சவூதி அரேபியாவிடம் கெஞ்சும் இலங்கை - சூரிய ஒளியில் வாகனங்கள் ஓடும் என்று பெருமை அடித்தவர்கள் எங்கே?

சவூதி அரேபியாவிடம் கெஞ்சும் இலங்கை - சூரிய ஒளியில் வாகனங்கள் ஓடும் என்று பெருமை அடித்தவர்கள் எங்கே?


அரபு நாடுகளின் உதவி எங்களுக்கு தேவையில்லை.அவர்களுடைய பெட்ரோலும் தேவையில்லை.சூரிய ஒளியில் வாகனங்கள் ஓடும் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவோம்..சவுதி அரேபிய ஒரு பயங்கரவாதத்தை பரப்பும் நாடு,,உலக நாடுகளில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு சவுதி அரேபியா நிதி உதவிகள் செய்கின்ற நாடு எங்களுக்கு அவர்களின் உதவிகள் தேவையில்லை,இலங்கையில் இருக்கின்ற முஸ்லிகளும் அரபு நாடுகளுக்கு போய் விடவேண்டும்,ஹிஜாப் .புர்கா எல்லாம் நம்ம பெளத்த நாட்டில் சர்வராது சவுதியில் போய் போட்டுக்கொள்ளுங்கள்.

மக்களை கொலை செய்யும்படி குர்ஆனில் அல்லாஹ்தான் கட்டளையிட்டிருக்கின்றான் ,நபிகள் நாயகமும் அதைதான் வலியுறுத்தியுள்ளார் என்று இலங்கை வாழ் முஸ்லிகளுக்கு எத்தனை எத்தனை கொடூரங்களை செய்திருப்பார்கள் இந்த இனவாதிகள்?  

காரணமேயில்லாமல் முஸ்லிகளின் சொத்துக்களை சூறையாடி,கொலைகள் செய்து,வியாபாரங்களை நிர்மூலமாக்கி அவர்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற ராஜபக்ஷக்களின் கனவு இன்று சிதைந்து விட்டதோ? 

சவுதி அரேபியாவைப் பற்றி எப்படியெல்லாம் கேவலமாய் பேசியிருப்பார்கள்?.அரபிகளை மிருகத்தனமானவர்கள் என்று சாதாரண மக்களின் நெஞ்சில் பதியவிட்டு அதே மக்களை முஸ்லிகளுக்கு எதிராக இனவாதச் செயல்களில் ஈடுபடவைத்த அரசியல்வாதிகள் எங்கே?

முஸ்லிகளின் உணவில் கைவைத்தார்கள் .உடையில் கைவைத்தார்கள் .வியாபாரத்தில் கைவைத்தார்கள்,குர்ஆனில் கை வைத்தார்கள்.இன்று இஸ்லாமிய சட்டங்களில் மாற்றம் வேண்டும் என்று இஸ்லாமிய சட்டங்களை மாற்ற நினைக்கின்றார்கள் .

எது எப்படியோ இலங்கையை அதளபாதாளத்தில் தள்ளிவிட்டவர்கள் மேற்குறிப்பிட்ட இனவாதிகள்தான்என்று இலங்கை மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்.

மக்கள் இன்று உணவுக்காக அலைகின்றார்கள்.மருந்துகள் தட்டுப்பாடு,எரிபொருள் தட்டுப்பாடு,கிட்டத்தட்ட சோமாலியாவின் நிலைக்கு இலங்கை பயணிப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றார்கள்.

இந்நிலையில் சீன உதவுவதாய் சொல்லிக்கொண்டு இலங்கையில் சில இடங்களை தன் வசப்படுத்திக்கொண்டும் வட்டிக்கும் கடன் கொடுத்து உதவினார்கள்.அப்படியும் தலை தூக்க முடியாத நிலை.
இந்தியாவும் கடுமையான நிபந்தனையுடன் ,வட்டிக்கு 
கொடுத்தார்கள் ,அப்படியும் தலை நிமர முடியாத நிலை.

பாகிஸ்தான் ,பங்களாதேஷ் போன்ற நாடுகளும் முடிந்த அளவு உதவினார்கள்.

ஆனாலும் இலங்கையால் சமாளிக்க முடியாத நிலை .வட்டி எவ்வளவு மோசமானது என்பதற்கு இலங்கை ஒரு உதாரணம் .

இவர்களின் கடைசி முயற்சிதான் அரபு நாடுகள்.வட்டியில்லாக் கடன்.கடுமையான  நிபந்தனைகள் இல்லாத உதவிகள்,இலவசமான உதவிகள் என்று பலவிதமான உதவிகள் அரபு நாடுகளை தவிர வேறு எந்த நாடும் செய்வதில்லை.

மக்களுக்கு ஜாதி மதம் பாராமல் இலவசமாய் தொழில் வாய்ப்புக்ளை வழங்குபவர்கள் அரபு நாடுகள் மட்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இன்று பல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊத்திடம் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் வெளிநாட்டு அமைச்சருடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே கோட்டாபய ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி  ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் துறைமுகநகர் சார்ந்த வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து கோட்டாபய ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனாத் தொற்றுநோயின் காரணமாக, இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட தாக்கம் தொடர்பில், இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊத்தின் அவதானம் செலுத்தப்பட்டதுடன், பரிமாற்றங்கள் குறைதல், சுற்றுலாத் துறையின் வீழ்ச்சி, மின் உற்பத்தியில் வறட்சியான காலநிலையின் தாக்கம் மற்றும் ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான தேவை பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமது நாடும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்ட சவுதி வெளிநாட்டு அமைச்சர், இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அரபு நாடுகளுடனான நல்லுவரை தொடர்ந்தும் நம் நாடு பாதுகாத்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
அதற்கு இனவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும் .

அரபு நாடுகளில் இனவாதம் இல்லை.நீ இந்துவா ,பெளதனா,கிறிஸ்தவனா.முஸ்லிமா என்ற பாகுபாடுகள் இல்லை. 

மனிதர்களை மனிதர்களாய் மதிக்கும் பண்பு அரபு நாடுகளில் மட்டுமே இருக்கின்றது. 

அதனால்தான் அவர்களுக்கு அல்லாஹ் எந்தக் குறையும் இல்லாமல் மீண்டும் மீண்டும் வழங்கிக் கொண்டிருக்கின்றான்.
 
பாதாளத்தில் சிதைந்து கிடக்கும் இலங்கையை மீட்டு ஒற்றுமையாக மக்கள் வாழும் நாடு என்ற நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால் இனவாதத்தை அரசியல்வாதிகள் கைவிடவேண்டும்.

இனவாதத்தை கையில் எடுத்த எந்த ஒரு நாடும் உருப்பட்டதாய் சரித்திரத்திலும் இல்லை   


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post