
தமிழகத்தில் புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் நோன்பு கஞ்சி தயாரிக்க, ஆண்டுதோறும் பச்சரிசி வழங்கப்பட்டு வந்தது. இதேபோன்று, இந்த ஆண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், இஸ்லாமிய மக்கள் நோன்பு கடைப்பிடிக்கும் நாட்களுக்கு மட்டும், பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் பச்சரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், தேவைப்படும் அரிசிக்கான உரிய அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், நோன்பு கஞ்சிக்காக 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படவுள்ளது.
இதனால், தமிழக அரசுக்கு 13,53,60,000 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments