Ticker

6/recent/ticker-posts

Ad Code



திராவிடத் தலைமகன் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!



      01.03.22     
திராவிடக் கூட்டத்தை
திராவிடமாடல் கொண்டு
தீவிரமாய் வழிநடத்தும்
திராவிடத் தலைமகனே!

உங்களில் ஒருவனென்று
உளமாறக் கூறிக்கொண்டு
எங்களோடு பயணிக்கும்
எங்கள் தங்கமே!

அய்யன் வள்ளுவனின்
அறவழியை ஆட்கொண்டு
பகுத்தறிவுப் பகலவனின்
பகுத்தறியும் துணைகொண்டு
பேரறிஞர் அண்ணாவின்
பேராற்றல் மிகக்கொண்டு
முத்தமிழ் அறிஞரின்
முத்தான திறன்கொண்டு
இனமானப் பேராசான்
இனங்கண்டு எமக்கீந்த
இனங்காக்கும் அரணாக
இருந்தெம்மை ஆட்கொண்ட
செயற்கரிய செயலாற்றும்
செயலறிஞர் ஸ்டாலின்!

நித்தம் ஒருதிட்டம்!
சத்தம் சிறிதுமின்றி!
எத்திக்கும் புகழ்மணக்கும்
தித்திக்கும் நலத்திட்டம்!

ஒன்றிணைவோம் வாவென்று
ஒற்றுமையை வலியுறுத்தி
ஒன்றியத்தின் ஆட்சியரை
ஒண்ட விடாதடுத்தாய்!

இன்னுயிரைக் காக்க
"இல்லந்தேடி மருத்துவம்!"
நுண்ணுயிர் கொரானாவால்
கண்ணாம் கல்வியை
பாதியில் விட்டுச்சென்ற
பாமரமணிகள் தன்னை
இனித்துரைத்து கல்விபெற
"இல்லந்தேடி கல்வி!"
எத்தனையோ திட்டங்கள்!
அத்தனையும் அற்புதங்கள்!

அனைவரையும் அரவணைத்து 
வானுயர மேலுயர்த்தும்
அருமையான திட்டங்கள்!
பெருமையான திட்டங்கள்!
இன்றைய பயனோ
நேற்றைய உழைப்பு!
இன்றைய சிறுவர்
நாளைய உலகம்!
பாடிச் சென்றார்
பாவலர் ஏறு!
இளைய தமிழகம் 
தலை நிமிர்ந்திட!

திறன் மேம்பாட்டில் 
தலை சிறந்திட!
நின் பிறந்தநாளில்
"நான் முதல்வன்!"

உழைப்பால் உயர்ந்த
உன்னதத் தலைவனே!
பாராள வந்த
பறம்பின் பாரியே!
தாராளமாய் நீதரும்
தரமான திட்டத்தால்
ஏராளமாய் எளியோர்
ஏற்றம் பெறுவர்!

காரிருளைக் கிழிக்கும்
செங்கதிரோன் போல!
வானின்று வழங்கும்
மாரியைப் போல!
வேண்டுதல் வேண்டாமையின்றி
வேறுபாடு ஏதுமின்றி
சமத்துவ சமுதாயத்தை
செதுக்கும் சிற்பியே!

நீதிக்கட்சி ஆட்சியின்
நீட்சியாய் வந்த
சமூகநீதிக் காவலரே!
சமத்துவ முதல்வரே!
வாழ்க பல்லாண்டு!
வாழிய வாழியவே!


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

0 Comments