சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-5

சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-5


நல்லதையே பேசுவோம்! நல்லாப் பேசுவோம்

பேச்சு  ஒரு கலை... உண்மைதான் சொல்லுக்கு உயிர் உண்டு. பேசத் தெரியும் ; வாய் இருக்கிறது என்பதற்காகக் கண்டதையும் பேசி மனங்களை இரணமாக்கிவிடக்கூடாது. இதமான சொற்களால் வாழ்க்கை வசந்தமாகும்... குடும்பம் மகிழ்ச்சியில் பொங்கும்... நம் பேராசான் கூறுவதைப்பாருங்கள்...

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின் (குறள்-96) என்பதன்மூலம், நன்மை தரும் இன்சொற்கள் இதமாகவிருப்பத்துடன் புரிந்து கூறுபவர்க்கு தீயவைகள் குறைந்துநன்மைகள் பெருகும் என்கிறார்.

இதற்கு சான்றுகள் பல கூறலாம்... பொதுவாக நம் குடும்பங்களிலேயே காணலாம். பல மனக் கசப்புகளுக்கு வார்த்தைகளே காரணம் ஆவதை... சின்னச் சின்ன ஆறுதலான சொற்கள் எவ்வளவு பெரிய மாற்றம் தரும் என்பது புரியும்.

குடும்பம் ஒரு கோவில் ஆவது நம் வார்த்தைகளால்தான் என்பதை உணர முடியும்.

ல்லா வீடுகளிலுமே கல்யாணம் ஆன புதுசுல, சமயம் கிடைக்கும் போதெல்லாம் மனைவிக்கு வாழ்த்துகள் என்ன? பரிசுகள் என்ன? ஏக தடபுடலாக வாழ்க்கை நகரும்... ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, ஏன் மறந்தும் கூட போய் இருக்கும். இது எல்லாவீடுகளிலும் மிக எளிதானஎதார்த்தம்.

பேராசை. இந்த அவாவைத் தாங்கி நிற்கும் (FUSE CARRIER ) இடம் தான் மனம். இந்த மனமேதத்தளிப்புகளுக்குக்காரணம்.

மனித வாழ்வின் அடிப்படைத்தத்துவம்அன்பு:அதன் வழியானஅருள் அருளுணர்வுடன் கூடிய இல்லறத்தில் துறவறம் , அதில் லயித்த தவம் : தவத்தின் வழியே மெய்யுணர்தல் எனப் படிப்படியாகப் பக்குவம் பெறுதல் "வறுத்தவிதை மீண்டும் முளைக்கும் ஆற்றலை இழப்பது போல் தவத்தால் வறுபட்டு 'அவா' என்னும் இணைப்பு உருகியை நீக்கி உயிர் ஆற்றலை பேராற்றலுடன், மூல ஆற்றலுடன், பிரபஞ்சத்துடன், அதாவது பேரா இயற்கையுடன் சேர்த்துவிடுவது. அதாவது Direct Connection இப்போது புரிகிறதா?.

இதைத்தான் நம்ஞானச்சித்தர்,"தவம் செய்க; ஆன்மவிசாரணை செய்க ; இயற்கையை உணர்க ; வேண்டுவதை நீங்களும் பெறுக என்கிறார். இயற்கையை உணர்வோம் : அதனோடு இணைவோம் : பேரின்பம்காண்போம். அனைவரும் நலம்பெற்று வாழ்வோம்.

(30.9.2021 அன்று கோவை வானொலியில் ஒலிபரப்பான சான்றோர் சிந்தனைப் பதிவு)   (தொடரும் )


Post a Comment

Previous Post Next Post