நெஞ்சில் ஈரம் அற்றவர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட அட்டுளுகமை பாத்திமா ஆயிஷா,
சீற்றமடைந்த இயற்கை அன்னை,இன்று வானத்தில் இருந்து உலகம் அறியாத உத்தம பிஞ்சுக்கு தனது கண்ணீர் அஞ்சலியை நாடு முழுவதிலும் செலுத்திக் கொண்டிருக்கிறாள்.
இவ்வேலையில் சிறுமியின் மரணம் தொடர்பாக தந்தையின் மீது மக்களினதும் பாதுகாப்புத் தரப்பினதும் கழுகுப் பார்வை பாய்ந்திருக்கின்றது.
குறிந்த சிறுமியின் தந்தை மீது பாதுகாப்புப் பிரிவினர் தொடர்ச்சியாக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சந்தர்பர்த்தில் தந்தை போதை வஸ்திற்கு அடிமை ஆனமையினால் தான் சிறுமி கொல்லப்பட்டார், என்பது போன்ற கருத்துக்களும் பதியப்படுகின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் நீதியான விசாரணைக்காக ஊர்மக்களின் ஆதரவும் அவதானமும் தேவை.
கோடி விசாரனைகள் நடந்தாலும் கொல்லப்பட்டவருக்கு உலகில் நீதி கிடைப்பதில்லை .
ஆனாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு மன திருப்திக்காகவே அத்தனை நடவடிக்கைகளும்.
இதை தவிர உலகில் வாழும் ஆயிரம் சிறுமியர்களின் உயிருக்கு உத்தரவாதமாய் அமைவதற்காகவேதவிர வேறில்லை.
பாதிமா ஆயிஷாவின் விடயத்தில் ஊர்மக்களின்மிகுந்த அவதானம் தேவை.
தந்தை போதை வஸ்திற்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது. தந்தை போதைவஸ்திற்கு அடிமையானவர். அந்த வகையில் அவர் இந்த விடயத்தில் குற்றவழியாக காணப்பட்டாலும் அவர் கண்டிக்கப்படவேண்டும்.
அதேவலை அவர், தன் மகள் விடயத்தில் நிரபராதியாக காணப்படுவாராயின், அவர்என்ன போதைக்கு அடிமைப்பட்டவராக இருந்தாலும், அரவரது பிள்ளை விடயத்தில் அவருக்குரிய நியாயம் கொடுக்கப்படவேண்டும்.
தந்தை போதைவஸ்திற்கு அடிமையானவர் என்பதற்காக இந்த விடயத்தில் அப்பாவியாக தண்டிக்கப்பட கூடாது. வறியவன் என்பதற்காக ஒருபோதும் அவன் தலையில் பொழுது விடியக்கூடாது. இதில் ஊர்மக்கள் விழிப்பாகவும் பாதுகாப்பு பிரிவிற்கு ஒத்துழைப்பாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும்.
ஒரு போதும் குற்றவாளி தப்பிவிடவும் கூடாது. நிரபராதி தண்டிக்கப்படவும் கூடாது.
நம் நாட்டில் ஒரு குண்டு வெடிப்பு அல்லது வேறு வகையிலான நாசகார செயல்களில் ஒன்று நடக்கும் போது, அதற்கு முதல் காரணமாக இருந்தவர், முதல் தேடப்படுகிறார். அவ்விதமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து தருவித்தவரும் தேடிக் கண்டு பிடிக்கப்படுகிறார்.ஆனால் போதைப் பொருள் பல சமூகத்தை பல உயிர்களை தொடர்ச்சியாக அழித்த போதிலும், இவ்வாறான விசாரணைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே நடை பெருகிறது.
எமது நாட்டைப் பொருத்தவரை, மறைக்கப்பட்ட இவ்வாறான பல சம்பவங்கள். இன்னொருவர் செய்த குற்றத்திற்காக அப்பாவிகளாக சிறை வாசம் அனுபவித்து குற்றமற்றவர் என விடுதலை செயாயப்பட்ட பல சம்பவங்கள்.
குற்றம் செய்யாமல் மற்றவர் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட பல சம்பவங்கள். எனவே இவ்வாரான சம்பவங்களில் ஒன்றாக இதுவும் பதியப்படாமல் இது விடயத்தில் ஊர்மக்கள் தாம் அறிந்த உண்மைகளையும் சந்தேகங்களையும் பாதுகாப்பு தரப்பினருக் வழங்கி உதவ வேண்டும்.
எனவே ஊர்மக்களின் இவ்வாறன அவதானமும் ஆதரவும் உங்கள் ஊரிலும் , நாட்டிலும் ஆயிரம் சிறுமியரின் உயிர்க்கு உத்தரவாதம் அளிக்கலாம். விசாரனைக்கு ஆதரவளிப்போம்,அவதானத்துடன் இருப்போம்.
0 Comments