கமால் அதாதுர்க்-துருக்கியின் முன்னாள் அதிபர்.

கமால் அதாதுர்க்-துருக்கியின் முன்னாள் அதிபர்.

1924ஆம் ஆண்டு உஸ்மானிய கிலாஃபத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவர்.

1926ஆம் ஆண்டு துருக்கியில் ஷரீஅத்துடைய ஆட்சியை முழுமையாக ரத்து செய்தவர்.

ஹஜ், உம்ரா விசாவை ரத்து செய்தவர்.

அரபிமொழி கற்க தடை விதித்தவர். துருக்கி மொழியில் இருந்த அரபி எழுத்துக்களை அகற்றியவர்.

இஸ்தான்புல் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்லவும் தடை விதித்தார்.

துருக்கியில் ஹிஜாப் அணிய தடை விதித்தவர்.

தன்னுடைய பெயருக்கு முன்னால் இருந்த முஸ்தஃபா என்ற பெயர் பிடிக்கவில்லை என்று அறிவித்தவர்.

இரண்டு பெருநாட்களையும் கொண்டாடக் கூடாது என்று கூறியவர்.

வாரவிடுமுறை நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியவர்.

அல்லாஹ்மீது சத்தியம் செய்யக்கூடாது என்று கூறியவர்.

அவருக்கு அடிபணிய மறுத்த ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு மரண தண்டனை வழங்கியவர்.

பல பள்ளிவாசல்களை மூடியவர்.

உஸ்மான் (ரலி) அவர்களுடைய குடும்பத்தினரை துருக்கியில் இருந்தே விரட்டியவர்.

1923ஆம் ஆண்டு துருக்கி பாரளுமன்றத்தில் இப்படிக் கூறினார்: "நாம் இப்போது 20ஆம் நூற்றாண்டின் தொழில்துறை யுகத்தில் இருக்கிறோம்; எனவே அத்திப்பழம் குறித்தும் ஆலிவ் எண்ணெய் குறித்தும் பேசும் புத்தகத்தை (குர்ஆன்) பின்பற்ற வேண்டியத் தேவை இல்லை''.

இறுதியாக இப்படிக் கூறினார்: "நான் மரணித்தால் எனக்கு ஜனாஸா தொழுகை நடத்த வேண்டாம்''.

உலகம் எத்தனையோ அநீதிமிக்க ஆட்சியாளர்களைக் கண்டுள்ளது. இவனும் அவர்களில் ஒருவன்.

இவனுடைய மரணம் எப்படி இருந்தது தெரியுமா? மிகச் சிறிய சிவப்பு எறும்புகள் உடலை துளைத்தன. பல்வேறு மருத்துவர்கள் அருகில் இருந்தும் வேதனையால் தொடர்ந்து அலறினான், கத்தினான். இவனது அலறல் சப்தம் பொறுக்காமல் (1938 ல்) துருக்கியில் இருந்து தொலைதூரத் தீவுக்கு அவனை கொண்டு சென்றனர்.

சிறப்பு மருத்துவர்களை அழைத்து வர முயன்றபோது வேண்டாம் என்று மறுத்து, ஒரு ஷூ வேண்டும் என்று கேட்டு வாங்கி, அவன் தலையில் அவனே ஓங்கி அடித்துக்கொண்டே இருந்தான்.

அந்த வேதனையிலேயே  இறந்தான். அவனை அடக்கம் செய்த தினத்தில் மூன்று முறை பூமி பலமாகக் குலுங்கியது.

அவன் இறந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவனது உடலைத் தாக்கிய நோய்க்கான மருந்து; அத்தி மரப்பட்டையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

(எந்த மரத்தைக் கிண்டல் செய்தானோ அந்த மரத்திலிருந்து. ஸுப்ஹானல்லாஹ்!)

இவனல்ல; இவனைவிடக் கொடிய கொடுங்கோலர்களை இந்த உலகம் சந்தித்துள்ளது. ஆயினும் என்ன.. இஸ்லாம் இன்னும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது. காரணம், இது இறை மார்க்கம்.

(எனில், புழுக்களையும் பூச்சிகளையும் கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும்..?)

இறைவன் கூறுகின்றான்: "எந்த மக்கள் இவர்களைவிட பன்மடங்கு வலிமை மிக்கவர்களாய் இருந்தார்களோ அவர்களை நாம் அழித்துவிட்டோம். முன்பு வாழ்ந்த சமூகங்களின் முன்னுதாரணங்கள் சென்றுவிட்டன'' (43:8) 



Post a Comment

Previous Post Next Post