத்தது என்னவென. ரணில் இந்த நாட்டில் பிரதமர் என்ற அடிப்படையில் அதிகமான தடவைகள் இருந்த ஒருவர்.ரணிலுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்குவதற்கா இதனை மேற்கொள்வது. சர்வகட்சி மாநாட்டுக்குப் பின்னர் அதிகமானவர்கள் ரணில் தொடர்பில் கூடுதலாக கதைக்க ஆரம்பித்துள்ளார்கள். ரணில் மீண்டுமோர் நபராக மாறியுள்ளார்.ரட்டே ரால குறிப்பிடுவது அதற்குத் தேவையான நிலவரம் ஏற்பட்டிருக்கின்றது. அதனை ச ஏற்படுத்தியது ராஜபக்சக்கள். இருப்பினும் அது ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக நினைத்து வழங்கப்பட்டது ஒன்றல்ல. ராஜபக்சக்கள் வேறு யாருக்கும் சந்தர்ப்பம் ஒன்றை வழங்கக் கூடியவர்கள் அல்ல இன்னும் ஒருவருடைய சந்தர்ப்பத்தை உடைத்தெடுப்பவர்கள்.ராஜபக்சக்கள் கடைப்பிடிக்கின்ற தவறான அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கை மூலமாக ரணிலுக்கு  மீண்டும் ஒரு சந்தர்ப்பமும் ஏற்பட்டிருக்கின்றது.எஞ்சியதை நீந்திக் கொண்டு இருக்கக் கூடிய விடயங்களை செய்வதற்கு ரணிலுக்கு தெரியும்.

உண்மையில் இந்த இடத்தில் என்ன நடைபெற முடியும். ரட்டே ரால ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட தேசிய அரசாங்கத்தின் கதை தற்பொழுது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. உண்மையில் இது ஒரு புதுமையான விடயமாகும்.எவ்வாறு ரணில் எதிர்ப்பு அணியிலிருந்து ரணிலுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது. முதலாவது பிரச்சினையை அதுவாகும். அடுத்ததாக உங்களுக்கு தெரியும் இந்த முறை ராஜபக்ஷக்கள் அதிகாரத்திற்கு வந்தபோது முதலாவது துரோகியாக இருந்தது ரணில்.ரணில் இரு பக்கமும் துரோகியாக இருந்தார். ராஜபக்கசக்கள் குறிப்பிடும் அடிப்படையில் ரணில் நாட்டுக்கு துரோகியாக இருந்தார். சஜித் குறிப்பிடுகின்ற அடிப்படையில் ரணில்  சஜித்துக்கு துரோகியாக இருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்தது ரணிலின் பொருளாதார கொள்கைகள் ஆகும். ராஜபக்சக்கள் ரணிலினர அந்த பொருளாதாரக் கொள்கைக்கு சரமாறியாக தாக்கினார்கள். அதுமாத்திரமல்ல ரணில் பலவிடங்களில் லிபரல் வரைவிலக்கணத்தை பயமின்றி பயன்படுத்தினார்.

ரூபாவை மிதக்கவிட்டார். விலை சூத்திரத்தை கொண்டுவந்தார்.ரணிலின் பாரிய  திட்டமாக இருந்தது MCC ஆகும்.

அதற்கு மைத்ரியின் எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் ரணில் அமைச்சரவை அனுமதியைப் பெற்றார். இருப்பினும் அதனை ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதால் மைத்திரி அந்த தீர்மானத்தை அடுத்த ஜனாதிபதி எடுப்பதற்கு அதனை கைவிட்டு வைத்தார். ரணிலின் பொருளாதார கொள்கைகளுக்கு மாற்றமான கொள்கையையே ராஜபக்சக்கள் மேற்கொண்டனர். ராஜபக்சக்கள் கொண்டு வந்த அந்த கருத்திற்கு அதிகமானோர் குறிப்பிட்டது தேசப்பற்றுடையது என. விமல் போன்றோர் அதனையே பிரபல்யப்படுத்தினர்.அதற்காக புட்டின்,லீ குவான் யூ, மஹதீர் ஆகியோரை கொண்டு வந்தனர்.MCC ஐ கிழித்தெறிவதாக கூறினர்.இருப்பினும் கோட்டாபய வந்தவுடன் தாம் அவ்வாறு குறிப்பிடவில்லை என குறிப்பிட்டார். MCC ஐ கொண்டுவர இந்த அரசாங்கம் கடும் முயற்சியை எடுத்தது. இருப்பினும் இந்த அரசாங்கத்தினாலேயே ஏற்படுத்தப்பட்ட MCC எதிர்ப்பு அதற்கு தடையாகியது. அதனால் கோட்டாபய கொண்டு வந்த மேற்கத்தேய தேவைப்பாடுகளை தற்காலிகமாக சுருட்ட வேண்டியேற்பட்டது. கோட்டாபய மேற்கத்தேய ஏஜன்டாக இருந்த போதும் அது வெளியிலே தெரிவதாக இல்லை. அது விளங்குவது வாசு, விமலின் கீழ்த்தரமான தேசப்பற்று ஆடையால் ஆகும்.

அதற்கு முன்னர் மேற்கத்தேய  ஏஜென்டாக இருந்தவர் ரணில். இருப்பினும் அந்த வேலையை சிறப்பானவராக அவர் இருந்தாலும் நாட்டில் அவர் தொடர்பாக  ஏற்படுத்தப்பட்ட நிலவரம் சாதகமானதாக காணப்படவில்லை. உண்மையில் அந்த நிலையை ஏற்படுத்தியவர்கள் ராஜபக்சக்களும் சஜித்தும். அதனால் மேற்கத்திய ரணிலை வீட்டுக்கு அனுப்பி தேசப்பற்று உடையோர் என்றவகையில் தங்களுடைய வேலைகளை செய்வதற்கு கோட்டாபயவை கொண்டுவந்தார்கள். ரணில் விற்பனை செய்கின்ற பொழுது தேசத்துரோகம் என்றும் கோட்டாபய விற்கும்போத தேசப்பற்று என்ற வரைவிலக்கணத்தை ஏற்புடைய தாக்கினார்கள். இருப்பினும் இந்த வரைவிலக்கணத்திற்கு நீண்ட நாட்கள் செல்ல கிடைக்கவில்லை.கோட்டாபய வந்தமு செய்ய வந்த விடயத்தை அல்ல வேறு விடயத்தை என்பதனை தற்பொழுது மக்கள் தெரிந்துள்ளார்கள். அந்த முரண்பாடுதான் இதனுள்ளே இருப்பது. ரணிலை விடகோட்டாபய மற்றும் பெசில் அமெரிக்க சார்புத்தன்மை உடையவர்கள், அவர்கள் அமெரிக்க பிரஜைகள். இன்று கோட்டாபய- பெசி்ல் நாட்டு மக்களுக்கு முன்னர் விமர்சி்த்த ரணிலின்  பொருளாதாரக் கொள்கைகளையே நடைமுறைப்படுத்துகின்றனர். தற்போது இந்த அரசாங்கத்திற்கும் இதனை கொண்டுவந்த அணிகள் இடையே இருப்பது இந்த முரண்பாடுதான்.

ராஜபக்சக்கள் குறிப்பிட்டது வேறொன்று வேறொன்று என்றே. ராஜபக்ஷக்களுக்கு ஏமாந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் கைவிடப்படுமர நிலைக்கு சென்றார்கள். தற்போது இருக்கக்கூடிய பிரச்சினைதான் ராஜபக்ச தங்களது அடிமை முறை சிந்தனை மூலம  லிபரல் வாதத்தை கரைசேர்க்க முடியாமை ஆகும். அதற்கு ஒன்றும் மங்கல போன்ற ஒருவர் அல்லது ரணில் போன்ற ஒருவர் தேவை. கோட்டாபயவும் பெசிலும் அமெரிக்காவில் வாழ்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு லிபரல் வாதத்தை மேற்கொள்ள கூடிய அறிவு கிடையாது. அதனால் அதனை மேற்கொள்வதற்கு முடியாது. இவர்கள் அமெரிக்காவில் இருந்து அரசியல் செய்யவில்லை. இவர்கள் இருவரும் அமெரிக்காவில் சிறிய ஒரு வேலையை செய்து கொண்டு வாழ்ந்தவர்கள். எங்களுடைய மக்களுக்கு வெளிநாட்டவர் என்றால் அது குப்பையாக இருந்தாலும் பெரிதாகத்தான் தெரியும். அமெரிக்காவில வாழ்ந்தார் என்பதனால் லிபரல் வாதத்தை வழிநடத்த முடியாது. ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் அல்ல. இலங்கையினுடைய பிரஜை அவர்.சிறந்த லிபரல்வாதி. பார்வையில் மட்டுமன்றி மனதாலும்  லிபரல் வாதியாவார்.

ராஜபக்சக்கள  பார்வையில் லிபரல் வாதியாக இருந்தாலும் மனதினால் அடிமை சிந்தனை கொண்டவர்கள். உண்மையில் அதுதான் பிரச்சினை. அந்த இடைவெளியை நிரப்புவதற்கு அடிமைமுறை ராஜபக்ஷவிற்கு முடியாது. அந்த இடத்தை நிரப்புவதற்கு ரணிலுக்கான மனப்பாங்கு உருவாகியுள்ளது. அதனால் ராஜபக்ஷக்கள் பின்சென்று ரணிலை பிரதமராக ஆக்கினாலும் அது தொடர்பில் புதுமை அடைய வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு செய்வதென்பது அது மஹிந்தவின் வரைவிலக்கணம் ஆக அமையும். மஹிந்தவுக்கு அரசியல் நுட்பம் காணப்படுகின்றது. மஹிந்தவுக்கு தெரியும் பெசில் இன்னும இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை வழிநடத்தினால் மீண்டும் ராஜபக்ஷக்களுக்கு நிறுத்தக் கூடிய இடமாக அமெரிக்காவும் சுவாசிலாந்தும் தான் அமையும் என. அதனால் மகிந்த நினைக்கின்றார் இந்த குப்பை கூழங்களை யாருடையதாவது  உடலில் பூசுவதற்கு. பூசி நல்ல நிலைக்கு சென்றால் அதனுடைய புள்ளிகளை பெற்று கொள்வதற்கு. அது சிறப்பாக அமைய விட்டால் அதற்கு காரணமாக இருந்தவர்களை பின்புறத்தால் அனுப்புவதற்கு. அந்த இடத்தில் மஹிந்தவுக்கு ஞாபகம் வருவது ரணில். ஏனென்றால் ரணில் என்பவர் குப்பைகளாலும் வேலை வாங்கக்கூடிய ஒருவர். உண்மையில் அவ்வாறு இருந்தால் ரணிலுக்கு அதனை வெற்றியடையச் செய்ய முடியுமா? அதுதான் அடுத்த பிரச்சினை.

உண்மையில்  இந்த இடத்தில் ரணிலை குறைத்து  மதிப்பிடுவது சிறந்ததன்று. லிபரல் வாதத்தின் ஊடாக ரணிலுக்கு இரண்டு வகையான வழிகள் உண்டு. ஒன்று தான் இந்த ராஜபக்சக்கள் கடைப்பிடிக்கின்ற குப்பை,கீழ்த்தரமான, ஊழல் மிக்க  வேலைகளை தொடர்ந்து கொண்டு செல்வது. அவ்வாறான சூழலில் ராஜபக்ஷக்களுக்கு ரணிலுக்கு அரசியல் மரணமே கிட்டும். இல்லையென்றால் ரணிலுக்கு முடியுமாக இருக்கும் லிபரல்வாத பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்த. அதன் மூலமாக வேறுபட்ட வேலைகளை செய்ய முடியும். தற்போது இந்த நாடு வேண்டுவது அதனைதான். உண்மையில் ரணில் கள்வரல்ல. அந்த வேலையை சிறப்பாக செய்தால் நாட்டை மீட்சி அடையச் செய்தவர் என்ற அடிப்படையில் brand பெயரை அவர் பெறுவார். அவ்வாறு ஏற்பட்டால் மஹிந்த ரணிலுக்கு  பின்பு நாமலை அனுப்ப முடியும். இருப்பினும் அந்த முயற்சி சாதகமாக உள்ளபோது அந்த இடத்தில் நாமலுக்கு  உரிய இடம் ரணில் வழங்கமாட்டார். உண்மையில் வழங்க வேண்டிய அவசியமும் கிடையாது. அடுத்ததாக இந்த நாட்டில் கட்டி எழுப்பப்பட்டு கொண்டிருக்கின்ற  அரசியல் நிலவரத்தின் அடிப்படையில் அந்த இடத்தைப் பெற்றுக் கொள்வதை தவிர வேறு எந்தவிதமான பதிலும் ரணிலுக்கு இல்லை.

ஏன் என்றால் ரணிலின்  இறுதி அரசியல் எதிர்பார்ப்பு எவ்வாறென்றால் எவ்வாறு சரி ஐக்கிய தேசிய கட்சியை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே.அதற்கு  ரணில் பாவிப்பது வேறொரு அரசியல் நுட்பமாகும். ரணில் இந்த நெருக்கடியை இதற்கு பயன்படுத்துகின்றார்.ரணிலுக்கு தெரியும் ராஜபக்சக்களுக்கு எதிராக ஏற்படுத்தப்படுகின்ற மக்கள் எதிர்ப்பை ரணிலுக்கு கைப்பற்ற முடியாது என்று.அது  ஐக்கிய மக்கள் சக்தி போன்று  தேசிய மக்கள் சக்திக்கும் செல்லும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவ்வாறு முடியாது. இருப்பினும் ரணிலுக்கு அது தெரியும்.சஜித்திற்கு இந்த நெருக்கடியை முகாமை செய்ய முடியாது என்று. சஜித்திடம் இருப்பது இருப்பது பொய் பொம்மலாட்டம் என்று ரணிலுக்கு தெரியும். குறைந்தபட்சம் ரணில் குறிப்பிடுகின்ற பொருளாதார கொள்கைகளை விடுத்து சஜித்தின் பொருளாதார ஒஸ்தார்களிடமிருந்து எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை. அதேபோன்று தேசிய மக்கள் சக்திக்கும் எந்தவிதமான பதிலும் இல்லை. தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்துக்கு வந்தால் IMF செல்வதா என்ற பதிலை தெளிவாக வழங்க வேண்டும். உண்மையில் நெருக்கடிக்கு அவர்களிடம் எந்த விதமான தீர்வும் இல்லை. அதே போன்று ராஜபக்ச கைகளிலும் தீர்வுகள் உண்மையில் இல்லை. உண்மையில் ரணிலின் கையிலும் பதில் இல்லை. இருப்பினும் ரணில் கையிலே ஒரு பிளாஸ்ட்டர் ஒன்று காணப்படுகின்றது.

ஏன்என்றால் சர்வதேச ரீதியாக ரணில் என்ற பெயர் geniune ஆகும். ராஜபக்ஷக்களுக்கு சர்வதேச ரீதியாக கள்வர்கள் என்ற brand குத்தப்பட்டு முடிவடைந்து விட்டது. அதனால் ரணிலுக்கு ராஜபக்சக்களை கீழ்ப்படிய செய்யும நல்ல சந்தர்ப்பம் தான் இந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. ரணில் வழங்குகின்ற பிளாஸ்டர் தீர்வுதான் தீர்வென இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். ஏனென்றால்  இதற்கான விடை   இதுஅல்ல என்ற பதிலை வழங்க யாருமில்லை.  அடுத்ததாக ஐக்கிய தேசிய கட்சியை கட்டி எழுப்ப ரணில் மேற்கொள்கின்ற அடுத்து வேலையாக அமைவது ஐக்கிய மக்கள் சக்தியை சுக்கு நூறாகும் வகையில் வேலையைச் செய்வதாகும். ரணில் இந்த இடத்தில் ராஜபக்சக்களை அடிபணிய செய்தால் அதிகாரத்தை பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி தகர்ப்பார். அது ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கக்கூடிய அதிகமானவர்களுக்கு தெரியும் சஜித்திற்கு  எந்த ஒரு பதிலும் இல்லை என்று. பிளாஸ்ட்டராவது இருப்பது ரணிலிடம் மாத்திரமே.  அடுத்ததாக தற்போது ஐக்கிய மக்கள் சக்தி உள்ளே இருக்கக்கூடிய பாட்டலிக்கு அது ஒரு விடையாக அமையும்.  ஏனென்றால் அவருக்கு தெரியும் ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளே அவருக்குரிய இடம் இல்லை என்று. பாட்டளி என்பவர் சந்தர்ப்பத்தை முகாமை செய்யக்கூடிய அதிசிறந்த ஒருவர்.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் வந்தால் அந்த சந்தர்ப்பத்தை கைவிடுவதற்கு பாட்டலி ஒருபோதும் தயாரில்லை. இந்த நிலையில் பாட்டலிக்கு ரணிலின் பதிலாளாக  வர முடியாமலும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்திகளிலிருந்து 10 பேரையாவது ரணில் கழற்றி எடுப்பார். இல்லை என்றால் அவர் ரணிலும் அல்ல. தற்போது ராஜபக்ஷக்களுக்கு இன்னமும் தெரியாமல்  இருக்கக் கூடியதை  செய்பவர் லிபரல்வாதி ரணிலே.ரணில் மேற்கொண்ட வேலையை தற்போது ரணிலுக்கே முடிக்க வேண்டிய காலம் வந்துள்ளது. ரணிலுக்கு அதனை செய்வதற்கு இருப்பது தேசப்பற்றுடைய ராஜபக்சக்களுடன் இணைந்தே ஆகும். இந்த இடத்தில் ரட்டே ராலவின் கருத்துப்படி ரணில் நாட்டுக்கு செய்வது பாரியதொரு தவறாகும். அதுதான் வீழ்ச்சி அடைந்து இருக்கக்கூடிய ராஜபக்ச ரெஜிமேண்டுக்கு மீள  காற்று அடிப்பது போன்றது ஆகும். இருப்பினும் ரணில் அதிலிருந்து தன்னுடைய முதலாளித்துவ சிந்தனைக்கு உதவி செய்கின்றார். அதாவது ராஜபக்சக்களின் அதிகாரத்தில்  ரணில் வேலையை செய்து கொண்டிருக்கின்றார். இருப்பினும் இந்த இடத்தில் லிபரல் வாதத்தை பாதுகாப்பது போன்று லிபரல் வாதத்தின் உள்ளே வாழ்கின்ற அடிமை சிந்தனை கொண்ட ராஜபக்சக்களுக்கு  பாதுகாப்பும் கிடைக்கப்பெறுகின்றது. அதேபோன்று ரணில் மேற்கொள்ள முனைந்து இடைநிறுத்தப்பட்ட மேற்கத்தைய மற்றும் இந்திய நிகழ்ச்சி நிரல் இன்னும் வேகமாக நடைமுறைப்படுத்துவது தான்.

தற்போது இங்கு நடைபெற்றுக் கொண்டிருப்பது வேறு முறையில் MCC  நடைமுறைப்படுத்துவது போன்ற ஒரு விடயம்தான். இருப்பினும் அடுத்ததாக நடைபெற இருப்பது ரணில் ராஜபக்ஷவுடன் இணைந்து நாட்டை விற்பனை செய்கின்ற விடயமாகவும் அமையக்கூடும். அதற்கு சிறந்த உதாரணமாக அமைவது இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் குறித்து ரணில்  பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயம் ஆகும். இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு கிடைக்கப்பெற்ற உதவி  தொடர்பில் தாம் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் அந்த கடன் பணம் பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தம் குறித்து ரணில் கேள்விக்குட்படுத்தவில்லை. நாட்டு இறைமையை தாரை வார்ப்பது உண்மையில் ரணிலுக்கு எவ்விதப் பிரச்சனையும் இல்லை. அதனால் அமெரிக்கா -இந்தியா ஒன்றிணைந்த  ஆக்கிரமிப்பு இந்த நாட்டில் ஏற்பட முடியும். அதனை மேற்கொள்வது கோட்டாபய- மஹிந்த -பெசில்- ரணில் ஒன்றிணைந்த கூட்டணியாக இருக்க கூடும். இல்லை என்றால் ரணிலுக்கு லிபரல்வாத மறுசீரமைப்புக்கு செல்ல முடியாமலும் இல்லை. அதனால் நாடு தொடர்பில் அவதானம் இருக்கின்ற தேசப்பற்றுடைய ஒரு பிரவேசம் எங்களுடைய நாட்டுக்கு தற்போது தேவையாக காணப்படுகின்றது.

அதனை செய் எந்த ஒருவரும் கை அடிக்கவில்லை. அதனால் அது திறந்த சவாலாகும்.  எவ்வாறு இருப்பினும் ரணில் தொடர்பில் இன்னும் இருப்பது ஒரு கதை மாத்திரமே. அந்த கதையின் உள்ளேயே நடக்க கூடியதொன்றையே ரட்டே ரால குறிப்பிட்டார். இறுதியில் இவை யாவற்றையும் செய்து ராஜபக்சக்கள் தேசத்துரோகிகளாக்கிவிட்டு ரணில் தேசப்பற்றுடையவராக வருவாரோ புரியவில்லை. இருப்பினும் இந்த மைதானத்தில் ரணிலுக்கு துடுப்படுத்தாடுவது அவ்வளவு இலகுவாக அமையாது. எஞ்சியவற்றை ரணில் மைதானத்தில் இறங்கியதன் பின்னரே சொல்லமுடியும்.

அவ்வாறாயின் போய் வருகின்றேன் கடவுள் துணை வெற்றி கிட்டட்டும்.
இப்படிக்கு
ரட்டே ரால

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post