முந்தானையில் முடிஞ்சவளே!

முந்தானையில் முடிஞ்சவளே!


முப்பத்தோர் ஆண்டாச்சு.
முன் பல்லும் கொட்டியாச்சு.
தலையும் நரச்சாச்சு.
உடலும் தளர்ந்தாச்சு.

இளமை மறஞ்சாச்சு. 
முதுமை முழுமையாச்சு. 
ஆனாலும் 
காதல் இனிமையாச்சு
கை புடிச்ச உமக்கு
நானே உலகமாச்சு

பாட்டி தாத்தாவாகப் போயாச்சு
பக்கவாட்டில் உறக்கமும்
பாதை மாறிப் போச்சு
பேரன் பேத்தியோடு
காலம் கழிக்கும் நாளாச்சு
இருந்தும் நீ  பரிமாறும் உணவே 
தான் எனக்குத் தேவாமுதமாச்சு

உனது  இளமை 
அழகில் என் மனம் விட்டேன் 
இருவது வயதில் 
உன்  கரம் தொட்டேன் 
மூத்தோர் வாழ்த்த இளையோர்
பார்க்க மூன்று முடிச்சிட்டேன் 
அன்றிருந்து இன்று வரை 
உமது முந்தானைக்குள் 
அடங்கி விட்டேன் 

அன்பாலும் அரவணைப்பாலும்
காதலாலும் கவனிப்பாலும் 
பரிவோடும் பிரியத்தோடும் 
எனைப் பார்க்கும் துணைவியரே
உமக்கு முன் நான் இறக்க வேண்டும்
என்று வரம் கேட்பேனடி 
என்னை முந்தானையில் முடிந்தவளே


Post a Comment

Previous Post Next Post