விரைவில் வர உள்ள தேசிய அரசாங்கத்தின் முன்னோடி விசேட பொருளாதார சபையா?

விரைவில் வர உள்ள தேசிய அரசாங்கத்தின் முன்னோடி விசேட பொருளாதார சபையா?

ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. அங்கு ஜனாதிபதிக்கு மேலதிகமாக பிரதமர், நிதியமைச்சர்,தினேஷ்,சாகர உட்பட பலர்  கலந்து கொண்டார்கள். கலந்துரையாடல் சிறப்பாக அமைந்ததாக தகவல்கள் கிடைக்கப் பெற்று இருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த 15 முன்மொழிவுகளுமர ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.  அரசாங்கம் சர்வகட்சி மாநாடு ஒன்றை வைப்பதற்கு இணங்கிக் கொண்டதாக மைத்திரி குறிப்பிட்டிருந்தார். 

அதுமாத்திரமல்ல அதற்கு மேலதிகமாக அறிஞர்கள் மற்றும் மதத்தலைவர்களுக்குமாக இரண்டு மாநாடுகளை நடத்துவதற்கு ஒத்துக்கொண்டார்கள் என்றும் குறிப்பிட்டார். தற்போது சர்வகட்சி மாநாட்டுக்கு மார்ச் மாதம் 23  திகதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பக்கத்தில் அவர்கள் காட்டுவது வெற்றிநடை ஒன்றை. அடுத்ததாக நேற்று தேசிய சுதந்திர முன்னணி இராஜாங்க அமைச்சர் சமரவீர பதவி விலகினார். நாட்டினுடைய நாலாபக்கமும் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி பதவியில் இருந்து விலகுவது நல்லதா  இருக்க வா என்று கேட்டதுடன், அதன் அழுத்தத்தை தாங்க முடியாமல் அமைச்சப்பதவியிலிருந்து விலகினார். அது மனப்பூர்வமாக நடைபெற்ற ஒரு விடயமாக இருந்தால் ஒரு கிழமைக்கு முன்னர் அந்த விடயத்தை செய்திருக்க வேண்டும். எவ்வாறு இருப்பினும் வாசு இன்னமும் பாதுகாப்பாக அரசியல் அடிப்படையில் நிர்வாணமாக அமைச்சுப்பதவியில் இருக்கின்றார். ரட்டே ரால ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்ட விடயம் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையேயே கலந்துரையாடலானது  ஒரு அரசியல் உபாயம்  என்று. அந்நிலைப்பாட்டில் ஒரு தசமமேனும் மறுபுறம் வர ரட்டே ரால தயாராக இல்லை.   

இந்த இடத்தில் மொட்டுவை போன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் தற்காலிக  நலன்கள் ஏற்பட்டுள்ளது.மொட்டுபக்கத்தில்  அவர்கள் செய்திருப்பது அடுத்த கட்டம் நகரும்வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தற்காலிகமாக ஒரு இணக்க நிலைக்கு செல்வதாகும்.சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இன்னும் சில நாட்களுக்கு கௌரவத்தை பாதுகாக்க மொட்டுவினுள்ளே  இருப்பதற்கு சந்தர்ப்பத்தை செய்துள்ளனர். அந்த இடத்திற்கு பொருத்தமாக அமைவது நீர் கொதிக்கும் வரை வெளியிலே நண்டு துடிப்பதை போன்றாகும்.

அடுத்ததாக விமல் மற்றும் கம்மன்பில முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டது போன்று தோல்வியடைந்தும் இருக்கின்றார்கள். உண்மையில் தற்போது சிறிய கட்சி கூட்டணி 10 க்கும் எஞ்சியிருப்பது  ரட்டே ரால குறிப்பிட்ட 03 மாற்று வழிமுறைகள் உண்டு.  முதலாவது ராஜபக்சக்களுக்கு அடுத்த தடவை  அடிபணிவது, இல்லை என்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அணியில் இணைந்து கொள்வது, அவ்வாறு இல்லை என்றால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்வது. இன்னும் ஒரு மாற்று வழி இருக்கின்றது. அது என்னவென்று சொன்னால் அவர்களுக்கு அதற்கு தைரியம் கிடையாது. அதனால் அது தொடர்பில் கதைத்து எந்த பிரயோசனமும் கிடையாது. இந்த இடத்தில்  குறிப்பிட வருவது ராஜபக்ஷக்களின் அரசியல் உபாயம் வெற்றியளித்துள்ளது.  உண்மையில் அரசியல் உபாயநுட்பத்தில் ராஜபக்சக்கள் சூப்பர்மேன் போன்றவர்கள். 

உண்மையில் இவ்வளவு சமூக எதிர்ப்பு இருக்கின்ற இந்த அரசாங்கம் இவ்வாறு வீழ்ச்சி அடையாமல் இருக்கமுடியுமா? எவ்வாறு இருப்பினும் இந்த இடத்தில் ரட்டே ராலவினர சிந்தனைக்கு வருவது விமலை நிறுத்தினாலும் பின்னர் பெஸில் கூறிய கதைதான்.

அடிப்படைவாதம் இல்லாத தேசிய அரசாங்கம் ஒன்றை அனைவரையும் இணைத்து மேற்கொள்ள வேண்டும் என்று பெசில் குறிப்பிட்டிருந்தார்.ரட்டே ரால குறிப்பிடுவது பெசிலின் அந்த கருத்தினுள்ளே ராஜபக்ஷக்களின் அடுத்த அரசியல்  தந்திரம் மறைந்து காணப்படுகின்றது. 

உங்களுக்கு ஞாபகம் இருக்கும் ஒரு வருடத்துக்கு முன்னர் அந்த கதையை ரட்டே ரால குறிப்பிட்டிருந்தார். ராஜபக்ஷக்களின் இறுதி பதில்தான் தேசிய அரசாங்கம்.  உண்மையில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக ராஜபக்ஷக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்ற அழுத்தம் காரணமாக தற்போது உள்ள ஒரே தீர்மானமாகவும் இறுதியானதாகவும அது காணப்படுகின்றது. வரலாற்றில் வெள்ளையர்கள் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் மீண்டும் காலணித்துவத்திற்கு உட்படுத்த முடியாத ஒரு நிலைமை ஒன்று உருவாகியது. 

அந்த சந்தர்ப்பத்தில் வெள்ளையர்கள் தங்களுடைய தந்திரமாக பயன்படுத்தியது காலணித்துவம் என்ற விடயத்துக்கு பதிலாக புதிய காலணித்துவம் ஆட்சி என்ற விடயமாகும். ராஜபக்ஷக்களும் தற்போது செய்து கொண்டிருப்பது அவ்வாறான ஒரு வேலையைத்தான். தங்களுடைய ஆதிக்கம் இல்லாமல் போகின்ற சந்தர்ப்பத்துக்கு முன்னர் புதிய ஒரு ஆதிக்கத்துடனான முறைமையொன்றுக்கு மாறுவதற்கே ஆகும். 

உண்மையில் அன்று ரட்டே ரால குறிப்பிட்டது தேசிய அரசாங்கம் தற்போது இருப்பது கை அளவு தூரத்தில் என. தற்போது அங்கு முன்னோடிகள் வர ஆரம்பித்துள்ளார்கள்.மஹிந்த மற்றும் பெசிலின் கதைகளிலிருந்து  அவற்றை தெளிவாக காண முடிகின்றது. நேற்று  ரணிலிடம் இருந்தும் ஒரு கதை ஒன்று வெளியிலே வந்தது. ரணில் குறிப்பிடுவது எல்லாவற்றிற்கும் முதலாக நாட்டை பாதுகாக்க வேண்டும்.  

அதன் பின்னர் தேர்தலுக்கு செல்ல வேண்டும். உண்மையில் அதனை பார்க்கின்ற சந்தர்ப்பத்தில் அது  மிகவும் முற்போக்கான எண்ணமாகும். எவ்வளவு தடவைகள் இவர்கள் நாட்டை காப்பாற்றி இருக்கின்றார்கள்? அடுத்ததாக ரட்டே ரால குறிப்பிடுவது நேற்று ராஜபக்சக்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் சர்வகட்சி கதையை  கொண்டு வந்தது அவ்வாறான ஒரு நோக்கில்தான். 

அது மெதுவாக தேசிய அரசாங்கத்திற்கு திரும்பக்கூடும். அடுத்ததாக இவர்கள் தேசிய அரசாங்கத்தின் எண்ணக் கருவின் உள்ளே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சிறைப்படுத்த முயற்சிக்கின்றார்கள். தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் 45 வரை செல்ல முடியும். தேவையெனில் அதற்கும் அப்பால் செல்லமுடியும்.அது கரட் இலையைதான் இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு ஒரு இடத்தில் காட்டுகின்றார்கள். அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறு பிரிவினர் ஏமாந்துவிட்டு நிர்க்கதியாகும் நிலையும் ஏற்படலாம்.

அடுத்ததாக ஜனாதிபதி  விசேட பொருளாதார சபையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி பெற்றுள்ளார்.  ரட்டே ரால அங்கு இருக்கக்கூடியவர்களை  நோக்கியபோது கடவுள்தான் ஞாபகத்திற்கு வந்தது. 

கோட்டாபய, மஹிந்த,பெசில், பந்துல,ஜொனி,மஹிந்தானந்த,ரமேஷ்,  கப்ரால், காமினி செனரத்,மத்திய வங்கியின் ஒருவர்,ஆட்டிகலவும் உள்ளனர். அதனை விட சிறப்பானது அல்லவா அமைச்சரவைக்கு ஒரு நாளாவது கப்ராலையும், மத்திய வங்கியின் ஒருவரையும்,ஆட்டிகலவையும்  அந்த இடத்திற்கு கொண்டு வருவது. உண்மையில் இதனை செய்தது அமைச்சரவையை விட்டுவிட்டு நாட்டினுடைய மக்களுடைய கண்களை மூடி ராஜபக்சக்களின் விற்பனை செய்து தரகுப்பணம் பெறும் பொருளாதாரக் கொள்கையை எவ்வித தடையுமின்றி கொண்டு செல்வதற்கான முறைமையை  ஏற்படுத்துவதற்கே ஆகும். 

தேசிய அரசாங்கம் வரும்வரை செல்லுவதற்காக ஏற்படுத்திய முறைதான் அவை.அதாவது மேற்கத்தேயமும் இந்தியாவும் அவசியமான அடிப்படையில் நாட்டினுடைய பொருளாதாரத்தை மேற்கொள்வதாகும். தற்போதும் நேரடியாக இந்தியா அடுத்த செய்யவேண்டியதை குறிப்பிடுகின்றது.  அதனை சரியாக ஆராய்ந்து பார்த்தால் நேற்று முன்தினம் இந்தியாவினுடைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜெய்சங்கரின் ட்விட்டர் செய்தியை தெளிவாக பார்த்தால் விளங்கக் கூடியதாக இருக்கும். உண்மையில் ரட்டே ரால குறிப்பிடுவது இந்த தேசிய அரசாங்கத்தின் பின்னால் இருப்பது இந்தியா ஆகும் என்று.

அரசாங்கம் நேற்று ரூபாயின் பெறுமதியை  குறைப்பதற்கு எடுத்த தீர்மானமானது உண்மையில் இந்தியாவினுடைய ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்றதாக அமையக்கூடும்.  அதனால் தேசிய அரசாங்கம் வரும் என்று கூறுகின்ற அதனுள் இருக்கக்கூடிய முன்னோடிதான்  விசேட பொருளாதார சபை. ஒட்டுமொத்த பொருளாதாரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கின்ற குடும்பமாக அவர்கள் உள்ளனர். தற்போது அமைச்சரவைக்கு கூட அச்சத்தர்ப்பம் இல்லை. உண்மையில் ராஜபக்சக்களுக்கு தேசிய அரசாங்கம் அவசியமானது 

சுருக்கமாக சொல்லப்போனால் இயலாமைக்கே. இந்த  நாட்டினுடைய மக்கள் இன்னமும் அதனை சரியாக விளங்கி எடுக்காத போதும் ராஜபக்சக்கள் அதனை சரியாக விளங்கியுள்ளார்கள். தங்களுடைய இயலாமையை இன்னொருவர் மேல் சுமத்தி  இயலாமையை பொது ஒரு தன்மையாக மேற்கொள்கின்ற அபூர்வத்தையும் இயலாமைக்கு மத்தியில் ராஜபக்சக்கள்  மேலெழும் முயற்ச்சியையும் பாருங்கள். இந்த சந்தர்ப்பத்தில் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷக்களுக்கு பதில் எதுவும் இல்லை. சரியான வேலைத்திட்டம் இல்லாமல் அதற்கு பதில் இருக்கின்றது என்று ராஜபக்சக்கள் தலைக்கணம் பிடிப்பார்களாயின் ரட்டே ரால அதனை ஏற்றுக் கொள்வது இல்லை. 

உண்மையில் இந்தப் பிரச்சினைக்கு ராஜபக்ஷக்களுக்கு பதில் ஏற்படுத்தவே முடியாது.

அடுத்ததாக ராஜபக்ஷக்களுக்கு இருக்கக்கூடிய முக்கியமான ஒரு விடயம் சர்வதேச அழுத்தத்தினால் ஏற்படுகின்ற பிரச்சினையாகும். இவ்வளவு காலமும் இருந்த பிரச்சனைகளுக்கு மேலதிகமாக தற்போது ஒரு பிரச்சினை சர்வதேசத்திற்கு சென்றுள்ளது. எவ்வாறு இருப்பினும் இப்பிரச்சினைக்கு அரசாங்கம் தற்போது எவ்வித மறுமொழியும் இல்லாமல் இருக்கின்றது. தற்போது அது தொடர்பில் அறிக்கை ஒன்றை ஜெனீவா ஆணைக்குழுவுக்கு கோரியுள்ளது. அரசாங்கம் அனுப்புகின்ற அறிக்கைக்கு புறம்பாக  கத்தோலிக்க சபையும் அறிக்கையொன்றை அனுப்பும். அதனால் அரசாங்கம் பொய் அறிக்கையை அனுப்பி தப்பித்துக் கொள்ள முடியாது.

தற்போது அரசாங்கத்துக்கு இந்த பிரச்சினையில் இருந்து  சிறிது தப்பித்துக் கொள்ளவே  தேசிய அரசாங்கம் தேவைப்படுகின்றது.  அதேபோன்று தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதாயின் அரசாங்கத்திற்கு ரணிலும் தேவையாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் இந்த மொட்டுவோடு  தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்த ரணில் விருப்பம் தெரிவிப்பாரா? இது அடுத்த ஒரு பிரச்சனையாக அமைகிறது. ரட்டே ரால குறிப்பிடுவது தற்போது ரணில் விருப்பமாக இருக்கக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.  ரணில் இவ்வாறு  குழந்தை போன்று பாராளுமன்றத்தில் உள்ளார் என்று ஐக்கிய தேசிய கட்சிக்கு இருந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியினுடைய ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த ஒரு பிரதிபலனும் நடைபெறாது என்று ரணிலுக்கும் தெரியும்.

எரியும் அரசாங்க எதிர்ப்பு தற்போது ஐக்கிய தேசிய கட்சியை ஒரு போதும் சூழாது. எல்லாம் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் எழுச்சி, இல்லையென்றால் 43 க்கு. அதனால் ரணில்  அவருடைய போலித்தனமான அறிவை பயன்படுத்தி விடையை கண்டுபிடித்தால்  பதிலாக இருப்பது தேசிய அரசாங்கம். அதனால்தான் ரணில் தற்போதே நாட்டை பாதுகாப்போம் என்ற வசனத்தை குறிப்பிடுகின்றார். ரணில் தேசிய அரசாங்கத்தில் உள்ளே வருகின்ற தீர்மானமானது ரணிலுக்கு அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய பங்கின்  அடிப்படையிலேயேதான்.ரணிலுக்கு சிறிய சலுகை வழங்கப்படாது.அடுத்ததாக ரணிலுக்கு பணத்தால் சண்மானம் வழங்கவும் முடியாது.  ரணில் கேட்பதென்றால் ஐக்கிய தேசியக் கட்சியினுடைய அதிகாரத்திற்கு  என்ன என்றுதான் கேட்பார். தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஐந்து, ஆறு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் மீண்டும் அவை புதுப்பிக்கப்பட்டுள்ளதாம். அதன்படி  ஐக்கிய தேசிய கட்சிக்கு தேசிய பட்டியல் உறுப்பினர்கள் ஐந்து வழங்கப்படும். சில சந்தர்ப்பங்களில் அது நடைபெறாமலும் இல்லை. அவ்வாறு நடைபெறுவதாக இருந்தால் ரணிலுடன் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் வருவார்கள். அது உறுதியானது. அவசியம் எனின் பெயரோடு அவற்றை குறிப்பிட முடியும்.

பொதுவாக குறிப்பிட்டால் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின்  வயது வந்தவர்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் 3,4 பேரும் உள்ளனர். அந்த இடத்தில் ரணில் எதிர்பார்ப்பது ஒரு பிரதமர் பதவியை. ரணில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் மேற்கத்தைய தொடர்பை பயன்படுத்தி  ஏதோ ஒன்றை செய்வார். அந்த இயலுமை அவரிடம் உள்ளது. அதன் பின்னர் உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை பாதுகாத்த தலைவர் என்ற அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியை உயர்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஐக்கிய தேசியக்கட்சி என்பது அதிகாரத்தோடு விரைவாக மேல்எழும்  கட்சியாகும். ஐக்கிய தேசிய கட்சியை வலுவானதாக மாற்றியமைக்கும் வேளை  ஐக்கிய மக்கள் சக்தியை முடக்குவதற்கு ரணிலுக்கு தேவை. இந்த சந்தர்ப்பத்தில் தேசிய அரசாங்கம் ஏற்படுத்தப்படும் ஆக இருந்தால் அது நடைபெறுவது ஐக்கிய மக்கள் சக்தியை இரண்டாக உடைத்துவிட்டே ஆகும். இன்னும் சில கட்சிகள் அதிலிருந்து விடுபட்டு இணைய முடியும். விசேடமாக தமிழ் கூட்டணி ,முஸ்லிம் காங்கிரஸ்,ரிசாட் போன்றவர்களும் வர முடியாமலும் இல்லை. இதுதான் அடுத்ததாக  அரங்கேறக்கூடிய நாடகம் ஆகும்.அவ்வாறு நடைபெற்றால் அந்த இடத்தில் இன்னும் பலர் வெளியேறுவர்.

கட்டாயமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு  மீதம் இருப்பதை எடுத்துக் கொண்டு வெளியிலேயே போக வேண்டி ஏற்படும். சஜித்துக்கும் பாரி பாதிப்பு ஏற்பட்டு வெளியில் இருக்க வேண்டி ஏற்படும். நாற்பத்தி மூன்றுக்கும் அப்படியே. இருப்பினும் ராஜபக்சக்கள் இந்த இடத்தில் சம்பிக்கவுடன் ஏதாவது ஒரு பேரம் பேசுகின்ற முறையை மேற்கொள்ள பார்ப்பார்கள். ரணில் மூலமாகவும் அதனை செய்வார்கள். ஏனென்றால் விமல், கம்மன்பில இல்லாத சிங்கள பௌத்த தன்மையை பேசுவதற்குரிய நபர் இல்லாத ஒரு விடயமாகும். இருப்பது கலகொட அத்தே ஞானசார தேரர் மாத்திரமே. அதனால் அந்த தேசிய அரசாங்கத்தில் பாட்டலிக்கு பெறுமதி இருக்கும். அடுத்ததாக எதிர்க்கட்சியாக தேசிய மக்கள் எழுச்சி வருவதற்கு சாத்தியக்கூறுகள் ஏற்படும். அந்த சந்தர்ப்பத்தில்  மக்கள் விடுதலை முன்னணி கடைபிடிப்பது டில்வினின் அடிப்படைவாத கொள்கை என்றால் அதற்கும் நல்ல பதில் கிடைக்கப் பெறும். 

அவ்வாறான ஒரு கண்காட்சிக்கு இடையேதான் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சியின்  பொதுவேட்பாளர் உருவாகுவார். அது யார் என்று  பார்ப்போம்.

மைத்ரி,சஜித்,அனுர,பாட்டலியா. இல்லை என்றால் கருவா? சிராணி பண்டாரநாயக்கவா? நீங்ஙகள் நினைக்கக் கூடும் ரட்டே ரால ரம்மியமான கதை குறிப்பிடுகின்றார் என்று .பரவாயில்லை தற்போது அவ்வாறு மனதில் வைத்துக்கொண்டு உள்ளவர்கள் எங்களுக்கு எதிர்காலத்தில் ஒரு தினத்தில் இந்த விடயம் தொடர்பில் கதைக்க கூடியதாக அமையும்.

அவ்வாறாயின் போய் வருகின்றேன் கடவுள் துணை ,வெற்றி கிட்டட்டும
இப்படிக்கு
ரட்டே ரால


Vettai Email-vettai007@yahoo.com
 

Post a Comment

Previous Post Next Post