Ticker

6/recent/ticker-posts

Ad Code

வரலாறு பேசும் பெண்மையின் புகழ் :03

வீரத்திற்கும்,நீதியான ஆட்சிக்கும் புகழ் பெற்றவர்கள், என்றாலே நம் மனக் கண்ணில் காட்சி அளிக்கின்றவர்கள் கலீஃபா உமர் இப்னு கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு தான்....

 
இவர்களது அருமை மகள் தான் அன்னை ஹஃப்ஸா நாயகி...

நாம் இன்று நமது கரங்களில் ஏந்தி கல்பு குளிர ஒதவும்,நமது  துயரங்களை அகற்றவும், முழு உலக மக்களுக்கும் வழி காட்டியாகவும் உள்ள திருக்குர்ஆன் நம்மையடைய  காரணமாக இருந்தவர்கள் இந்த அன்னைதான்.... 

ஒரு பெண் இதற்கு எவ்வாறு காரணமாக இருப்பாள் என்று கேட்கின்றீர்களா???

கலீஃபா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது காலத்தில் குர்ஆன் முழுமையாக தொகுக்கப்பட்டது....

குர்ஆனை மனனம் செய்திருந்த அன்னை ஹப்ஸா நாயகியிடம் தான் அதை சரி பார்ப்பதற்காக கலீபாவினால் கொடுக்கப்பட்டிருந்தது.... 

இந் நிலையில்  தந்தை உமர் ரழியல்லாஹு அன்ஹு இவ்வுலகை விட்டும் மறைந்து விட்டார்கள்....

பின்பு அன்னை ஹப்ஸா நாயகியிடம் அமானிதமாக கொடுக்கப்பட்டிருந்த குர்ஆனை  பெற்றுத் தான்  கலீஃபா உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு பல பிரதிகள் எடுத்து உலகின் பல நாடுகளுக்கும் அனுப்பி வைத்தார்கள்...

எனவே இந்த குர்ஆனை  அமானிதமாக பாதுகாத்து நமக்குப் பெற்றுத் தந்தவர்கள் அன்னை ஹஃப்ஸா நாயகி தான்.

இவர்களைப் பற்றி வரலாறு கூறும் நகைச்சுவையான ஒரு சம்பவத்திற்குள் நாம்  நுழைவோம்...

அன்னை ஹஃப்ஸா நாயகி பெண்களுக்கே உரிய விசேடமான பண்பான ரோஷம் கொள்வதில் சற்று பிரசித்தி பெற்றவர்கள்....

ஒரு முறை விசுவாசிகளின் அன்னை யர்களான ஹஃப்ஸா நாயகியும் ஆயிஷா நாயகியும் ஒன்றாக இருக்கின்ற சமயத்தில் அந்த இடத்திற்குஅண்ணலார்ﷺ அவர்களின்  மற்றொரு மனைவியான அன்னை ஸவ்தா நாயகி அங்கே வருகிறார்கள்....

அன்று  வழமையை விட ஸவ்தா நாயகியிடம்  பொலிவுடன் கூடிய அலங்காரம் காணப்பட்டது...

காரணம் என்ன தெரியுமா!!! யமனிலிருந்து கொண்டுவரப்பட்ட சால்வை ஒன்றை  அவர்கள் அணிந்து வந்திருந்தார்கள்....

மிக அழகாகத் தெரிந்த ஸவ்தா  நாயகி பெருமானாரின்  கண்களுக்கு நம்மை விட எடுப்பாக தெரிந்து விடுவார்களோ என்று, அன்னை ஹஃப்ஸாவின் மனதில் சின்ன பொறாமை எட்டிப்பார்த்தது....

பக்கத்திலிருந்த அன்னை ஆயிஷாவிடம்," ஆயிஷா கொஞ்சம் எச்சரிக்கையாக இரு. இன்று ஸவ்தா வழமையை விட அழகாக வந்திருக்கிறார் பெருமானார் ﷺஅவர்களின்  பார்வைக்கு நம்மை விட அழகாக தெரிந்து விடுவார்" என்று கிசுகிசுத்தார்கள்...

அதற்கு அன்னை ஆயிஷா "இவ்வாறு பேசாதே ஹஃப்ஸா.. ஏன் இப்படி பேசுகிறாய்" என்று  எச்சரித்தும் இன்று நான் அவரை விட போவதில்லை என்று ஸவ்தா  நாயகியை சீண்ட ஆரம்பித்தார்கள் ஹஃப்ஸா நாயகி....

திடீரென அன்னை ஹப்ஸா  "ஒற்றைக் கண்ணன் வந்துவிட்டான் ஒற்றைக் கண்ணன் வந்து விட்டான்"  என்று  கத்தத் தொடங்கி விட்டார்கள்....

அக்காலத்தில் தஜ்ஜாலை தான் ஒற்றை கண்ணன் என்று கூறுவார்கள்....

வெள்ளை மனம் கொண்ட ஸவ்தா நாயகி அவர்கள் கூறியதை நம்பி "ஐயோ நான் எங்கே சென்று ஒளிவது" என்று பயத்துடனே பதறியவாறு கேட்டார்கள்...

உடனே ஹப்ஸா நாயகி பழைய பொருட்களை வைக்கும் இடமான பரணை காட்டி  "அங்கே ஏறிக்கொள் உனக்கு அங்கே ஒளிந்து கொள்ளலாம்" என்று வேடிக்கையாக கூறினார்கள்....

இவர்கள் கூறுவதை முழுமையாக நம்பிய ஸவ்தா நாயகி ஓடோடிச் சென்று பரணில் ஏறி ஒழிந்து கொண்டார்கள்....

பரணில் இருந்த சிலந்தி வலைகளை எல்லாம் அன்னையின் அழகிய ஆடை  துடைத்துக் கொள்ள,  அங்கேயே அமர்ந்திருந்தார்கள்....

சற்று நேரம் கழித்து அழகே உருவான அண்ணல் எம்பெருமானார்ﷺ அவர்கள் அந்த இடத்திற்கு வந்தார்கள்....

பரணிலிருந்து எட்டிப்பார்த்த ஸவ்தா நாயகியை பார்த்து, அன்னையர்களான ஹஃப்ஸாவும், ஆயிஷாவும் குலுங்கி குலுங்கி சிரித்தார்கள்...

காரணம் கேட்ட பெருமானாரிடம், சிரிப்பில் பேச முடியாதவர்களாய் சைக்கினை மூலம் பரணில் இருந்த ஸவ்தா நாயகியை பெருமானாருக்கு காட்டினார்கள்.....

ஒளிந்திருந்த ஸவ்தா நாயகியை கண்ட முத்து நபிﷺ அவர்கள் "அங்கே என்ன செய்கிறாய் ஸவ்தா" என்று கேட்டார்கள்...

"நாயகமே ஒற்றை கண்ணன் வந்து விட்டான். அதனால் தான் நான் இங்கு வந்து ஒழித்து கொண்டேன்" என்று கூற,"அவன் வருவதற்கு காலம் உள்ளது நீ கீழே வா" என்று அழைத்தார்கள் எம் பெருமானார்ﷺ அவர்கள்....

கணவனின் சொல் கேட்டு கீழே இறங்கிய ஸவ்தா நாயகியோ, முழுக்க தூசியால் பூசப்பட்டு அலங்கோலமாக காட்சியளித்தார்கள்.....

இதை கண்டு பெருமானார்ﷺ அவர்களும் சேர்ந்து சிரித்ததாக வரலாற்றில் கூறப்படுகிறது...

இத்தனை வேடிக்கைகள் செய்தாலும் வல்ல நாயன் அல்லாஹ், ஹஃப்ஸா நாயகி அவர்களின் நோன்பையும், இரவில் நின்று வணங்கும் வணக்கங்களையும் தனது திருமறையிலே புகழ்ந்து கூறுகின்றான்.....

அல்லாஹ்வினதும் அவனது அமரர்களினதும்  திருப்பார்வை தனித்துவமாக தன்மீது   விழும் அளவிற்கு உளத்தூய்மையுடன் அமல் செய்யக்கூடியவர்கள் தான் எமது அன்னையவர்கள்....

வேடிக்கைகள் எத்தனை செய்தாலும் தன் வணக்க வழிபாடுகளில் கண்ணாய் இருந்து, இறைவனின் திருப்தியை பெற்றவர்கள் தான் அன்னை ஹப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்....

(தொடரும்)


Post a Comment

0 Comments