Ticker

6/recent/ticker-posts

Ad Code



கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-20


அயன்கணை
படைத்தலைவர் எல்லோரும்   மாண்ட துயரில்
நடைதளர்ந்தான் ராவணன் அங்கு.

கலக்கத்தைத் தேற்றியே இந்திரசித் சென்றான்!
கலங்கவைத்தான் லக்குவன் பார்.

உலக அழிவையெண்ணி  ராமன் தடுத்தான்
அயன்கணை வீச்சை த்தான்.

இலக்குவன் அண்ணனின் ஆணையை ஏற்றான்!
உளமார நின்றான் துணிந்து.

வேள்வி நடத்தி அயன்கணை வாங்கிட
ஆள்மறைந்தான் இந்திரசித் தான்.

வந்தான் மகோதரன்! காரிருளை வன்புகையை
உண்டாக்கி கண்மறைத்தான் காண்.

தடுமாறி லக்குவனை நாடி அனுமன்
ஒருவாராய் வந்துசேர்ந்தான் அங்கு.

நடத்திய தந்திரத்தைச் சொல்ல சிவனார்
படையால் இருளகல வைத்து
இலக்குவன் எல்லோரும் ஒன்றுசேர வைத்தான்!
கலக்கத்தை நீக்கினான் காண்.

மீண்டும் மகோதரன் மாயவித்தை செய்தேதான்
தோன்றினான் இந்திரன்போல் தான்.

முனிவர்கள் தேவர்கள் தோற்றத்தில் வந்தார்
அணியாக, பார்த்தார் திகைத்து.

அயன்கணையை அந்தநேரம் இந்திரசித் ஏவ
களத்தில் விழுந்தார் இறந்து.

எல்லோரும் செத்தனர் !வெற்றிமுரசறைந்தான்!
செய்திகேட்டு நின்றான் வேந்து.

ராமன் இறந்தானா? ராவணன் கேட்டதும்
ராமனுந்தான் என்றான் மகன்.

களத்தின் அலங்கோலம் கண்டே இராமன்
புலம்பினான்! விம்மினான் நொந்து.

தம்பி இலக்குவனைக் கட்டிப் பிடித்தேதான்
தன்னை மறந்தான் துயின்று.

 தேவர்கள் இத்துயரம் தங்களால் தானென்றே
 தேம்பத் தொடங்கினர் கண்டு.

இதைக்கண்டே தூதர்கள் ராவணனைப் பார்த்து
இறந்தான் இராமனென்றார் பார்.

அரக்கதூதர் சொல்லியதை நம்பி மகிழ்ந்தே
விழாவெடுக்கச் சொன்னான் களித்து.

ராமனும் லக்குவனும் அங்கே மடிந்துவிட்ட
கோலத்தைக் காட்டென்றான் வேந்து.

போர்க்களத்தைக் காண விமானத்தில்  சீதையை
ஏற்றித்தான் சென்றார் விரைந்து.

பார்த்ததும் சீதை கதறி மயங்கினாள்!
நீர்தெளிக்க வந்த துணர்வு.

திரிசடை சீதையிடம் மாயவேலை  இஃது!
தெளிவுகொள் என்றாள் பணிந்து.

 உணவெடுக்கச் சென்றிருந்த வீடணன் வந்தான்!
 மனம்நொந்து பார்த்தான் திகைத்து.

உயிருடன் யாரும் இருப்பாரோ என்றே
வெளிச்சத்தில் தேடினான் அங்கு.

அனுமன் புரளுகின்ற கோலத்தைக்  கண்டான்!
அனுமன்மேல் நீர்தெளித்தான் நின்று.

விழித்ததும் ராமன் நலந்தானா? என்றான்!
தெரிந்ததும்   தேர்ந்தான் துதித்து.

அயன்கணை- நிறைவு
சாம்பவான் எங்கே? அனுமனோ கேட்டதும்
சாம்பவானைத் தேடினார் அங்கு.

சாம்பவானைக் கண்டு நடந்ததைச் சொன்னார்கள்!

சாம்பவான் திட்டத்தைக் கேள்
அனுமனைப் பார்த்தான்! "உடனேநீ சென்று
குணப்படுத்தும் சஞ்சீவிக் குன்று
உள்ளது! மூலிகையைக் கொண்டுவந்து தந்துவிடு! 
நற்குணம் காண்பார் உடன்.

பாற்கடலை அன்றிங்கே தேவர் கடைந்தபோது
சேர்த்துவைத்தார் இக்குன்றில் தான்.

என்னிடத்தில் சொன்னார் முனிவர் அறிந்ததால்!
இம்மயக்கம் மாறிவிடும் பார்."

அனுமன் பெருவடிவம் கொண்டே பறந்தான்!
மனம்பதறத் தேடினான் அங்கு.

பலமலைகள் தாண்டி அனுமன்தான்  கண்டான்!
கலங்கினான் மூலிகைகள் கண்டு.

மூலிகையைத் தேடினால் காலமாகும் என்றேதான்
மூலிகைக் குன்றெடுத்தான் பார்.

தூக்கினான் குன்றை! பறந்தான் களம்நோக்கி!
ஊக்கத்தின் உச்சம் இது.

 விழித்தான்! துயரனைத்தும் தன்னால் தான்
என்றே வருந்தினான் அங்கு.
(தொடரும்)






Post a Comment

0 Comments