Ticker

6/recent/ticker-posts

Ad Code



பாரியன்பன் நாகராஜன் துளிப்பாக்கள்



வேகமாக ஓடுபவனுக்கு 
இடுப்புக்கு மேலே 
பாதங்கள்.

காட்டை அழித்து நாடாக்கி  
வீட்டிற்கொரு மரம் வைக்க 
மனமில்லா மனிதர்கள்.

வண்ணத்துப் பூச்சிகள் 
நிறங்களை அள்ளிய பிறகும் 
மீதமிருக்கிறது பூமியில் 
வண்ணங்கள்.

புகுந்த வீட்டில் பிறந்த 
வீட்டுப் பெருமையைப் பேசும் 
நாளில்; பெண்களுக்கு 
முழுசுதந்திரம் கிடைத்ததாக 
அர்த்தம்.

நீ கொண்டாடுகிறாய் 
என்றால் நித்தமும் 
எனக்குப் பிறந்தநாள்.

கூரையிலமர்ந்து
கரையும் காக்கைக்கு 
விருந்தினர் வருகை குறித்து 
சொல்லியது யாராக இருக்கும்...?

எப்போதும் போல் 
சிரிக்கும் பூவுக்குத் தெரியாது 
என் துயரம்.

என்னை விருந்துக்கு அழைக்கும் 
உனக்கு தெரிந்திருக்க வேண்டும்
என் பசி.

வண்டுகள் வதம் செய்து
ரணமாக்கியப் பின்புமில்லை
பூக்களிடம் போலிப் புன்னகை.

Vettai Email-vettai007@yahoo.com 

Post a Comment

0 Comments