கோவையில்., கோவை மாவட்ட உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் முப்பெரும் விழா!

கோவையில்., கோவை மாவட்ட உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் முப்பெரும் விழா!


கோவை மாவட்டத்தில் நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. அதில் இரு கல்வி மாவட்டத்திற்கான பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய அளவிலான மகளிர் அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டமும், பொறுப்பேற்பு நிகழ்வும் கடந்த சனி ஞாயிறு (14 15 .5 2022 )ஆகிய இரு நாட்களிலும் தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கோவை பேரூர் கல்வி மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களும் கோவை தொண்டாமுத்தூர் ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்துகொண்ட அவ்விழாவிற்கு கோவை நீலகிரி மாவட்ட பொறுப்பாளரும்.மாநிலத் துணைத் தலைவருமான  குறள் யோகி மு.க. அன்வர் பாட்சா அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட அமைப்புச் செயலாளர் கவியகம் மணிவண்ணன் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து துவக்க உரையாற்றினார்.

மாவட்டத் தலைவர் மு க அன்வர் பாட்சா அவர்கள் தனது உரையில்  உலக பொதுமறையாம் திருக்குறளை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.குறிப்பாக திருக்குறளை மாணவர் மத்தியில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்,
இளைய தலைமுறைக்கு திருக்குறள் பயிற்றுவித்தல் என்பது ஒரு புதிய சமுதாயத்தையே படைப்பதற்கு ஒப்பாகும் எனவும்,மனித நேயம் மலரச் செய்வது இன்றைய அவசியத் தேவை எனவும் எடுத்துரைத்தார்.

மற்றும் பொறுப்பாளர்களின் செயல்பாடுகள்; எதிர்காலத் திட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்கமளித்துப் பேசினார்.

மாவட்ட அமைப்புச் செயலாளர் கவியகம் மணிவண்ணன்  பொறுப்பாளர்களை அறிமுகம் செய்வித்துப் பேசுகையில்
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம் என்பது பாரதியின் அவா! அதுபோன்றே பிஞ்சு உள்ளங்களிலும் ஒவ்வொரு இல்லந்தோறும் திருக்குறள் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்றும்  கூட்டமைப்பின் நோக்கத்தை எடுத்துக் கூறினார்.

முன்னதாக காணொளி வாயிலாக உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான குறள் செல்வர்  ஆதிலிங்கம் ஐயா அவர்கள் பொறுப்பாளர்களுக்குத் தனது வாழ்த்துகளைக் கூறியதோடு உலகத் திருக்குறள் கூட்டமைப்பு கடந்து வந்த பாதையையும் எதிர்நோக்கியுள்ள இலக்குகளையும் பற்றிக் குறிப்பிட்டு விரிவாக உரையாற்றினார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக ஜோதி மைய அறக்கட்டளை தலைவர் வடவள்ளி க.சோ.இராதாகிருஷ்ணன், 
குறிச்சி  பகுதி  கே .எஸ். மனோகரன், மேட்டுப்பாளையம் அ.வெங்கடாசலம், பச்சாபாளையம் திருமதி ஜோதிமணி  சரவணம்பட்டி திருமதி லலிதாராணி, செல்வி.நவீனா,செல்வி கோகுல வாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலைமாமணி மு.பெ.இராமலிங்கம், கவியரசி கவிதா வேணுகோபால், மகரந்தன் மா வசந்தகுமார் ஆகியோர் ஏற்புரை ஏற்றுப் பேசும்போது உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் குறிக்கோளின்படி திருக்குறளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கான அத்தனை செயல்பாடுகளையும் கூட்டமைப்பின் வழிகாட்டுதலோடு செவ்வனே நிறைவேற்றுவதாக  உறுதிமொழி வழங்கினர்.

பேரூர் கல்வி மாவட்டத்தின் தலைவராகக் குறள் யோகி, முனைவர் மு.க. அன்வர் பாட்சா அவர்களும், செயலாளராக மா.வசந்தகுமார், பொருளாளராக கவிதா வேணுகோபால், துணைத் தலைவர்களாக 
மருதமலை புலவர் ஆ.பிரபாகரன், கவிஞர் இரா.வேணுகோபால கிருஷ்ணன், துணைச் செயலாளர்களாக ஆசிரியர் 
கு.தெய்வீகன் மற்றும் கவிதாயினி மதிவதனி செல்வராஜ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கோவை தொண்டாமுத்தூர் ஒன்றிய மகளிர் அணித் தலைவராக கவிஞர் திருமதி கவிதா வேணுகோபால், செயலாளராகப் பேராசிரியை முனைவர் அர. சுதா, பொருளாளராக பேராசிரியை முனைவர் ந.பரமேஸ்வரி அவர்களும், துணைத் தலைவர்களாக திருமதி இர உஷா நந்தினி சதீஷ், செல்வி.வே. அபிராமி ஆகியோரும், துணைச் செயலாளர்களாக மருத்துவர்.குண சுந்தரி மற்றும் தமிழாசிரியை வீ.ருக்மணி ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கோவை வருவாய் மாவட்டத்திலுள்ள கோவை கல்வி மாவட்டத்திற்குத் தலைவராக கலைமாமணி மு.பெ. இராமலிங்கம் அவர்களும் செயலாளராக  கவிஞர் கோவை சேகர் அவர்களும் பொருளாளராக கோவை ஆறுமுகம் அவர்களும் மற்றும் துணைத் தலைவர்களாக எழுத்தாளர் முகில் தினகரன் மு.சுடர்வேந்தன் ஆகியோரும் துணைச் செயலாளர்களாக எண்கணித வல்லுநர் பி.துரைசாமி மற்றும் கவிஞர்.மு.பிரகஸ்பதி ஆகியோரும் பொறுப்பேற்றனர்.

விழா முடிவில் கவிஞர் கோவை சேகர் நன்றி உரை கூறினார்

திரளான தமிழ் அன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த இம் முப்பெரும்விழாவிற்கான ஏற்பாடுகளை மா. வசந்தகுமார்,இரா வேணுகோபால கிருஷ்ணன் மற்றும் பி.துரைசாமி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
வேட்டை நிருபர் தமிழ்நாடு 

வேட்டை 
E-mail; vettai007@yahoo.com

2 Comments

  1. சிறப்பான பணிக்கு மனமார்ந்த மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.. செய்திகளைச் சுடச்சுட தரும் வேட்டை மின்இதழின் அறப்பணி சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!

    ReplyDelete
  2. மிகச் சிறப்பாகச செயதிதித் தொகுப்பை வழங்கிய வேட்டை இதழுக்கு நன்றி நன்றி!

    ReplyDelete
Previous Post Next Post