புகழ்!

புகழ்!


வாழ்வில் புகழ் எதற்கு நண்பா ?
பகல் போனால் இரவு தானே 
புகழ் போனால் சரிவு தானே 
வாழ்க்கையிலே நகல் வாழ்க்கையிலே!

வானில்- உயரப் பறக்கும் பறவைகளும்
தரையில் இறங்க வேண்டும் உணவுக்காக
வானில்- சுட்டு எரிக்கும்  சூரியனும் 
முறையாய் மறைய வேண்டும் இருளுக்காக!

வாழ்க்கை புகழுக்காக வாழ்ந்து வந்தால்
ஒருநாள்  சரிவில் தானே முடியும் 
புகழ்ச்சிக்காக வாழ்பவர்கள் போகப்போக புரியும்
பிறர் மகிழ்ச்சிக்காக வாழ்ந்து வந்தால்,
அழகாய் மனதில்,வையகமே புகழும்
வாழ்க்கை உயர்ந்த நிலை அடையும்!

வாழ்வில் எல்லா புகழும் இறைவனுக்கு
நினைத்து வாழ்ந்தால் ஜெயம் எமக்கு
மண்ணில் -அரசன் முதல் ஆண்டி வரை
மனதில்  கொஞ்சம் புகழுக்காக அடிமை
புகழின்  தன்மை   விலகிக்  கொண்டால் 
உலகில் வாழ்க்கை எல்லாம்  இனிமை!

புகழைத் தேடி சென்று விட்டால்
நிழலாய் தொடர்ந்து சரிவு வரும்
புகழை மறந்து  நன்மை செய்தால்
புகழே  எம்மை  தேடி வரும்!

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post