கவிஞர்.பாரியன்பன் நாகராஜன் - கவிதைகள்

கவிஞர்.பாரியன்பன் நாகராஜன் - கவிதைகள்


பாதையற்ற இலக்குகளும்
குறிக்கோளற்ற இலட்சியங்களும் 
முழுமையடைவதில்லை

வீட்டில் மரணவோலம்
வாய்விட்டுச் சிரிக்கிறது 
குழந்தைகள்

காயம்பட்ட
கல்
கடவுளாகிறது

அமரரான பின்னரும் 
தகுதிக்குத் தக்க 
மரியாதையுண்டு

என்னை 
புதைத்தால் விதையாவேன் 
எரித்தால் சுடராவேன்.

மரங்கள் நடு
வேண்டும் போது 
பொழியும் ஆகாயம்

மண்ணில் மரங்களிருக்க
ஆடையணிந்து கொள்ளும்
ஆகாயம்.


Post a Comment

Previous Post Next Post