
கோவை உக்கடம் பகுதியில் உள்ள 1500 மாணவர்கள் பயிலும் ஹோலி பேமிலி கான்வென்ட் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் மிகச்சிறப்பாக 07-04-2022 அன்று, இவ்வாண்டின் AWARD DAY FUNCTION பள்ளியின் ஆண்டுவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பள்ளிக்கூட முதல்வர் சிஸ்டர் ஜெய்ஸ்ரீ மரியா அவர்கள் தலைமை தாங்கினார்.
பள்ளியின் தாளாளர் சிஸ்டர் சூசன் கண்ணம்புழா அவர்கள் முன்னிலை வகித்தார்.

பள்ளிக்கூட பெற்றோர் ஆசிரியர் கழகச் சேர்மன்
தமிழறிஞர்,தமிழ்ச்செம்மல், முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் வாழ்த்துரை வழங்கி ஒழுக்கம் குறித்தும், கல்வியின் மேன்மை குறித்தும் எழுச்சியுரை ஆற்றினார்.
முன்னதாக பள்ளிக்கூட துணைமுதல்வர் வரவேற்புரை வழங்கினார்.

விழாவில் PTA முன்னாள் தலைவர் திரு முகமதலி அவர்கள்,திரு பயாஸ்,திரு சிராஜூதின்,திரு அஜ்மல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

கல்வி மற்றும் விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பரிசுக்கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிறைவாக பள்ளிக்கூட மாணவ முதல்வன் ரூமானா அசின் நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நடந்தேறியது.
வேட்டை நிருபர்
தமிழ்நாடு
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments