Ticker

6/recent/ticker-posts

ஹெட் – சிராஜ் மோதலில் உண்மையே வேற.. இந்தியாவின் பவுலிங் மிஸ்ஸாக இதான் காரணம்.. மோர்கெல் பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்தியா இரண்டாவது போட்டியில் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் நகரில் பகல் இரவாக துவங்கி நடைபெற்று வரும் அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் குவித்த உதவியுடன் 337 ரன்கள் குவித்தது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ், பும்ரா தலா 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் இந்தியா 128-5 என இரண்டாவது நாள் முடிவில் தடுமாறி வருகிறது. முன்னதாக இந்தப் போட்டியில் 140 ரன்கள் அடித்த டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்கிய சிராஜ் அவரை மிகவும் ஆக்ரோஷமாக வழி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் களத்தில் இப்படி மோதினாலும் உண்மையில் அவர்கள் நண்பர்கள் என்று இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் கூறியுள்ளார். அது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சிராஜ் தனது கையில் பந்து இருக்கும் போது 100% பங்களிப்பை கொடுக்கக்கூடிய பவுலர். அது தான் அவர் எங்களுடைய பவுலிங் துறைக்கு கொண்டு வரும் கேரக்டர்”

“ஸ்கோர்போர்ட் எதுவாக இருந்தாலும் அவர் நாள் முழுவதும் ஓடுவார். இது போன்ற பெரிய தொடரில் நீங்கள் அது போன்ற தருணங்களை பார்ப்பீர்கள். உங்களிடம் 2 கடினமான கிரிக்கெட்டை விளையாடும் வீரர்கள் உள்ளார்கள். ஆனால் நாளின் இறுதியில் அவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள் என்று நான் உறுதியாக சொல்வேன்”

“முதல் நாளின் இரவில் எங்களுடைய லைன் கொஞ்சம் நன்றாக இருந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் ஸ்விங் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இருந்தது. ஆனால் இன்று காலை எங்களுடைய பவுலிங் கொஞ்சம் நன்றாகவே இருந்தது. இருப்பினும் டிராவிஸ் ஹெட் தம்முடைய வழியில் விளையாடி எங்களுடைய பவுலர்களை அழுத்தத்தில் தள்ளினார். முதல் போட்டியில் எங்களுடைய லைன், லென்த் அற்புதமாக இருந்தது”

“அதுவே எஞ்சிய தொடர் முழுவதும் எங்களுடைய வழியாக இருக்கும். ஆனால் இந்தப் போட்டியில் முதல் நாள் இரவில் இளஞ்சிவப்பு பந்து கொஞ்சம் அதிகமாக நகர்ந்தது. அங்கே நாங்கள் சரியான லென்த்தை கண்டறிய தவற விட்டோம். அதே சமயம் வரலாற்றில் இரவு நேரங்களில் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசும் போது நிறைய விக்கெட்டுகள் கிடைக்கின்றன. அதை நாங்கள் பின்பற்றினோம். இன்று பகலில் சரியான இடத்தில் பந்து வீசினோம். இது போன்ற நாட்கள் வலியை கொடுத்தாலும் நீண்ட காலத் திட்டத்தில் எங்கள் வீரர்களுக்கு உதவியை கொடுக்கும்” என்று கூறினார்.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments