Ticker

6/recent/ticker-posts

Ad Code



உலகில் அதிவேக இன்டர்நெட் ஸ்பீட் உள்ள நாடுகள் எவை தெரியுமா..? டாப் 5 நாடுகளின் லிஸ்ட் இதோ!


இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் நம் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. இன்டர்நெட் இல்லாமல் இன்று உலகில் எதுவும் இயங்காது என்று சொல்லும் அளவுக்கு இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆன்லைனில் வேலை செய்தாலும், வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்தாலும் அல்லது சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவில் இருந்தாலும், இன்டர்நெட் ஸ்பீட் எல்லா இடங்களிலும் அவசியமாகும். சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டில் மொபைல் இன்டர்நெட் ஸ்பீட்-இன் அடிப்படையில் 10 அதிவேக நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த தரவரிசை பட்டியலில் முதல் 10 நாடுகளில் இந்தியா இடம்பெறவில்லை. இந்த நாடுகள் மற்றும் அவற்றின் வேகம் பற்றி விரிவாக பார்ப்போம்.

1. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE):

இந்த பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது, அங்கு மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் 398.51 Mbps ஆகும். இந்த வேகம் மிக வேகமாக இருப்பதால், இங்குள்ள யூசர்கள் ஒரு ஜிகாபைட் அளவிலான ஃபைல்-ஐ வெறும் 2.5 வினாடிகளில் டவுன்லோட் செய்யலாம்.

2. கத்தார்:

கத்தார் அதன் வேகமான இன்டர்நெட் சேவைகளுக்காக அங்கீகாரம் பெற்றுள்ளது, இங்கு மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் 344.34 Mbps ஆகும். இந்த நாடு தொழில்நுட்ப வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது.

3. குவைத்:

இந்த பட்டியலில் குவைத் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது, இங்கு மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் 239.83 Mbps ஆகும். எனவே இங்குள்ள மக்கள் உயர்தர இன்டர்நெட் சேவைகளை அனுபவித்து வருகின்றனர்.

4. தென் கொரியா:

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்ற தென் கொரியா இந்த பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் 141.23 Mbps ஆகும். டிஜிட்டல் துறையில் இந்த நாடு எப்போதும் முன்னணியில் உள்ளது.

5. நெதர்லாந்து:

இந்தப் பட்டியலில் நெதர்லாந்தும் தனது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் 133.44 Mbps ஆகும். நம்பகமான இன்டர்நெட் சேவைகளை வழங்குவதில் அதன் வலுவான டெக்னிக்கல் இன்ஃபிராஸ்ட முக்கிய பங்கு வகிக்கிறது.

மற்ற நாடுகள்:

டென்மார்க் (130.05 Mbps), நார்வே (128.77 Mbps), சவுதி அரேபியா (122.28 Mbps), பல்கேரியா (117.64 Mbps) மற்றும் லக்சம்பர்க் (114.42 Mbps) ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் தங்கள் குடிமக்களுக்கு வேகமான மற்றும் நம்பகமான இன்டர்நெட் சேவைகளை வழங்கி வருகின்றன.

இந்த நாடுகளின் வேகமான மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் பொழுதுபோக்கை மட்டுமின்றி வேலை வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. தொழில்நுட்பம் முன்னேறி வருவதால், இந்த நாடுகளில் உள்ள மக்கள் உயர்தர இன்டர்நெட் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments