Ticker

6/recent/ticker-posts

மத்திய கிழக்கில் கடும் பதற்றம் : சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்


சிரியாவின் (Syria) தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால், நகரை சுற்றிலும் குவிக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் படை வீரர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றியதால் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் ( Bashar al-Assad ) டமாஸ்கசை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தலைநகர் டமாஸ்கஸ் எல்லைப் பகுதியில் பஷார் அல்-அசாத்தின் தந்தையின் சிலையை கிளர்ச்சியாளர்கள் உடைத்துள்ளதோடு, டமாஸ்கசில் முக்கிய சிறையிலிருந்து கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர்.

இது தொடர்பாக கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் மூத்த தளபதி ஹசன் அப்துல் கானி தனது ரெலிகிராம் பதிவில், "டமாஸ்கஸ் நகரத்தை பஷார் அல்-அசாத்திடமிருந்து விடுவித்ததாக நாங்கள் அறிவிக்கிறோம்.

உலகம் முழுவதும் இடம்பெயர்ந்த மக்களே, சுதந்திர சிரியா உங்களுக்காக காத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் தப்பிச் சென்ற விமானம் மாயமாகி உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள், பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் சிரியா செல்வது என்பது ஏற்று கொள்ள முடியாதது என கூறி வரும் நிலையில் இந்த பதற்ற நிலை உருவாகி உள்ளது.

tamilwin



 Ai SONGS

 



Post a Comment

0 Comments