திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-41

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-41


குறள் 297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.

எதாவது செய்யக் கூடாததை செய்யாம இருந்தாலும் நமக்கு நன்மை வரும் மாப்ள.,. 

ஆனா பொய் சொல்லாம நம்ம வாழ்க்கையை ஓட்டுனோம்னு வச்சுக்க மாப்ள. அப்பம் இதை விட பெருசா நமக்கு நன்மை வரும்.

குறள் 298
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

மாப்ள.. நம்ம ஒடம்பை தூய்மையா வச்சுக்கிடணும்னா, மேல இருக்க அழுக்கை தண்ணியை வச்சு தொடச்சிறலாம். 

மனசை தூய்மையா வச்சுக்கிடணும்னா, நம்மோட சொல், செயல்னு எல்லாத்திலியும் வாய்மை இருக்கணும் மாப்ள. 

குறள் 299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

மாப்ள.. வெளிய இருக்க இருட்டுல வெளிச்சம் தெரியணும்ங்கதுக்காக, நாம ஏத்துத வெளக்கெல்லாம் வெளக்கே இல்லை. 

மனசுக்குள்ள இருக்க அறியாமைங்க இருட்டை விரட்டதுக்கு ஏத்துத பொய் சொல்லாமை ங்குற வெளக்குதான் மாப்ள ஒருத்தரை உயர்ந்தவர்னு காட்டுத உண்மையான ஒளி விளக்கு. 

குறள் 301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா லென்

கோவப் பட்டா வேணுங்கதை சாதிக்கலாம்னு தெரிஞ்சா, அந்த எடத்துல கோவத்தை கட்டுப் படுத்தணும். எவ்வளவு தான் கோவப் பட்டாலும்,  ஒண்ணும் நடக்காதுங்கிற எடத்தில கோவத்தை கட்டுப் படுத்தினா என்ன? கட்டுப் படுத்தாம இருந்தாத் தான் என்ன? 

குறள் 302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

மாப்ள.. நம்மை விட பலசாலிகிட்ட கோவத்தை காட்டுதது நமக்கு கெடுதல் செய்யும். 

நம்மைவிட நோஞ்சாங்கிட்ட போய் கோவத்தை காட்டுதது ரொம்ப கொடுதல் செய்யும் மாப்ள.
(தொடரும்)


Post a Comment

Previous Post Next Post