அவளதில்கார மொழிகள்

அவளதில்கார மொழிகள்


ஒரு புன்னகையில்
சிறு மயிலிறகு வருடி
காற்றோடு பற்றி வந்த
பஞ்சு பட்டினைப் போல
உன்
இதழ் குவித்து ஊதிவிட
உலகம் விழ ஆனேனடி
சிரித்து விடாதே
இதயம் சிலாகித்து
பிறகு மரணிக்கிறது.....!

இலக்கணம் இல்லாத
எனது கவிதைக்கு
உயிரும் நீ
மெய்யும் நீ
உயிர்மெய் ஆனோம் நாம்....!

இருளோடு பரிதவிக்கும் பொழுதெல்லாம்
பக்கம் நீ வந்துவிடுகிறாய்....
பைத்தியக்காரனாய்
அலைகிறேன் 
மேகங்களின் விரிலிடுக்கில்
சிறு இருளாய்.....
இப்போது யார் பரிதவிப்பது உன்னில்.....!

நீ நடக்கும் வழியெல்லாம்
என்னை ஈர்த்து செல்கிறது
உன் கொலுசொலி
பாதை மறந்து காதை தொடர்கிறது....

உனது வருகை மழையாகிப் போனாலும்
சிறு இடி அவ்வப்போது உனது 
அனைப்புகளாக வைத்தியம் 
செய்கின்றது காதல் நோவாய்....!

காதோர முடியில்
பல காதைகள் ஒழிந்திருக்க
சிறு ஒதுக்கலில் 
இடைவேளை கொடுத்துவிடுகிறாய்
இராமன் இராவணன் ஆனான்
இராவணன் இராமன்னானான்....!

உன் பார்வைகொடு
என்
காதல் தருகிறேன்
உன் நிழல் கொடு
என் உயிரைத் தருகிறேன்
கனவை மட்டும் கொடுத்திராதே
என் மொத்தமும் அதனுள் 
நீயாய் நுழைகிறேன்.....!

சிறு புள்ளிதானே என்று கூறி 
சிறு முகச்சுழிப்பில் அழகு பெறுகிறது 
உன் முகம் பற்றிய மூக்குத்தி இறுக்கங்கள்......!

கைத்தேர்ந்த சிற்பியின் திறமைக்கு இது 
மிகவும் கடினம் தான்
என்னவளின் கை நழவி விழுந்த 
வளையாபதியை மீண்டும் கோர்க்க.....

கடலை விலைக்கு வாங்க செல்கிறேன்
அலையில் கால் நனைத்து 
உனதாக்கிக் கொள்கிறாய் 
மொத்தமாய்.......
நண்டுகள் தான் பாவம் 
அங்கும் இங்கும் 
அலைமோதி களைகின்றன...
என்னைப்போல்.....!


Post a Comment

Previous Post Next Post