
தூரத்து ஆலமரமாய்
நெட்டிலிங்கம்
இங்கும் ஆங்குமாய் அசைந்தாடி
மறைத்துவிட நிலத்தை
தேடிப் பார்க்கிறது
தேடலும் தேடல் சார்ந்த இடமும்....!
அவளாகிய குறிஞ்சியில்
முறுவல் செழிப்பாய் திளைத்திருக்க
சிறு ரீங்காரமிடும்
வண்டுகளிடம் சொல்லி வனப்பை
சீண்டி சீண்டிபுரிதலை பொசுக்கென
வான்முட்ட எழச்செய்யும்
காதலும் காதல் சார்ந்த இடமும்...!
சூரியனை கோவித்து
நீண்டு செல்லும்
பாதைபோல
நீரோடையை ஏந்தி
நிதம் தீர்க்கிறது
வனத்தின்/
தாகமும் தாகம் சார்ந்த இடமும்...!
நீண்ட ஒற்றைப்பாதை
நிமரச்செய்திடல் போல்
ஓயாத குயிலொன்று
புல்லாங்குழல் காண
கானகம் சென்றதுபோல்
ரம்யமாகிப் போகிறது
இசையும் இசை சார்ந்த இடமும்...!
ஓங்கிய மரங்களையும்
ஓய்வாக சில சனங்களையும்
உரசிச் செல்ல அருவிகளையும்
பாறை ஒட்டிய தேன்கூடுகளையும்
இருளாயினும் வெயிலாயினும்
சில்லென தென்றலைத் தந்து
பேய் மழையில் நிதம் நனைந்து
சொ வென சாரல் பெறும்
முகடை பற்றிய குறிஞ்சியே...!
கார்த்திகேயனின் வள்ளியை
படைத்த அழகே..!
வனப்பாடும் முல்லை
மருதம் நெய்தல் பாலை
அழகு தனை
நிமிர்ந்து பார்த்த பேரழகே..!
அனைத்தையும்
அரவணைத்த மா அழகே..!
மலையும் மலை சார்ந்த இடமே....!
காதலின் குறிஞ்சியே செழிப்பினால்
சோ வெனும் கவிமழையே
செழிப்பாய் அழகே....!!!/
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments