தனியார் சர்வதேச ஆங்கில மொழிப் பாடசாலைகள் (International Schools)பற்றிய ஓரு நோக்கு.

தனியார் சர்வதேச ஆங்கில மொழிப் பாடசாலைகள் (International Schools)பற்றிய ஓரு நோக்கு.

தனியார் சர்வேதேச ஆங்கில மொழிப் பாடசாலைகள் மூலம் மாணவர்களுக்கு நன்மைகள்இருப்பது போலவே தீமைகளும் காணப்படுகின்றன.

நகர் புரங்களில் பிரபலஅரச தமிழ் மொழி மூல அல்லது சிங்கள மொழிமூல பாடசாலைகளில் அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல்களுக்கு ஓரு பெரிய தீர்வாக அமைகிறது. மேலும் தமது பிள்ளைகளும் ஆங்கிலத்தில் சீக்கிரமாக பேசுவதை பார்க்க ஆசைப்படும் பெற்றோர்க்கும் வாய்ப்பை அளிக்கிறது. அதையும் தாண்டி எமது பிள்ளை இங்கிலிஷ் மீடியம்   என்று பெருமையாக பேசவும் உதவியாக இருக்கின்றது. 

எல்லா தனியார் சர்வதேச ஆங்கில மொழிப் பாடசாலைகளிலும் நடக்கும் LKG UKG ஆடல் பாடல் என்பவற்றால் பெற்றோர் பரவசப் படவும் முடியும்.

 இது போன்ற எதிர்பார்ப்புகளை விட தனியார் பாடசாலைகள் பற்றிய முக்கியமான தெளிவுகள் பெற்றோர்க்கு  தேவை.  

ஆங்கிலம் என்பது ஒரு பாஷை. அதை எப்போதும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆங்கில மொழியில் கல்வியை தொடரும்போது சிலருக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு மாணவர்களாளோ  அல்லது பெற்றோராளோ  தாக்குப் பிடிக்க முடியாது போனால், மாணவரின் எதிர்காலம் - ஆங்கிலம் கற்ற இடைவழி தஞ்சம் ஆகும்.
தனியார் ஆங்கில மொழிப் பாடசாலை(International Schools) என்பது ஓரு வியாபார வடிவமாகும். அநேகமாக அதன் உரிமையாளர்கள் முதலாளிகளாகத் தான் இருப்பார்கள். 

அதிபர் ஓரு ஓய்வு பெற்ற பாடசாலை  அதிபாராக அல்லது ஓய்வு பெற்ற ஆசிரியராக இருப்பார். மற்றும் இங்கு மாணவர்களுக்கு கற்பிக்க O/L, A/L வரை படித்த நன்றாக ஆங்கிலம் பேசும் இளம் பெண் ஆசிரியைகள் கூடுதலாக இருப்பார்கள். இவர்கள் பாடங்களுடன் தொடர்பான பட்டதாரிகளாகவோ அல்லது கற்பித்தல் தொடர்பான பயிற்சிகள் பெற்றவர்களாகவோ, உளவியல் அறிவை பெற்றவர்களாகவோ இருக்கும் வாய்ப்பு அரிது.

 உங்கள் பிள்ளைகளுக்கு தகுதிவாய்ந்த  ஆசிரியர்களை அமர்த்தி அவர்களுக்கு கூடிய சம்பளம் வழங்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.  

சிறியதோர் சம்பளத்தை வழங்கி பாடங்களை எடுத்து மாணவர்களின் மாதாந்த கட்டணத்தை அரவிடுவதே நோக்கமாக இருக்கும். 

எனவே படித்து வீட்டில் அலுப்பாக இருக்கும் இளம் யுவதிகலை ஆசிரியைகளாக அமர்த்துவத்தில் சிரமம் இல்லை. அவர்களுக்கு வேண்டியது சம்பளம் அல்ல. பயோ டேட்டாவில் சர்வதேச பாடசாலை ஆசிரியை என்று போட்டு விடுவது தான் முக்கியம் . 

மாப்பிள்ளை அமைந்து விட்டால், மாம்மை கண்டுபிடிக்கவும் முடியாது.

 ஆங்கில மொழி மூல பாடங்களை சிறிய வகுப்பு மாணவர்களுக்கு இப்படியான ஆசிரியைகளினால் கற்பிக்க முடிந்தாலும், O/L தரம் வரும்போது தகுதி வாயந்த  ஆசிரியர்கள் இல்லாது போனால் பல மாணவர்களின் கற்கை  அத்தோடு முடிந்துவிடும். 

இந்த குறையை மறைக்க நிறுவாகமானது மாணவர்களை வெளி ஆசிரியர்களிடம் அனுப்புவது அல்லது வெளி ஆசிரியர்களை கொண்டுவருவது போன்ற வழிகளைக் கையாலும். ஆனால் பெரிய கட்டண செலவை மாணவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

 எந்த மொழியில் படித்தாலும் O/L,A/L என்பது தீர்க்கமான ஓரு தடை தாண்டல். அதன் பின்னர் மேல் படிப்புகளில் அல்லது பட்டப் படிப்பில் ஆங்கிலம் தானாக வந்து விடும். அப்படி வரா விட்டாலும் வாழ்வில் தோற்றுப் போவதில்லை. 

முயற்சி செய்து தேவைக்குரிய ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளலாம்.
இலங்கை முழுவதிலும் கூட எல்லாத் தகுதியும் உடைய பத்து தனியார் ஆங்கில மொழிப் பாடசாலைகள்  இல்லை என நினைக்கிறேன். 

எனவே உங்கள் குழந்தை செல்வங்களை  ஆங்கில மொழி கொட்டகைகளில் சேர்க்கும் முன் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். 

அநேகமாக தனியார் ஆங்கில மொழிப் பாடசாலைகளில் போதிய இட வசதி, காற்றோட்டம், மலசலகூட வசதிகள் என்பன சரியான முறையில் இருப்பது குறைவு.  

பிள்ளைகளின் கல்விநிலை பற்றி அரச பாடசாலைகளில் போல பரீட்ச்சிக்கப் படுவதும் இல்லை.  அதட்குறிய எற்பாடு இருந்தாலும் அதை நிர்வாகம் அநேகமாக செய்யாது. 

மேலும்,அரச  பாடசாலைகளில் கூட ஆங்கிலப் பிரிவில் தகுதி இல்லாத பிள்ளைகளை ஆசைப்பட்டு தள்ளிவிட வேண்டாம். மாணவர்களிடம் போதிய தகுதியும், தகுதியான ஆசிரியர்களும், மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் உதவக்கூடிய வீட்டுச் சூழலும் இருந்தால் பயப்படத் தேவை இல்லை.

ஆங்கிலப் பாஷை அறிவு நல்லதாக இருப்பின் மேற்படிப்புகளுக்கும், பலவிடையங்களை தேடிக் கற்கவும் உறுதுணையாக இருக்கும். பல அறிவியல், விஞ்ஞான புத்தகங்கள் கூடுதலாக ஆங்கில மொழியில் தான் காணப்படுகின்றன. 

இணையத்தில் தேடிக் கற்கவும் ஆங்கிலம் உறுதுணையாக இருக்கும். ஆனாலும், இவற்றை வைத்து GCE O/L, A/L தகமை கூட இல்லாமல் போகும் நிலைக்கு ஆளாகாமல் ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படலாம். இவர்களுக்கு தாய்மொழியிலேயே வழிகாட்டி இடையில் படிப்புக்கு முட்டுக் கட்டை எற்படாதவாறு சிந்தனையோடு செயல்பட வேண்டும்.

குறிப்பு : இது எவரையும் குறிவைத்து எழுதப்பட்ட ஓன்று அல்ல. சமூக நலன் கருதி ஓரு தெளிவூட்டளுக்காக எழுதப்பட்டது.


Vettai Email-vettai007@yahoo.com


Post a Comment

Previous Post Next Post