இலங்கை பவுலிங்கில் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை, யார் வேண்டுமானாலும் செஞ்சுரி போடலாம்,

இலங்கை பவுலிங்கில் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை, யார் வேண்டுமானாலும் செஞ்சுரி போடலாம்,

மொஹாலியில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை விளாசினார். உணவு இடைவேளையின் போது ஜடேஜா 102 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார், இப்போது இந்தியாவின் ஸ்கோர் 468/7 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கை பவுலிங்கில் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை, யார் வேண்டுமானாலும் செஞ்சுரி போடலாம், கோலியைத் தவிர ,ஏனெனில் கோலி அந்த மனநிலையிலிருந்து வெளியேறி நீண்ட காலம் ஆகிவிட்டது, இந்த இலங்கை பவுலிங்கில் பும்ராவின் மேம்பட்ட பேட்டிங் மூலம் கூட சதம் காண முடியும். ஷமி இன்னும் அபாயகரமான வீரர். ஏன் தற்போத் கிரீசில் ஜடேஜாவுடன் இருக்கும் ஜெயந்த் யாதவ் இங்கிலாந்துக்கு எதிராக சதம் கண்டவர். ரோஹித் சர்மாவின் திட்டம் 650-700 ரன்கள் வரை செல்லாமல் இருந்தால் சரி.

357/6 என்ற ஸ்கோருடன் 2ம் நாளான இன்று தொடங்கிய பிறகு, ரவிச்சந்திரன் அஷ்வினுடன் ஜடேஜா ஆகியோர் நேற்று டாப் ஆர்டர் செய்த நல்ல வேலையை நீட்டித்தார். இந்த ஜோடி ஏழாவது விக்கெட்டுக்கு தலா அரைசதத்தை எட்டியதில் ஒரு சதக்கூட்டணியை அமைத்தனர்.

ஜடேஜா மற்றும் அஷ்வின் 130 ரன்கள் சேர்த்த பிறகுதான் இலங்கை அணி திருப்புமுனைக்காக கடுமையாக முயற்சித்தது. அஸ்வின் 82 பந்தில் 61 ரன்களில் கேட்ச் ஆகி அவுட்டானார். சுரங்கா லக்மல் தான் அஸ்வினின் எட்ஜைப் பிடித்தார்.

அடுத்து ஜெயந்த் யாதவ் களமிறங்கினார். ம் அவர் கொடுத்த ஆதரவில் ஜடேஜா தனது சதத்தை எட்டினார். இது இவரது 2வது டெஸ்ட் சதம்.

இலங்கை தரப்பில் இதுவரை லசித் எம்புல்தெனிய (2/152), சுரங்க லக்மல் (2/86) ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். காலை நேர ஆட்டத்தில் இந்தியா அஸ்வின் விக்கெட்டை மட்டும் இழந்து 111 ரன்கள் சேர்த்தது.

அஸ்வின் பேட்டிங்கில் நன்றாகவே திகழ்ந்தார், அவர் சில அழகான பவுண்டரிகளை அடித்தார். ஷார்ட் பிட்ச் பந்துகளில் இந்திய வீரர்களை மிரள வைக்கும் தந்திரம் லக்மாலுக்கும் இலங்கைக்கும் பலனளித்தது, இறுதியில் அவர்களுக்கு தேவையான விக்கெட்டைப் பெற்றனர்.

சனிக்கிழமை ஆட்டம் தொடங்குவதற்கு முன், இந்திய மற்றும் இலங்கை வீரர்கள் இருவரும் ராட் மார்ஷ் மற்றும் ஷேன் வார்னை நினைவுகூர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

“நேற்று காலமான ரோட்னி மார்ஷ் மற்றும் ஷேன் வார்னுக்கு முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய அணி இன்று கையில் கருப்பு பட்டை அணிந்துள்ளது” என்று பிசிசிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுருக்கமான ஸ்கோர்: இந்தியா முதல் இன்னிங்ஸ்: 112 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 468 ரன்கள். ரவீந்திர ஜடேஜா 102 நாட் அவுட், ரவிச்சந்திரன் அஷ்வின் 61; லசித் எம்புல்தேனியா 2/152, சுரங் லக்மல்: 2/86).
news18


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post