நீதிக்கும், வீரத்திற்கும் புகழ் பெற்ற அமீருல் முஃமினீன் அவர்களின் மனைவி அன்னை உம்மு ஹக்கீம் ரழியல்லாஹு அன்ஹா...
அன்னை உம்மு ஹக்கீம் ரோம வீரர்களை மிரட்டி 8 பேரை கொலை செய்த செய்தி காட்டுத்தீ போல பரவியது....
எங்கும் இதே பேச்சு...
கடைசியாக அமீருல் முஃமினின் செய்யதினா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும், அன்னையின் இத் துணிகரச் செய்தி எட்டியது. அன்னையின் இவ் வீரச் செயல் கலீபாவையும் வியப்படையச்செய்தது.
அன்னையின் துணிகரமான செயலைக் கேட்டு வியந்த அவர்கள் விதவையான உம்மு ஹக்கீம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க எண்ணினார்கள்...
கலீபாவின் விருப்பத்திற்கு சம்மதித்த அன்னை அவர்களுக்கு கலீபாவை திருமணம் முடிக்கும் பெரும்பேறு கிடைத்தது...
திருமணமும் இனிதே நடைபெற்றது.
உம்மு ஹக்கீம் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கர்ப்பமாகினார்கள்...
பிரசவ வேதனை நெருங்கி குழந்தையைப் பெற்றெடுத்த அன்னையோ பிரசவத்திற்கு பின் உள்ள இரத்த திட்டு சரியாக நிறைவடைய முன்னரே மரணம் அடைகிறார்கள்....
அன்னையோ சாதாரணமாக நோயில் விழுந்து மரணிக்கவில்லை...
பிரசவ வேதனையால் மரணிப்பவர்கள் இப் புனித மார்க்கத்தில் ஷஹீதுகளாக( இறைவழியில் மரணித்தவர்களாக) கணிக்கப் படுகிறார்கள்...
எனவே, நம் அன்னை உம்மு ஹக்கீம் அவர்களும் பிரசவ வேதனையால் மரணமடைந்ததால் ஷஹீத் என்னும் பெரும் பேறு அடைந்தார்கள்...
உம்மு ஹக்கீம் ரழியல்லாஹு அன்ஹா அவர்களது மூன்றாவது கணவர் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், கொடியவன் அபூ லுஃலுஆ என்பவனால் கொலை செய்யப்பட்டார்கள்...
கலிஃபா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் அன்னை உம்மு ஹக்கீம் அவர்களுக்கும் பிறந்தவர்கள் அன்னை பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா....
இரு ஷஹீதுகளுக்கு பிறந்த தவக் குழந்தை அவர்கள்....
இப் புனித மார்க்கத்தை வாழ்வில் முன்னிறுத்திய அன்னை உம்மு ஹக்கீம் ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு எத்துணை மாபெரும் பாக்கியங்களை அல்லாஹ் அருளினான்.
அன்னை உம்மு ஹக்கீமின் இறை நம்பிக்கைக்கும் இறை அச்சத்துக்கும் இறைவன் அளித்த சன்மானங்கள் தான் இவை!!!...
தானும் ஷஹீதாகி, தான் மணந்த மூன்று கணவர்களையும் ஷஹீதுகளாக பெற்று ஈருலகிலும் ஒளிரும் அன்னை உம்மு ஹக்கீம் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பெண்மைக்குப் புகழ் சேர்க்கும் வீரப்பெண்தானே.
(தொடரும்)
இலங்கை | இந்தியா | உலகம்
தமிழ்நாடு | விளையாட்டு
தொடர்கதை | சிறுகதை
கவிதை | செந்தமிழ் இலக்கியம்
இஸ்லாமிய சிந்தனை
மொழிபெயர்ப்புக் கதைகள்
கட்டுரைகள் | Ai SONGS |
ஆரோக்கியம் |வரலாறு|
சமையல்|HOME
0 Comments