திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-39

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-39


குறள் 248
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

மாப்ள.. நம்மகிட்ட இருக்க பொருள் எதையாவது தொலைச்சிட்டோம்னு வைச்சுக்க.. எப்படியாவது அதை திருப்பி சம்பாதிச்சி நம்மால வசதியா இருக்க முடியும். 

ஆனா மாப்ள.. அருளை இழந்துட்டோம்னு வச்சுக்க, அது போனா போனது தான். உறுதியா அதை திருப்பிப் பெறவே முடியாது. 

குறள் 253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்.

மாப்ள.. போர்க் களத்துல இருக்கும்போது வெற்றி மட்டும் தான் மனசுல இருக்கும். எதிரியோட உசுரு பொயிருமேங்க இரக்கம் இருக்காது. 

அது மாதிரி தான் மாப்ள மிலிட்டரி ஓட்டல்ல சாப்பிடும்போது, சாப்பாட்டோட சுவை தான் மனசுக்கு தெரியும். அப்பம் அருள் எல்லாம் தோணாது மாப்ள..

குறள் 256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

மாப்ள.. கறி சாப்பிடணுங்கிறதுக்காக, எந்த உயிர்களையும் நம்ம ஆளுங்க கொல்லாமல் இருந்தாங்கன்னாலே போதும். பணத்துக்காக கறி விய்க்கவங்க ஊர்க்காட்ல இருக்க மாட்டாங்க மாப்ள. 

குறள் 260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

மாப்ள.. செலவங்க சாப்பாட்ல இறைச்சி சேக்காம இருப்பாவொ. அந்த சாப்பாட்டுக்காக, எந்த உயிரினத்தையும் கொல்ல மாட்டாவொ. அப்படிப் பட்டவொளை உயிரோட இருக்க எல்லா உயிர்களும், கும்பிட்டு வாழ்த்தும் மாப்ள. 

குறள் 263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம்.

மாப்ள.. எல்லாத்தியும் விட்டுட்டு போன துறவிகளுக்கு ஒதவணும்ங்கிறது

சரிதான். அதுக்காக நம்ம கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தையெல்லாம் மறந்துறக் கூடாது மாப்ள..(தொடரும்)



Post a Comment

Previous Post Next Post