Ticker

6/recent/ticker-posts

எனது கனவுகள்!


எனது கனவுகள் எண்ணிலடங்காதே
இதயத்தில் ஆசைகள் அடுக்கடுக்காய் பூக்குதே

மின்மினிகள் கையால் எடுத்திட ஆசையே
மிடுக்கான மாலையாக நானும் கோர்த்திடுவேனே

வானத்தில் சிறகுகள் விரித்திட ஆவலே
வாகாக இடமெல்லாம் பார்த்திடல் கூடுமே

வானவில்லை வீட்டில் வைத்திட ஆர்வமே
வாழ்க்கையை ரசித்தே சென்றிடத் தோன்றுமே

கனவுகள் நனவாக கண்கள் ஏங்குது
கலைந்திடாமல் கைகூடவே எண்ணமும் நாடுது


 


x

Post a Comment

0 Comments