
1.வெயிலை துரத்த
குடையை விரித்தேன்
சிக்கியது நிழல்...!
2.அம்மாவை அழைக்க
மரக்கிளையை ஆட்டுகிறது
தொட்டில் குழந்தை...
3.இளமைக்கு விழுந்த திரை
ஊருக்கே தெரிகிறது
காதோரத்தில் நரை...
4.சுட்டுவிரல் கவனம்
இது கால் பிடிக்கும் காலம்
கவிழ்க்கப் படலாம் தேசம்...
5.குளத்தை அருந்தும் புலி
நடுங்கத் துவங்குகிறது
மானின் நிழல்...
6.வாங்கிய புத்தன் வீடு
வேதனை தருகிறது
விற்ற பழையவயல்...
7.நாய் குரைத்ததும்
விழிகளை மூடியது குழந்தை
நிலவை காணவில்லை...
Vettai Email-vettai007@yahoo.com

0 Comments