ஜெயவர்தனே மும்பை அணியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும்

ஜெயவர்தனே மும்பை அணியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும்

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளது.

இதனிடையே சமீபகாலமாக நாட்டுக்காக விளையாடுவது முக்கியமா? இல்லை ஐபிஎல் முக்கியமா? என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதில் சிக்கியுள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்தனே  தங்கள் அணிக்கு திட்டங்களை வகுத்துக் கொடுக்கும் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். 

ஆனால் தற்சமயம் ஐபிஎல் தொடருக்காக மும்பை அணியுடன் இருக்கும் அவர் வீடியோ கால் மூலம் இலங்கை வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய சுற்றுப்பயணத்தின் அந்த அணி படுமோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஜெயவர்தனே மீது கடும் அதிருப்தியில் உள்ளது. 

தேசிய அணியுடன் இருக்க முடியாத ஜெயவர்தனே பணம் கொட்டும் ஐபிஎல்-ல் மட்டும் முழு நேரமும் இருக்கிறார். எனவே இலங்கை அணியுடன் அவர் இனி முழு நேர பயிற்சியாளராக மட்டுமே இருக்க வேண்டும் என அந்நாட்டு வாரியம் தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

அப்படி அறிவிப்பு வெளியானால் நிச்சயம் ஜெயவர்தனே மும்பை அணியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்பதால் என்ன நடக்கப் போகிறது என ஐபிஎல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post