நலம் வாழ -மருத்துவப் பகுதி -18

நலம் வாழ -மருத்துவப் பகுதி -18

இன்று நான் உங்களிடம் பகிர்ந்து கொள்வது ஒரு புத்தகத்தின் மிகச்சிறந்த பக்கங்கள் .

ஏனெனில் மனித குலத்திற்கு தேவையான அற்புதமான ஒரு சிந்தனை அந்த புத்தகத்தின் முதல் பத்தியில் இருந்தது .என்னைக் கவர்ந்தது எனவே அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
 
"நோய் நாடி நோய்முதல் நாடி"
 
இதுதான் அந்தப் பக்கத்தின் தலைப்பு.
   
மக்கள் தொகை பெருக்கத்திற்கு இணையாக மருந்துகளும் நோய்களும் பெருகிவிட்டன. துயரர்களின் எண்ணிக்கைக்கு மருத்துவர்களின் எண்ணிக்கை ஒன்றும் குறைச்சல் இல்லை. 

ஆய்வுகளும் சோதனைகளும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. விஞ்ஞான பாதையில் விண்ணை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது மருத்துவம். பூமி எங்கும் புதுப்புது கண்டுபிடிப்புகள் எந்த நோய்க்காக மருத்துவமனை சென்றாலும் வீடே மருந்து கடையாகும் அளவிற்கு மருந்துகள் மாத்திரைகள். டாணிக்குகள் இவ்வளவு நடந்த பிறகும் உயிர் கசிய உழைத்து உழைத்தது பையை விட்டுப் போகிறதே தவிர மெய்யை விட்டு நோய் போனபாடில்லை. 

பேரின்பத்தின் அதிபதியாம் மன நிம்மதி மட்டும் கிடைக்கவே இல்லை .என்று அழுத புலம்பாத ஒரு நோயாளியை கூட இவ்வுலகில் காண்பது அரிது. 

மானுடமே இந்த நிலை யார் தந்தது? ஏன் வந்தது? எப்படி வந்தது? இவ்வாறு மனம் எப்படி வெந்தது? ஒவ்வொரு மருத்துவத்துறையை சார்ந்தவர்களும் அவரவர் மருத்துவத்தை புகழ்கிறார்கள். அந்த மருத்துவத்தால் அது முடியாது எங்கள் மருத்துவத்தில் அனைத்து நோய்களுக்கும் வைத்தியம் உண்டு என்று ஒவ்வொரு மருத்துவரும் உரைக்கிறார்கள். 

வைத்தியம் உண்டு!
சரி..... குணம் உண்டா?

மருத்துவர்கள் பதில் கூறுவீர்களா? பூரண குணம் உண்டு என்றால் ஏன் இன்னும் இவ்வளவு துயரங்கள். அந்த நோயை இந்த மருந்தை கொண்டு போக்கி விடுவேன் என்று மருத்துவரும்,அந்த கைராசி மருத்துவர் எந்த நோயையும் நீக்கிவிடுவார் என்று மக்களும், ஏதோ ஒரு நம்பிக்கையில் நாட்களை நகர்த்துகிறார்கள்.

நோய் வருவதும் அதற்கு மருந்து உண்பதும்  தொடர்கதை ஆகிவிட்டது.

 நலம் என்பது மட்டும் பகற்கணவாகிவிட்டது.

மருந்துகள் என்னும் மயக்கத்தில் மக்களும் மருத்துவர்களும் நோய் மட்டும் தயக்கமில்லாமல் மனித குலத்தை தாக்கிக் கொண்டே இருக்கிறது இதற்கு ஒரு தீர்வு உண்டா ?நல்ல தீர்ப்பு உண்டா? மனித நேயமிக்க மலரினும் மெல்லிய மனம் கொண்ட மனிதர்களின் கேள்வி இது.     

எந்த  ஒன்றுக்கும் மூல காரணம் தெரியாமல் அதைப்பற்றிய முடிவை சொல்வது மூடநம்பிக்கையின் முற்பகுதி தானே. நோயின் மூல காரணத்தை கண்டுபிடிக்காமல் அதன் முகத்தை மட்டும் கண்டுவிட்டு அதற்கு முகமூடி அணிவித்து  விட்டால் அது நோயை நீக்குவது ஆகாது.

மாறாக அது மனித குலத்தையும் மனித நலத்தையும் உயிரோடு சமாதி வைப்பதற்கு சமமானதாகும். இந்த வேலையைத்தான் மருந்துகள் மறக்காமல் செய்கின்றது. எனவே நோயின் மூல காரணத்தை முதலில் ஆராய்வோம்.

நோய் எங்கிருந்து வருகிறது? 
எதிலிருந்து வருகிறது?
எப்போது வருகிறது?
எதற்காக வருகிறது?

இந்த வினாக்களுக்கு எல்லாம் விடை கிடைத்து விட்டால் நோயின் மூல காரணம் முழுவதும் விளங்கிவிடும்.

ஒவ்வொரு விடைக்கும் அதற்கு சமமான எதிர்வினை ஒன்று உண்டு. இது நியூட்டனின் விதி. 

மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப நோய் அவனிடம் வெளிப்படுகிறது மனிதனுக்குள்ளும் நோய் உண்டு, நலமும் உண்டு ,
மனிதனுடைய நல்ல செயல்கள் அனைத்தும் நலத்தையும் அவனுடைய கெட்ட செயல்கள்  நோயை வெளிப்படுத்துகிறது. 

நல்லவர்களுக்கும் நோய் வருகிறது என்பது பொய், ஏனெனில் மனிதனைப் பொறுத்தவரை அவன் நல்லவன். இயற்கை பொறுத்தவரை அவன் நல்லவன் இல்லை.
 இயற்கை எதை ஏற்கிறதோ அதுவே நன்மை. 
இயற்கை எதை எதிர்கிறதோ அதுவே தீமை. 
இயற்கையின் பாதையில் மனிதன் செல்லும் பொழுது அத்தனை இயற்கை படைப்பும் அவனுக்கு அடிபணிந்து உதவுகிறது. 
அப்போது மனிதன்  மொத்த இயற்கையின் ரத்தின சுருக்கம் ஆகின்றான்.  இதுதான் நோயற்ற வாழ்வு என்று இயற்கையின் பாதையை புறக்கணித்துவிட்டு இவனே ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்ளும் பொழுதுதான் எல்லா இயற்கையும் அவனை அடிமைப்படுத்துகிறது. 

தன்னுடைய உதவிகளை உடனடியாக நிறுத்திக் கொள்கிறது. தான் வழங்கிய நற்கொடைகளை திரும்பி எடுத்துக் கொள்கிறது. இதுதான் நரகம் என்னும் நோய் என்பது. 

இயற்கையின் பிச்சைதான் மனிதன்
 இயற்கையால் உருவானவன் இயற்கையின் உருவானவன் இயற்கையில் கருவானவன் இயற்கையாக வளர்ந்தவன்  இயற்கையாக வளர்ந்து விட்டால் இயற்கையோடு வாழ்ந்து விட்டால் நோய் இருக்காது
.

இயற்கை வழி தவறிவிட்டால் எவருக்கும் நோய் வராமல் இருக்காது
. வழி தவறியதால் வந்த நோயை மருந்து மாத்திரைகளால் மாய்த்து விடலாம் என்று எண்ணுவது இயற்கைக்கு எதிராக செய்யும் சதி. இந்த உண்மையை ஏன் உணரவில்லை உங்கள் மதி.?

ஆக எந்த கோணத்தில்  பார்த்தாலும் இயற்கைக்கு எதிராக மனிதன் அடி அடித்து வைக்கும் பொழுது தான் அவனை நோய் என்னும் பேய் பிடிக்கிறது. 

இயற்கையே அவனுக்கு உதவ மறுக்கிறது இயற்கையின் எதிரியானவன் செயற்கையின் சிநேகிதன் ஆகின்றான் அப்படிப்பட்டவன் தான் நோயின் சதிஆகிறான் பிறகு நோய்கள் என்னும் பேய்களை பெற்றெடுக்கும் தீய தாயாகிறான்.

இயற்கையோடு இணைந்து வாழ்பவனுக்கு  அந்த வானமும், மேகமும், நிலவும், கதிரும், நட்சத்திரங்களும், வாயு மண்டலங்களும், மழையும், மரங்களும், நீரும், நிலமும், தென்றலும், தேனும் ,அருவிகளும், குருவிகளும், மலர்களும், கனிகளும், கடல் ,மீன்களும் இன்னும் ஒவ்வொரு இயற்கை படைப்போம் உதவுகின்றது. 

தன்னையே அர்ப்பணிக்கிறது. நோய் நீக்கும் குணம் பெற்ற இயற்கையே மனிதனுக்கு நலம் என்னும் இன்பம் தருமே அல்லாது, மருந்து மாத்திரைகளால் ஒருபோதும் நலத்தை தர இயலாது.

எந்த செயற்கை மருந்தும் எந்த நோயையும் குணப்படுத்தாது. எல்லாம் மருந்துகளும் எல்லா நோய்களின் தீவிரத்தை திசை திருப்பி அதன் ஆதிக்கத்தை தற்காலிகமாக அடக்கி வைக்கத்தான் செய்யும்.மனித உயிரும் உடலும் மருந்துகளால் உருவானது அல்ல.

எனவே மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த மருந்தாலும் மனித உயிருக்கும் உடலுக்கும் ஏற்படும் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது. எந்த  இயற்கை சக்தி மனித உயிருக்கும் உடலுக்கும் ஆதாரமாக அமைந்துள்ளதோ, அந்த இயற்கை சக்தியால் தான் மனித உயிருக்கும், உடலுக்கும் உண்டாகும் கேடுகளை களையவும் முடியும்.

இறுதியாக இயற்கையின் ஏற்பாடான எதிர்பார்ப்பான தூய்மையான மனமும் வெண்மையான எண்ணங்களும் நேர்மையான செயல்களும் தான் மனிதனை அழிவிலிருந்து தடுக்கவும் நோய்களிலிருந்து காப்பாற்றவும் முடியும்.

இந்த நலனும் நல்லெண்ணங்களை மக்களுக்கு ஊட்டி நன்னடத்தையை கற்பித்து இயற்கை நிதிகளுக்கு ஏற்ப வாழ செய்வதால் மட்டுமே நோய்களின் தீவிரத்தை குறைக்க முடியும்.  

மருத்துவர்களின் மகத்துவம் உயரும்.
இதுவே என்னைக் கவர்ந்த ஒரு கட்டுரை இதில் இருக்கும் நல்லவற்றை ஏற்றுக்கொள்வோம்.  களைவதை களைவோம் 

அடுத்த வாரம்  சந்திக்க உங்களுடன் உங்களுக்காக. 

 
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).      



 



Post a Comment

Previous Post Next Post